‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று கொண்டாடப்படும் நயன்தாராவுக்கே இது சோதனையாக காலம்தான் என்கிறார்கள்.
’ஜவான்’ என்ற மிகப்பெரும் வெற்றிப்படத்தில் நடித்திருந்தாலும், நயன்தாராவுக்கு ஹிந்தியில் அடுத்து பட வாய்ப்புகள் வரவில்லை. மேலும் இவர் தனது சம்பளத்தை 12 கோடியாக உயர்த்திவிட்டார்.
சம்பள உயர்வு ஒரு பக்கம் என்றாலும், சமீபத்தில் இவர் நடித்தப் படங்கள் எதுவும் வெற்றிப்பெறவில்லை. கடைசியாக தமிழில் நடித்த ’இறைவன்’ படம் பெரும்தோல்வியைச் சந்தித்தது. ஹீரோயினை மையமாக கொண்ட படங்களில் நயன்தாரா நடிந்திருந்தாலும், அவையும் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. அந்த வகையில் ’அன்னப்பூரணி’ பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.
தமிழ்ப் படங்கள் அல்லது தெலுங்குப் படங்கள் என மாறி மாறி நடித்து கொண்டிருந்தவருக்கு இப்போது தெலுங்கிலும் வாய்ப்புகள் இல்லை. சீனியர் ஹீரோக்கள் இப்போது இளம் நடிகைகளை தங்களுக்கு ஜோடியாக போடும் படி பரிந்துரைப்பதால், நயனுக்கு சீனியர் ஹீரோக்களுடனும் நடிக்க வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டதாம்.
இப்போது தமிழில் கவினுக்கு ஜோடியாக நடிக்கலாமா அல்லது வேறெந்த ஜூனியர் நடிகர்களுடன் நடிக்கலாம் என்று யோசிக்குமளவிற்கு வாய்ப்புகள் குறைந்திருப்பதாக கூறுகிறார்கள்.
இதனால் வேறு வழியில்லாமல் சம்பளம் 2 கோடி இருந்தாலும் கூட பரவாயில்லை என்று மலையாள சினிமா பக்கம் ஒரு படம் பண்ண முடிவு செய்து இருக்கிறாராம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பு செய்த, ‘டியர் ஸ்டூடன்ஸ்’ என்ற பட த்தில்தான் இப்போது நயன்தாரா நடித்து வருகிறார்.
இப்படியே தொடர்ந்தால், தனது ரவுடி ஃப்லிம்ஸ் மூலம் தயாரிப்பாளராக சின்ன பட்ஜெட் படங்களை எடுக்கவும் நயன்தாரா யோசித்து வருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
மனம் வெறுத்து போன ஃபஹத் ஃபாசில்
கொரோனாவிற்குப் பிறகு இந்திய சினிமாவின் போக்கு தாறுமாறாக மாறியிருக்கிறது. கோவிட்டின் தாக்கத்தினால் திரையரங்குகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருக்கிறது. அதே நேரம் புதியப்படங்களை ஒடிடி தளங்களில் பார்க்கும் வழக்கம் மக்களிடையே அதிகரித்து இருக்கிறது.
வீட்டில் இருந்தபடியே, நினைத்த நேரம், செளகரியமாக இருந்தபடியே புதிய படங்களை அவை வெளியான இரண்டு மாதங்களில் பார்க்க முடிவதால் இன்று ஒடிடி தளங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இதனால் ஒடிடி தளங்களும் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைக்க, முன்னணி நட்சத்திரங்களின் படங்களை வாங்க போட்டிப்போடுகின்றன.
கோவிட்டின் போது தெலுங்குப் படங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. 2023-ல் தமிழ்ப்படங்களுக்கு எதிர்பார்பு ஏற்பட்டது. 2024-ல் இப்போது மலையாளம் சினிமா இந்திய ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
தமிழ், தெலுங்குப் படங்களுக்கு ஒடிடி தளங்கள் மத்தியில் கிடைத்த மவுசு, மலையாளப் படங்களுக்கு கிடைக்கவில்லை என்ற குறை இருக்கிறது. மலையாளப்படங்களை குறைந்த விலைக்கு வாங்கவே ஒடிடி தளங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
ஒடிடி தளங்களின் இந்த பாரபட்சத்தை பற்றி ஃபஹத் ஃபாசில் வெளிப்படையாகவே மனம் திறந்து கருத்து கூறியிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஆவேஷம்’ படம் நூறு கோடிகளைத் தாண்டி வசூல் செய்து வருகிறது. இந்நிலையில்தான் அவர், ‘மலையாள சினிமாவான மோலிவுட்டின் வியாபாரம் வளர்ச்சியடைந்து இருக்கிறது. ஆனால் மலையாள சினிமாவுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒரு உறுதியான் ஸ்ட்ரீமிங் பின்புலம் இல்லை. அதனால் நம்முடைய திறமையை திரையரங்குகளில்தான் காட்டியாக வேண்டும். திரையரங்குகளில் படம் ஓடிய பிறகே ஒடிடி தளங்கள் நம் படங்களின் உரிமையை வாங்க முன் வருகிறார்கள். ஆனால் இந்தியாவின் மற்ற மொழிகளில், படங்கள் எடுக்க ஆரம்பிக்கும் போது 80% ஒடிடி உரிமை வியாபாரம் ஆகிவிடுகிறது.