No menu items!

சாய் பல்லவி – இமெயில் டென்ஷன்

சாய் பல்லவி – இமெயில் டென்ஷன்

இன்றைய தலைமுறை நடிகைகளில், நடிக்கத் தெரிந்த ஒரு சில நடிகைகளில் சாய் பல்லவி தனித்து நிற்கிறார்.

இதனாலோ என்னவோ கதை கேட்பது, பத்திரிகையாளர்களிடம் பேசுவது என அவரது சினிமா கேரியர் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் தனித்தே இருக்கிறார்.

அமெரிக்க அதிபரைக் கூட கஷ்டப்பட்டாவது தொடர்பு கொண்டு விடலாம். ஆனால் சாய் பல்லவியை தொடர்பு கொள்வது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் ஏகப்பட்ட புகார்கள்.

கதை சொல்ல இயக்குநர்கள் யாராவது முன்வந்தால், அதிலும் சில நடைமுறைகள் இருக்கின்றனவாம். அறிமுக இயக்குநர்கள் என்றால், முதலில் சாய் பல்லவியின் மேலாளரை தொடர்பு கொள்ள வேண்டும். தயாரிப்பாளர் யார், அதற்கு முன் என்னென்ன படங்கள் எடுத்திருக்கிறார், அவையெல்லாம் ரிலீஸ் ஆகிவிட்டதா என்று அவர் ஃபில்டர் பண்ணுவார். அதில் தேறியவர்களுக்கு ஒரு இமெயில் ஐடி கொடுக்கப்படும். அந்த இமெயிலுக்கு கதையை அனுப்ப வேண்டும். அந்த இமெயில் ஐடி சாய் பல்லவியின் தங்கையின் இமெயில் ஐடி.

சாய் பல்லவியின் தங்கைக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போதுதான் அந்த மெயிலை திறந்துப் பார்ப்பார். அது ஆறு நாட்கள் ஆகலாம். இல்லை ஆறு மாதங்கள் கூட ஆகலாம். அதுவரையில் கதை சொல்ல விரும்பும் இயக்குநர் இந்தியன் ரயில்வேயின் ஆர்.ஏ.சி.யில் பட்டியலில் இருப்பவர்களைப் போல காத்திருக்க வேண்டும்.

அப்படியும் கதை ஒகே என்றால் மட்டும் சொல்லி அனுப்பபடும். பிறகு சாய் பல்லவியை தொடர்பு கொள்ள ஒரு மொபைல் எண் கொடுக்கப்படும். அந்த மொபைல் எண்ணிற்கு அழைத்தால், ஒரு பெண்மணி யெஸ் என்று பேச்சை ஆரம்பிப்பார். அந்த பெண்மணி சாய் பல்லவியின் அம்மா.
இப்படி அம்மா, தங்கை என பல அடுக்குகளைத் தாண்டியே சாய் பல்லவியை கமிட் செய்யவேண்டுமென்பதால் ஹீரோயின் தொடர்பான கதைகளை வைத்திருக்கும் பல அறிமுக இயக்குநர்கள் கதறுகிறார்கள்.

ஹைதராபாத்திற்கு செல்லும் ரஜினி!

ரஜினி ’ஜெயிலர்’ படத்தின் ஷூட்டிங்கிற்காக காத்திருக்கிறார். ஆகஸ்ட்டில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஷூட்டிங் கொஞ்சம் தள்ளிப் போகலாம். செப்டெம்பரில் தொடங்கலாம் என தயாரிப்பு நிறுவனம் தரப்பிலிருந்து சொல்லப்பட்டிருக்கிறதாம். அதுவரையில் சென்னையில் ஒய்வு என்பதால் மிகவும் ரிலாக்ஸாக இருக்கிறார்.

மறுபக்கம் ஹைதராபாத்தில் ‘ஜெயிலர்’ படத்திற்கான செட் வேலைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த செட்களில்தான் மூன்று ஷெட்யூல்கள் ஷூட் செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறதாம்.

ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளில் பெரும்பாலானவை இங்கு எடுக்கப்பட இருப்பதால், செட் வேலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இருபது நாட்கள் தொடர்ந்து ஷூட் செய்யும் சூழல் வந்தால், ரஜினியைப் பாதுகாப்பாக வைத்து கொண்டு, அவருக்கு செளகரியமான வகையில், தொந்தரவு இல்லாமல் ஷூட் செய்ய வேண்டுமென கண்டிப்பான உத்தரவாம்.

இதனால் செட்டை மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறது ‘ஜெயிலர்’ படக்குழு.

இயக்குநர் பாலா செய்த செட்டில்மெண்ட்

தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த இயக்குநர் பாலா, இப்போது எந்த இடமும் இல்லாமல் தனித்து இருக்கிறாராம்.

தனது உறவுப் பெண்ணை கரம்பிடித்த பாலா தற்போது திருமண உறவிலிருந்து முற்றிலும் விடுப்பட்டு இருக்கிறார்.

திருமண முறிவுக்கு ஈடு செய்யும் விதமாக தனது மனைவிக்கு செட்டில்மெண்ட் செய்திருக்கிறாராம். செட்டில்மெண்ட்களில் முக்கியமான ஒன்று, தனது சம்பாத்தியத்தில் முதலாவதாக வாங்கிய அந்த ஃப்ளாட். இதை தனது பெயரில் வாங்கியிருந்த பாலா, செட்டில்மெண்ட் செய்யும் போது அதை தனது மனைவிக்கு கொடுத்துவிட்டாராம்.

இந்த செட்டில்மெண்ட்டுக்கு முன்பு, அந்த ஃப்ளாட்டை விற்கலாம் என பாலா திட்டமிட்டு இருந்ததால், அந்த ஃப்ளாட்டை வாங்குவதற்கு ரியல் எஸ்டேட் ஆட்கள் பலபேர் அணுகியிருக்கிறார்கள். ஆனால் தற்போதைய செட்டில்மெண்ட் விவரம் அறியாமல், பலர் இன்றும் அந்த ஃப்ளாட்டை வாங்க தொடர்ந்து விசாரித்து வருகிறார்களாம். இப்போதும் தொடரும் ரியல் எஸ்டேட் ஆசாமிகளின் போன் அழைப்புகளினால் பாலா தரப்பு டென்ஷனில் இருக்கிறதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...