S.T. புவி
பத்தாம் நூற்றாண்டில் பெர்சியா நாட்டில் (தற்போதுள்ள ஈரான்) மலிக்க்ஷா என்ற மன்னன் ஆட்சி செய்தார். அவர் அரசபையில் அசன் என்ற அமைச்சர் குற்றம் செய்திருந்தார். அதற்காக அமைச்சருக்கு தண்டனை வழங்கும் சமயத்தில் அசன் அங்கிருந்து தப்பித்து அருகில் உள்ள மலைப் பகுதியில் தலைமறைவானார்.
அசன் மலைப்பகுதியில் தலைமறைவாக இருந்தபடியே தனக்கு சாதகமான ஆட்களை ஒன்று சேர்த்து பெர்சியா நாட்டு மக்களிடம் வழிபறி செய்து வந்தார். இந்த வழிப்பறி கும்பலுக்கு அசாசின்ஸ் என்று பெயர்.
அசாசின்ஸ் அட்டகாசம் அதிகரிக்கவே பெர்சியா நாட்டு அரசனான மலிக்க்ஷா, அசாசின்ஸ் கும்பலை கூண்டோடு அழிக்க படைகளை தயார் செய்தார். ஆனால், அன்று இரவே மலிக்க்ஷா மர்மமான முறையில் கொலை செய்யபட்டார்.
அசன் பெர்சியா நாட்டிற்கு அரசனார். அவர் 34 ஆண்டுகள் பெர்சியாவை ஆண்டார். தனது 90ஆவது வயதில் இறந்தார். காலப்போக்கில் இந்த அசாசின்ஸ் கும்பல் 7 குழுக்கலாக பிரிந்து மலேசியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, இந்தோனீசியா போன்ற நாடுகளுக்கு சென்றனர். அப்படி இந்தியாவிற்கு வந்த அசாசின்ஸ் கும்பலின் ஒரு குழுதான் தக்கர்கள்.
இந்தியாவின் மிக மோசமான கொலை கூட்டமாக பாபரேயா கூட்டம்தான் அறியப்படுகிறது. அவர்களுக்கு முன்பு 13 நூற்றாண்டில் இருந்தவர்கள் ஈரானை பூர்வீகமாக கொண்ட இந்த தக்கர்கள் தான்.
இவர்களின் பிடியில் இந்தியா 600 ஆண்டுகாலம் இருந்துள்ளது. இவர்களின் காலத்தை இந்தியாவின் இருண்ட காலம் என்று சொல்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் தக்கர் கூட்டத்தின் தலைவனாக இருந்த தக்பேரம் 931 கொலைகள் செய்துள்ளான். இந்தியாவில் உள்ள மத்தியபிரேதேசத்தில் ஜவால்பூர் மாவட்டத்தில் பிறந்தவன். உலகிலேயே அதிக கொலைகள் செய்த தனிஆள் என்று கின்னஷ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறான்.
தக்கர்கள் கொள்ளை அடிக்க ஏதுவாக தங்களுக்கென ரமோசி என்ற தனிமொழியை பயன்படுத்தி வந்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் ஜவால்பூர் மாவட்டத்தில் மம்தா என்ற கிராமத்தில் தக்கர்கள் அதிகமாக வாழ்ந்துள்ளனர். தமிழ் இலக்கியத்தில் தக்கர்களை அரித்துலுக்கன் என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர்.
தக்கர்கள் இந்தியாவின் நெடுந்தூர சாலைகளான கொல்கத்தாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் கிராண்ட் டிரெங் ரோடு, மும்பையையும் சென்னையையும் இணைக்கும் டெகேன் பிளாட்டோ டிரேடு ரோடு போன்ற வணிக சாலைகளை கொள்ளையடிக்க பெரிதும் பயன் படுத்தியுள்ளனர். அந்த காலத்தில் சுமார் 20 லட்சம் மக்களை கொலை செய்துள்ளனர். அதாவது ஒரு வருடத்திற்கு குறைந்தது 90 ஆயிரம் மக்களை கொலை செய்துள்ளனர்.
ஈரானில் இருந்து வந்த தக்கர்கள் இந்தியாவில் தங்களுக்கு ஏற்றார் போல் காளி தெய்வத்தை வழிபட்டு வந்துள்ளனர். இந்திய புராணக் கதைகளில் இவர்களை காளியின் வியர்வையில் இருந்து தோன்றியவர்கள் என்கின்றனர். தக்கீஸ்களிடம் இருந்து தான் தக் ஃலைப் என்ற வார்த்தை உருவாகியுள்ளது.
தக்கர்கள் இந்தியாவில் இருந்ததற்கான சான்று 1353இல் இருந்து கிடைக்கிறது. வரலாற்று ஆய்வாளர் வின்சென்ட் சுமித், 1356இல் டெல்லியை ஆண்ட பெரோசியா துக்லக் காலத்தில் 1000 தக்கர்கள் கொலை செய்த குற்றத்திற்காக நாடு கடத்தபட்டுள்ளதை குறிப்பிட்டுள்ளார். அதே போல் அக்பர், ஷாஷகான் காலத்திலும் தக்கர்களை நாடு கடத்தியதாக தனது ஆய்வில் கூறுகிறார் வின்சென்ட் சுமித். 18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரிடம் பிடிபட்ட குலாம் என்ற தக்கர் அலெக்சாண்டர் படையெடுப்பின் போதே தாங்கள் இந்திய நிலப்பரப்பில் இருந்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளதும் வரலாற்றில் பதிவாகியுள்ளது.