பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி திடீர் ஹார்ட் அட்டாக்கால் காலமாகியுள்ளார். ஏன் இப்படி திடீர் ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது? இந்த அபாயத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும்? பிரபல டாக்டர் விஜயலஷ்மி இது தொடர்பாக ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தரும் ஆலோசனைகள் இங்கே.
முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
“Heart Attack, Heart Failure, Cardiac Arrest – மூன்றுக்கும் வித்தியாசங்கள் உள்ளது என்று சொன்னேன். Heart Attack (மாரடைப்பு) பற்றி பார்த்தோம். இப்போது Cardiac Arrest (இதய நிறுத்தம்) பற்றி பார்க்கலாம்.
கார்டியாக் அரெஸ்ட் என்பது இதயம் திடீரென துடிப்பதை நிறுத்திக்கொள்வது. நமது இதயம் S.A Node and A.V Node என்ற இரண்டுக்கு இடையேயான எலெக்ட்ரிக்கல் பரிமாற்றத்தால்தான் துடித்துக்கொண்டு இருக்கிறது. திடீரென இந்த எலெக்ட்ரிக்கல் பல்ஸில் பிரச்சினை ஏற்படுவதுதான் கார்டியாக் அரெஸ்ட். இதனால் திடீரென இதயம் துடிப்பதை நிறுத்திவிடும்.
இதயம் துடிப்பதை நிறுத்திக்கொண்டதும் மூளைக்கு ரத்தம் செல்வது நின்று உடனே சுருண்டு விழுந்துவிடுவார்கள். அதன்பின்னர் அதிகபட்சம் மூன்று நிமிடங்கள்தான் கிடைக்கும். எனெனில், மூளை செல்கள் அதற்குள் மேல் தாக்குபிடிக்காது. இறந்துவிடும். அதாவது மூளைச் சாவு அடைந்துவிடும். அதன்பின்னர் மூளை செல்களுக்கு உயிர்கொடுப்பது சாத்தமல்ல. எனவே, அதற்குள் சிபிஆர் எனும் ஹார்டியாக் மசாஜ் கொடுத்து பாதிக்கப்பட்டவரை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும். கையால் அழுத்தி ஹார்டியாக் மசாஜ் செய்யும்போது செயற்கையாக ஹார்ட் பம்ப் செய்யப்பட்டு ரத்த ஓட்டம் நின்ற பகுதிகளுக்கு ரத்தம் செல்லும். இப்படி மூளைக்கும் ரத்தம் சென்று செல்கள் மரணிப்பதை தள்ளிப்போடும். இதனால், பாதிக்கப்பட்டவரை காப்பாற்றுவதற்கு நமக்கு கொஞ்சம் கூடுதல் அவகாசம் கிடைக்கும்.
கார்டியாக் அரெஸ்ட் இவர்களுக்கெல்லாம் வரும், இவர்களுக்கெல்லாம் வராது என்று யாரையும் சொல்ல முடியாது. நல்ல ஆரோக்கியமான இதயம், அதற்கு முன்பு வரைக்கும் எந்த பிரச்சினையும் இல்லாதவர்கள் என்றாலும் கார்டியாக் அரெஸ்ட் வரலாம். சிலருக்கு மரபணு வழியாகவும் இது வரலாம். அதாவது தாத்தா, அப்பா இருவருக்கும் அல்லது இருவரில் ஒருவருக்கு இந்த சிக்கல் வந்திருக்கலாம். இதுபோன்ற வரலாறு உடைய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். இதுபோல் மரபணு வழியாக வர வாய்ப்புள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக இப்போது Implantable Cardioverter Defibrillator (ICD) என்னும் கருவியை இதயத்தில் பொருத்துகிறார்கள். திடீரென நின்ற இதயத்தை மீண்டும் துடிக்க வைக்க வெளியே இருந்து எலெக்ட்ரிக்கல் ஷாக் கொடுப்பதற்கு பதிலாக இது உள்ளே இருந்து கொடுக்கும். உடனே, இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கிவிடும். இதன்மூலம் கார்டியாக் அரெஸ்ட் வந்தவர்களை காப்பாற்ற நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.