தங்களைச் சுற்றியுள்ள எல்லா விஷயங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பது மனித இயல்பு. புதிதாக ஏதாவது ஒரு பொருளோ, நபரோ அல்லது ஊரோ பிரபலமானால் அது என்ன என்று தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் முன்பு அதைப்பற்றி தெரிந்தவர்களிடம் விசாரிப்பார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. எதைப்பற்றியும் யாரிடமும் கேட்டு நிற்க வேண்டிய அவசியம் இல்லை. கூகிளில் தேடினால் அது என்ன என்று தெரிந்துவிடுகிறது. அதனால் பெரும்பாலானவர்கள் தங்கள் குருவாக கூகிளையே பயன்படுத்தி வருகிறார்கள்.
அந்த வரிசையில் இந்த 2023-ம் ஆண்டில் இந்தியர்களால் கூகிளில் அதிகம் தேடப்பட்ட 10 விஷயங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் நிலவுப் பயணம் பெரும்பாலான இந்தியர்களைக் கவர்ந்துள்ளதால், சந்திரயான் திட்டத்தைப் பற்றி ஏராளமானோர் கூகிளில் தேடியுள்ளனர். இதற்கு அடுத்த இடத்தை கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலும், இஸ்ரேல் பிரச்சினையும் பிடித்துள்ளன.
இதன்படி முதல் 10 இடங்களைப் பிடித்த தேடல்கள் வருமாறு:
1.சந்திரயான்
2.கர்நாடக சட்டமன்ற தேர்தல்
3.இஸ்ரேல் செய்திகள்
4.சதீஷ் கவுசிக் (பாலிவுட் நடிகர், இயக்குநர்)
5.2023-ம் ஆண்டின் பட்ஜெட்
6.துருக்கி நிலநடுக்கம்
7.ஆதிக் அகமத் (சுட்டுக் கொல்லப்பட்ட உத்திரபிரதேச அரசியல்வாதி)
8.மேத்யு பெரி (அமெரிக்க நடிகர்)
9.மணிப்பூர் கலவரம்
10.ஒரிசா ரயில் விபத்து
கூகிளிடம் அதிகமாக கேட்கப்பட்ட கேள்விகள்:
1.ஜி20 என்றால் என்ன?
2.யுசிசி என்றால் என்ன?
3.சாட் ஜிபிடி என்றால் என்ன?
4.ஹமாஸ் என்றால் என்ன?
5.2023 செப்டம்பர் 28-ம் தேதி என்ன நடந்தது?
6.சந்திரயான் 3 என்றால் என்ன?
7.த்ரெட்ஸ் என்றால் என்ன?
8.கிரிக்கெட்டில் டைம்ட் அவுட் என்றால் என்ன?
9.ஐபிஎல்லில் இம்பாக்ட் பிளேயர் என்றால் என்ன?
10.செங்கோல் என்றால் என்ன?
விளையாட்டுத் துறையில் அதிகம் தேடப்பட்ட 10 விஷயங்கள்:
1.இந்தியன் பிரீமியர் லீக்
2.உலகக் கோப்பை கிரிக்கெட்
3.ஆசிய கோப்பை
4.பெண்கள் பிரீமியர் லீக்
5.ஆசிய விளையாட்டு போட்டி
6.இந்தியன் சூப்பர் லீக்
7.பாகிஸ்தான் சூப்பர் லீக்
8.ஆஷஸ் தொடர்
9.பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்
10.தென் ஆப்பிரிக்க டி20