No menu items!

கோயில் கோயிலாக சுற்றும் பூஜா ஹெக்டே

கோயில் கோயிலாக சுற்றும் பூஜா ஹெக்டே

உச்சத்தில் இருக்கும் போது கொஞ்சம் மிஸ் ஆனாலும் மிச்சம் பாதாளம்தான் என்பதற்கு மிகச்சரியான உதாரணம் பூஜா ஹெக்டே.

அடுத்தடுத்து வெற்றிப்படங்கள். பெரிய கமர்ஷியல் ஹீரோக்களுக்கு ஜோடி. அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்று உச்சத்தில் இருந்த பூஜா ஹெக்டே கொஞ்சம் கூட இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்.

கடந்த வருடத்தில் இவர் நடித்து வெளியான படங்கள் எல்லாமே விமர்சன ரீதியாக கலவையான படங்களாகவும், வசூல் ரீதியாக சுமாரான படங்களாகவும் போய்விட்டன.

சரி எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்துவிடலாம் என்று நினைத்த ஹிந்திப்படமும் சொதப்பலாகிவிட்டது. அடுத்து காலில் வேறு அடி விழுந்து விட்டது. இப்படி ப்ளாப், அடி, கட்டாய் ஒய்வு என என மாறி மாறி பிரச்சினைகள் எழுந்ததால் ரொம்பவே ஆடிப்போய் இருக்கிறாராம்.

இதனால் நாம் நினைப்பது போலவே பூஜா ஹெக்டே ஒரு ஜோதிடரைப் போய் பார்த்திருக்கிறாராம். அவரும் தன் பங்கிற்கு, ’உனக்கு நேரம் சரியில்லம்மா. ஒரே வழி துர்கா அம்மனை வழிப்படு. பூஜை செய். கொஞ்சம் கொஞ்சமாக பலன் கிடைக்கும்’ என்று சொல்லியிருக்கிறார்.

அதோடு ஒரு பட்டியலையுக் கொடுத்திருக்கிறாராம். அதில் பூஜா போக வேண்டிய கோயில்களின் பெயர்கள் நீள்கிறதாம்.

இப்பொழுது பூஜா ஹெக்டே தனது அம்மாவுடன் கோயில் கோயிலாக செல்ல ஆரம்பித்திருக்கிறாராம். ஷூட்டிங் எதுவுமில்லாததால் ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா என நேர்த்திக்கடனை தீர்க்க ரவுண்ட் அடித்து கொண்டிருக்கிறாராம்.


பாக்ஸ் ஆபீஸ் நெருக்கடியில் ரஜினிகாந்த்

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த்தான்.

ஆனால் இன்று பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனில் ரஜினியையும் ஒவர்டேக் செய்திருக்கிறார்கள் இப்போதுள்ள அடுத்த தலைமுறை நடிகர்கள்.

இதனால்தான் சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது பேசுப்பொருளாகி இருக்கிறது.

பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் கடைசியாக ப்ளாப் கொடுத்திருந்தார் ரஜினி. இந்த பட்டியலில் ரஜினியுடன் இருந்தவர்கள் தெலுங்கு சினிமாவின் ’மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி, ஹிந்தி சினிமாவின் ’பாக்ஸ் ஆபீஸ் பாட்ஷா’ ஷாரூக்கான்

ஆனால் இந்த 2023-ம் வருடம் இவர்கள் இருவருக்கும் சரியான தொடக்கமாக அமைந்திருக்கிறது.

நான்கு ஆண்டுகளாக ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ஷாரூக்கானுக்கு ‘பதான்’ மிகப்பெரிய ஹிட்டாகி இருக்கிறது. பாலிவுட்டில் முதல் நாளில் அதிக கலெக்‌ஷனை கொடுத்த படம் ‘பதான்’ என்ற பெருமையை ஷாரூக்கானுக்குப் பெற்றுகொடுத்திருக்கிறது. இப்படம் இன்னும் பல ரிக்கார்ட்களை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் ‘ஆச்சார்யா’ என்ற பெரும் தோல்விப்பட த்தைக் கொடுத்திருக்கும் சிரஞ்சீவிக்கு ‘வால்டர் வீரய்யா’ சூப்பர் கலெக்‌ஷனை கொடுத்திருக்கிறது. இப்படத்தில் சிரஞ்சீவியின் ஆட்டம் பாட்டம் எல்லாம் அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருப்பதால், மெகா ஸ்டார் உற்சாகத்தில் இருக்கிறார்.
இப்படி சீனியர்கள் இருவர் மெகா ஹிட்களுடன் 2023-ம் ஆண்டை ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் இப்பொழுது விமர்சகர்கள் அனைவரது கவனமும் ரஜினி மீது விழுந்திருக்கிறது.

ரஜினியின் ‘ஜெயிலர்’ இந்த இருப்படங்களின் கலெக்‌ஷனை ஓரங்கட்டுமா, ரஜினி மீண்டு வருவாரா என்ற இரு கேள்விகள் இப்பொழுது உலாவர ஆரம்பித்திருக்கின்றன.


கன்னம், மூக்கில் பலத்த காயமடைந்த விஜய் ஆண்டனி.

தமிழ் சினிமா நடிகர்களில் கொஞ்சம் வித்தியாசமானவர் விஜய் ஆண்டனி.
கல்லூரி படிக்கும் போதிருந்தே நடிகராக வரவேண்டுமென்பதுதான் இவரது ஆசை. ஆனால் இசையும் இவரோடு இணைந்து பயணித்ததால், இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தனக்கென்று ஒரு ரசிகர்கள் உருவான பிறகு, நடிகராக களமிறங்கினார். தனக்கு எது செட்டாகுமோ அந்த மாதிரியான கதைகளைப் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்தார். இதனால் இவரால் நடிகராகவும் தாக்குப்பிடிக்க முடிந்தது.

இசை, நடிப்பு அதன்பிறகு இயக்கம் என்று அடுத்தக்கட்டத்திற்கு நகர ஆரம்பிக்க விரும்பிய விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன்’ படத்தின் இரண்டாவது பாகத்தை தானே இயக்கி நடித்தார்.

மலேஷியாவில் ஷூட்டிங் நடந்த போது, எதிர்பாராமல் நடந்த விபத்தில் விஜய் ஆண்டனி பலத்த காயமடைந்தார். காரணம் அந்த ஆக்‌ஷன் காட்சியில் டூப் வேண்டாம். நானே நடிக்கிறேன் என்று உற்சாகமாக நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. விபத்து பெரியளவில் ஏற்பட்டதால் அவரை உடனடியாக சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார்கள். ஆனாலும் அவருக்கு என்ன காயம், அவர் உடல்நிலை எப்படியிருக்கிறது என்பது பற்றி எந்த தகவல்களும் வெளிவரவில்லை.

இந்நிலையில், விஜய் ஆண்டனிக்கு விபத்தில் லேசான காயம் இல்லை. கொஞ்சம் சீரியஸான அளவிற்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பது என்கிறார்கள். அதுவும் அவரது முகத்தில்தான் பலமான அடி விழுந்திருக்கிறது. குறிப்பாக மூக்கு மற்றும் கன்னத்தில் பெரிய காயம் ஏற்பட்டிருப்பதால், அறுவைச் சிகிச்சைகளை உடனடியாக செய்திருக்கிறது மருத்துவர்கள் குழு. இந்த அறுவைச்சிகிச்சை பல மணி நேரம் நடந்த ஒரு பெரும் அறுவைச்சிகிச்சை என்கிறார்கள். இதன் பலன் இப்பொழுது நன்றாக தெரிய ஆரம்பித்திருக்கிறதாம். இன்னும் மூன்று வாரங்கள் ஓய்வுக்குப் பிறகு விஜய் ஆண்டனி வழக்கம் போல பணிகளை ஆரம்பிக்கலாம் என்று மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்திருக்கிறதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...