ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இன்று குதிரையேற்றத்தில் தங்கப் பதக்கத்தை வென்றது. இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பெற்ற 3-வது தங்கமாகும் இது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோங் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் குதிரையேற்ற விளையாட்டில் டிரஸ்ஸாஜ் அணிப் பிரிவில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்த்து. திவ்யகிர்தி சிங், சுதீப்தி ஹஜிலா, ஹிருதய் விபுல் சத்தா மற்றும் அனுஷ் அகர்வாலா ஆகியோர் அடங்கிய இந்திய அணி இந்த தங்கப்பதக்கத்தை வென்றது.
1982-ம் ஆண்டில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு பிரகு, இப்பிரிவில் இந்தியா இப்போது முதல் முறையாக தங்கம் வென்றுள்ளது.
காவிரி கர்நாடகத்தின் சொத்து – கே.எல்.ராகுல் கருத்து
காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநிலத்துக்கு ஆதரவாக கிரிக்கெட் வீர்ர் கே.எல்.ராகுல் கருத்து தெரிவித்துள்ளார்.
காவிரி நீரை தமிழகத்துக்கு விட எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை பந்த் நடைபெற்றது. இந்நிலையில் பந்த்துக்கு ஆதரவாக அம்மாநிலத்தைச் சேர்ந்த பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீர்ரான கே.எல்.ராகுலும் இப்பிரச்சினையில் கர்நாடக மாநிலத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ தளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள பதிவில், “காவிரி எப்போதும் நமதே (கர்நாடகம்), காவிரி கர்நாடகத்தில் உற்பத்தியாகி அதிகளவு தண்ணீர் இங்கு குவிகிறது. ஆனால் அந்த தண்ணீரை பயன்படுத்த ஒவ்வொரு ஆண்டும் கன்னடர்கள் சட்ட போராட்டத்துடன் வீதியில் இறங்கி போராட வேண்டியுள்ளது. இதுதான் எங்களின் சோகம். காவிரி முழு கர்நாடகத்தின் சொத்து’ என குறிப்பிட்டுள்ளார்.
ஆவின் பால் விலை உயர்த்தப்படாது: அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்
ஆவின் பால் விலை உயர்த்தப்படாது என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மனோ தங்கராஜ், “”தமிழ்நாட்டில் பால் விலையை இப்போதைக்கு உயர்த்துவதற்கு எந்த முயற்சிகளிலும் நாங்கள் ஈடுபடவில்லை. ஆவின் பால் விலை உயர்த்தப்படும் என்பது கற்பனை. இதுகுறித்து தவறான செய்தி பரவி வருகிறது. சந்தையில் உள்ள பல்வேறு நிறுவன பாலுடன் ஒப்பிடும் போது ஆவின் பாலின் விலை குறைவு. சந்தையில் தனியார் நிறுவன நெய் ரூ.1000 வரை விற்கப்படுகிறது. ஆனால் ஆவின் நெய் ரூ.700க்கு விற்கப்படுகிறது. ஆவின் பொருட்களின் அளவிலும் தரத்திலும் எந்த சமரசமும் நாங்கள் செய்யவில்லை. புகார்களை ஆய்வுசெய்து சரிசெய்து வருகிறோம்” என்றார்.
ஆதித்யா எல்1 விண்கலத்தின் சுற்றுப்பாதை அதிகரிப்பு
ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி வட்டப் பாதை 5ஆவது முறையாக இன்று அதிகாலை உயர்த்தப்பட்டது.சூரியனை ஆய்வு செய்வதற்காக கடந்த 2-ஆம் தேதி ஆதித்யா-எல் 1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. பிஎஸ்எல்வி ராக்கெட்டில் இருந்து சரியாக 648 கி.மீ உயரத்தில் பிரிக்கப்பட்டு, புவியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இதனையடுத்து, ஆதித்யா-எல்1 விண்கலம் தனது இலக்கை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியது.செப்டம்பர் 3, 5, 10 மற்றும் 15 ஆகிய தேதிகளில் 4 முறை சுற்றுவட்ட பாதை உயர்த்தப்பட்டது. குறைந்தபட்சம் 256 கிலோ மீட்டர் தொலைவும் அதிகப்பட்சம் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 973 கிலோ மீட்டர் தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் ஆதித்யா பயணித்து வந்தது.
இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில், 5ஆவது முறையாக விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டது.