’காந்தாரா’ படம் வெளியாகி இந்தியாவே கொண்டாடி கொண்டிருக்க, ராஷ்மிகா மந்தானாவிடம் ‘நீங்கள் காந்தாரா’ பார்த்துவிட்டீர்களா’ என்று கேட்க, ‘நான் பார்க்கவில்லை’ என்று ராஷ்மிகா சொன்னார்.
அவ்வளவுதான் உடனே கன்னட சினிமாவில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கன்னட சினிமா ரசிகர்கள் கொந்தளித்துவிட்டார்கள். இந்தியாவே கொண்டாடும் கன்னடப் படத்தை ஒரு கன்னட நடிகை பார்க்கவில்லை என்று கமெண்ட் அடிப்பதா என பிரச்சினையானது.
இந்த பிரச்சினை பெரிதாகி கொண்டே போகையில், ராஷ்மிகா நடித்திருக்கும் ஹிந்திப்படத்தின் ப்ரமோஷனுக்காக ஒரு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் தனது சினிமா பயணம் குறித்து ராஷ்மிகா கூறுகையில், அவரை ‘கிர்க் பார்ட்டி’ படம் மூலம் முதன் முதலாக அறிமுகப்படுத்திய தயாரிப்பு நிறுவனத்தின் பெயரையோ, அல்லது அறிமுகப்படுத்தியவர் பெயரையோ குறிப்பிடாமல் ‘ஒரு சினிமா கம்பெனி’ என்கிற ரீதியில் பேசியிருந்தார்.
ராஷ்மிகா வேண்டுமென்றே கன்னட சினிமாவையும், தன்னை அறிமுகப்படுத்தியவர்களையும் புறக்கணிக்கிறார் என்று கன்னட சினிமா ரசிகர்களிடையே அதிகம் விவாதிக்கப்பட்டது.
இதற்கிடையில் காந்தாரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் நாயகனும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்தார். ஒரு பேட்டியில், ’ராஷ்மிகா உடன் இணைந்து படம் நடிக்க வாய்ப்பிருக்கிறதா’ என்று கேட்டதற்கு, ‘அந்த மாதிரி’ நடிகைகளுடன் சேர்ந்து படம் பண்ண வாய்ப்பில்லை. சமந்தா, சாய் பல்லவியுடன் சேர்ந்து படம் பண்ணதான் ஆசை’ என்று ராஷ்மிகாவை மறைமுகமாக தாக்கியிருந்தார் ரிஷப் ஷெட்டி.
ரிஷப் ஷெட்டி ராஷ்மிகா மறைமுகமாக தாக்கியதற்கு பின்னணியில் ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கிறது.
‘கிர்க் பார்ட்டி’ படத்தின் ஹீரோ ரக்ஷித் ஷெட்டி. இந்தப் படத்தில் நடித்த போதுதான் ரக்ஷித் ஷெட்டிக்கும், ராஷ்மிகா மந்தானாவுக்கு இடையே காதல் பற்றிக்கொண்டது. அந்த காதல் திருமணத்திற்கான நிச்சயத்தார்த்தம் வரை சென்றது.
இதற்கிடையில் தெலுங்குப் படங்களில் நடிக்க ராஷ்மிகாவுக்கு வாய்ப்புகள் வந்தது. அவர் நடித்த ‘கீதா கோவிந்தம்’ பெரிய ஹிட். அடுத்தடுத்து தெலுங்கில் வாய்ப்புகள் குவிய, ராஷ்மிகாவுக்கும் ரக்ஷித் ஷெட்டிக்கும் இடையே இடைவெளி உண்டானது. அவர்களுக்கு நடந்த என்கேஜ்மெண்ட் கூட கேன்சல் என்று இருவரும் வெளிப்படையாக அறிவித்துவிட்டு, பிரிந்து விட்டார்கள்.
ரிஷப் ஷெட்டியும், ராஷ்மிகாவை அறிமுகப்படுத்திய ரக்ஷித் ஷெட்டியும் நல்ல நண்பர்கள் என்பதால் இப்படியொரு பதிலை ரிஷப் ஷெட்டி கூறியதாக பேச்சு அடிப்பட்டது.
இதையெல்லாம் வைத்து கன்னட சினிமாவில் ராஷ்மிகா இனி நடிக்க முடியாத வகையில் அவர் மீது தடை விதிக்கப்படும் என்ற முணுமுணுப்பு எழுந்தது.
இந்த சூழ்நிலையில் ராஷ்மிகா புஷ்பா படத்தின் ப்ரமோஷனுக்காக சென்றிருந்தார். திரும்பி வந்தவரிடம், ’கன்னடப் படங்கலில் நீங்கள் நடிக்க முடியாத வகையில் உங்கள் மீது தடை போடப்பட்டிருக்கிறதாமே’ என்று மீடியா சார்ப்பில் கேட்கப்பட்டது.