No menu items!

மயில்சாமிக்கு கொலஸ்ட்ரால் இருந்தது: Mayilsamy Health Report – Vivek Sister Dr Vijayalakshmi – 1

மயில்சாமிக்கு கொலஸ்ட்ரால் இருந்தது: Mayilsamy Health Report – Vivek Sister Dr Vijayalakshmi – 1

மீண்டும் ஒரு திடீர் மரணம் தமிழ் திரையுலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி திடீர் ஹார்ட் அட்டாக்கால் காலமாகிவிட்டார். அவருக்கு மிக நெருங்கிய நண்பரும் சக நடிகருமான விவேக் மரணத்தை நினைவூட்டுவதுபோல் உள்ளது மயில்சாமியின் அதிகாலை மரணம். ஏன் இப்படி திடீர் ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது? இந்த அபாயத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும்? மயில்சாமியை நன்கு அறிந்தவரும் விவேக் சகோதரியுமான பிரபல டாக்டர் விஜயலஷ்மி இது தொடர்பாக ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தரும் ஆலோசனைகள் இங்கே.

‘நமது வாழ்க்கை முறை, உணவு பழக்கவழக்கம் கடந்த சில பத்தாண்டுகளாக நிறைய மாறிவிட்டது. இதன் விளைவு, முன்பெல்லாம் 60 வயதுக்கு மேல் ஒருவருக்கு உடலில் என்னன்ன பிரச்சினைகள் வருமோ அது எல்லாம் இப்போது 40 வயதுக்கு மேலேயே வந்துவிடுகிறது. பெரும்பாலானவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்; அல்லது அதன் எல்லையிலாவது இருக்கிறார்கள். இதுபோல் கொலஸ்ட்ராலும் இப்போது பெரும்பான்மை இள வயதுக்காரர்களுக்கு உள்ளது. இது இரண்டுமே இதயத்துக்கு நல்லதில்லை. மயில்சாமிக்கும் கொலஸ்ட்ரால் இருந்தது.

கொரோனாவுக்கு பின்னர் கடந்த ஒரு வருடமாக எதிர்பாராத திடீர் மரணங்கள் அதிகரித்துள்ளது. மாரடைப்பால் 37 முதல் 47 வயதுக்குள் மரணமடைவது மிக அதிகரித்துள்ளது என சமீபத்தில் ஒரு புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. எனவே, இது தொடர்பாக நாம் அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இதயத்தை பொறுத்தவரைக்கும் மூன்று விதமான பிரச்சினைகள் இருக்கிறது. Heart Attack, Heart Failure, Cardiac Arrest. இவை மூன்றுக்கும் இடையே வித்தியாசங்கள் உள்ளன.

Heart Attack (மாரடைப்பு) என்பதில் இதயத்துக்குள் ரத்தம் ஓட்டம் குறைவாக இருக்கும். இதயம் மூன்று விதமான வேலைகளைச் செய்கிறது. ஒன்று நன்றாக விரிந்து சுருங்கி ரத்தத்தை உடல் முழுவதும் பம்ப் செய்கிற மோட்டார் வேலை. இதற்காக இதயத்தில் ரத்தக் குழாய்கள் இருக்கிறது. இதில் பெரிய ரத்தக் குழாய் எல்லா செல்களுக்கும் இதயத்தில் இருந்து ரத்தப் பரிமாற்றம் நடத்துகிறது. இந்த ரத்தக் குழாய்களில் ஏற்படுகின்ற அடைப்பே ஹார்ட் அட்டாக் என்கிறோம்.

ஆனால், இது திடீரென நடக்காது. ஏற்கெனவே சொன்னதுபோல், ஆரம்பத்தில் ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். இதனால் இதயத்தின் நாளங்கள் கடினமாகிவிடும். சிலருக்கும் நாளங்கள் சுருங்கிவிடும். இதனால் ரத்தம் செலுத்துவது அதிக அழுத்தத்துடன் நடைபெறும்.  பொதுவாக நமது உடல் உறுப்புகள் அனைத்துமே ஒரு பக்கம் பிரச்சினையை உணர்ந்தால் அடுத்த பக்கம் அதை தானே சரி செய்யும் வேலைகளையும் செய்யும். அதன்படி இதயமும் புதிதாக ரத்த நாளங்களை உருவாக்கி ரத்த ஓட்டத்தை சீர் செய்துகொண்டே வரும். ஆனால், இதற்கும் ஒரு எல்லை உள்ளது. அதாவது இதயம் பலவீனமடைந்து மாரடைப்பு ஏற்படும் நிலை.

கொலஸ்ட்ரால், சிகரெட் மற்றும் மது எடுத்துக்கொள்வது என பல காரணங்களால் இது வரலாம்.  வேர்வையுடன் வரக்கூடிய நெஞ்சு வலி, வாந்தியுடன் வரக் கூடிய நெஞ்சு வலி போன்ற அறிகுறிகள் ‘ஹார்ட் அட்டாக்’ இருப்பதற்கான வாய்ப்புள்ளதை தெரிவிக்கக்கூடியது. வழக்கமான வேலைகளை பார்த்துக்கொண்டு இருக்கும்போது மூச்சுத் திணறல் மற்றும் மூச்சு வாங்குவது, நெஞ்சுவலி போன்றவையும் ஹார்ட் அட்டாக் அறிகுறிகள்தான். ஹார்ட் அட்டாக் வந்ததாக உணர்ந்தால் நன்றாக இருமுவதும் நன்றாக தண்ணீர் குடிப்பதும் உதவியாக இருக்கும்.

உடற்பயிற்சி  செய்யும் போது மூச்சு வாங்குவது, உடற்பயிற்சி செய்யும் போது நெஞ்சு வலி ஏற்படுவது, நடக்கும் போது மூச்சு திணறல் ஏற்படுவது ஆகியவற்றை நாம் உதாசீனப்படுத்தக் கூடாது. ஹார்ட் அட்டாக்கை உணர்ந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.’

தொடர்ந்து படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...