No menu items!

நெய்மருக்கு காய்ச்சல்

நெய்மருக்கு காய்ச்சல்

முதல் போட்டியின்போது காயம்பட்ட நெய்மர் எப்போது மீண்டும் ஆட வருவார் என்பதுதான் பிரேசில் ரசிகார்களின் கேள்வியாக இருக்கிறது. நெய்மர் இல்லாத நிலையில் சுவிட்சர்லாந்து அணியை வெல்ல பிரேசில் கடுமையாக போராடியது. நெய்மர் இருந்திருந்தால் இத்தனை போராட்டம் தேவைப்பட்டிருக்காது என்பது ரசிகர்களின் கருத்து.

இந்த நிலையில் ஏற்கெனவே காயம்பட்டுள்ள நெய்மர் நேற்று காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டதாகவும் அதனால் ஓட்டல் அறையில் இருந்து அவர் ஸ்டேடியத்துக்கு வரவில்லை என்றும் கூறியுள்ளார் அவரது சக வீரரான வின்சியஸ் ஜூனியர். இரண்டாவது சுற்றுப் போட்டிகளுக்கு முன் அவர் குணமடைவார் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவரது இந்த நம்பிக்கை பலித்து இரண்டாவது சுற்றுக்குள் முழுமையாக மீண்டுவர வேண்டுமே என்று கடவுளை வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள் பிரேசில் ரசிகர்கள்.


வீரர்களை மிரட்டிய ஈரான் அரசு

உலகக் கோப்பை போட்டியின்போது ஈரானிய வீரர்கள் தேசிய கீதம் பாட மறுத்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஹிஜாப்புக்கு எதிராக போராடும் பெண்களுக்கு ஆதரவு தெரிவித்து ஈரானிய வீரர்கள் இந்த செயலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வீரர்களின் இந்த செயலுக்கான எதிர் நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறது ஈரானிய அரசு.

முதல் கட்டமாக தேசிய கீதம் பாடாத வீரர்களின் குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்துள்ளது ஈரானிய அரசு. ”ஹிஜாப்புக்கு எதிரான போராட்டக் களமாக உலகக் கோப்பையை பயன்படுத்தினால் வீரர்கள் கைது செய்யப்படுவதுடன் சித்திரவதையும் செய்யப்படுவார்கள்” என்று அவர்களின் குடும்பத்தினரிடம் ஈரானிய அரசு எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த போட்டிகளில் தேசிய கீதம் பாட மறுத்தால் வீரர்களின் குடும்பத்தினரையும் சித்திரவதை செய்வோம் என்று ஈரானிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதாம். இது தொடர்பாக ஈரானிய வீரர்களுடன் அந்நாட்டு ராணுவத்துடன் பேசியிருக்கிறார்கள்.

அரசுடன் மோதல் ஏற்பட்டு அவர்களால் எச்சரிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், உலகக் கோப்பை முடிந்ததும் ஈரான் வீரர்கள் மீண்டும் தங்கள் நாட்டுக்கு செல்வார்களா அல்லது வேறு ஏதாவது நாட்டில் அடைக்கலம் கோருவார்களா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.


உலகக் கோப்பையும் இந்தோனேசியாவும்

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தோனேசிய அணி இடம்பெறவில்லை. இருந்தபோதிலும் இந்த உலகக் கோப்பையில் தங்கள் பங்களிப்பும் இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறார்கள் இந்தோனேசிய மக்கள். இந்த உலகக் கோப்பையில் பயன்படுத்தும் கால்பந்துகள் இந்தோனேசியாவில் தயாரிக்கப்பட்டவை என்பதே அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம்.

கத்தார் 2022-ல் பயன்படுத்தப்படும் அதிகாரபூர்வ பந்தான அல் ரிஹ்லா, இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. உலகக் கோப்பையில் இதுவரை பயன்படுத்தப்பட்ட பந்துகளிலேயே அதிக வேகமாகவும் துல்லியமாகவும் செல்லும் ஆற்றல் வாய்ந்த பந்துகள் இவை என்று எல்லோராலும் கொண்டாடப்படுகிறது. கிழக்கு ஜாவாவில் உள்ள மீடியன் ரீஜெசி என்ற நிறுவனத்தில் பணிபுரியும் 2 ஆயிரம் ஊழியர்கள் இந்த பந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

2020-ம் ஆண்டுமுதல் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் இதுவரை பல்வேறு சர்வதேச போட்டிகளுக்கு கால்பந்துகளை தயாரித்து கொடுத்துள்ளது. உலகக் கோப்பையைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்த வகை பந்துக்கு ஆர்டர்கள் வந்து குவிகிறதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...