ஒரேயொரு படம்தான். இளைஞர்களிடையே இப்படியொரு காதலி வேண்டும் என்று பொறாமைப்பட வைக்குமளவிற்கு நடிப்பிலும், அழகிலும் அசரவைத்தவர் ’சீதா ராமம்’ ஹீரோயின் மிருணாள் தாகூர் [Mrunal Thakur].
நூர்ஜஹான் என்ற இளவரசி கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதமும், அதை அசத்தலாக வெளிப்படுத்திய மிருணாள் தாகூரின் நடிப்பும்தான் அவரை அப்படி கொண்டாட வைத்திருக்கிறது.
படம் வெளியாகி வசூலிலும், ரசனையிலும் வெளுத்து வாங்கியிருக்கிறது.
இப்படியொரு சூழலில், மிருணாள் தாகூருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து குவிந்திருக்க வேண்டும். கால்ஷூட் மூன்று வருடங்களுக்கு புக் ஆகி இருக்கவேண்டும்.
ஆனால் அதுதான் நடக்கவில்லை. காரணம் ரசிகர்களுக்கும் புரியவில்லை.
இப்பொழுது அதற்கான காரணத்தை மிருணாள் தாகூர் போட்டு உடைத்திருக்கிறார்.
’ஹீரோயின்கள் தங்களோட அழகான வளைவுகளின் அழகை காட்டுவதிலோ, கிளமருக்காக அழகை வெளிப்படுத்துவதிலோ, நெருக்கமாக காட்சிகளிலோ முத்தக்காட்சிகளில் நடிப்பதிலோ எந்தவிதமான தடையும் இருக்கக்கூடாது. அப்படி இல்லைன்னா சினிமாவுல எங்களோட கேரியரை எப்படி உருவாக்க முடியும்? எப்படி எங்க பேங்க் அக்கெளண்ட்ல பேலன்ஸ் இருக்கும்? பணம் சம்பாதிக்கிறது எங்க உரிமை. எங்களுக்கு எது வேல்யூ அதிகமோ அதற்கான டிமாண்ட்டை கேட்கிறோம். மார்க்கெட்டுல எவ்வளவு சம்பளமோ அதைப் பொறுத்து நடிகைகளுக்கு சம்பளம் கொடுப்பாங்க. சம்பளம், கிளாமர் விஷயங்கள்ல ஒருத்தர் ரெண்டு முறை யோசிச்சா ஒரு நட்சத்திர அந்தஸ்தை அடைய முடியாது’’ என்று பொங்கியெழுந்திருக்கிறார்.
’சீதா ராமம்’ படத்திற்கு பிறகு அதே மாதிரியான கதாபாத்திரங்களே தேடி வந்ததால் மிருணாள் தாகூர் எந்த வாய்ப்புகளையும் ஏற்றுகொள்ளவில்லையாம். இப்படியே நடித்தால் பிறகு கிளாமர் இல்லாமல் கமர்ஷியல் நடிகையாக மாற வாய்ப்பே இருக்காது என்ற பயம் மிருணாள் தாகூருக்கும் வந்திருக்கலாம்.
விஜய்68 டைரக்டர் யார்?
2023 பொங்கலுக்கு விஜயின் ‘வாரிசு’ தயாராகிவிட்டது.
அடுத்து தளபதி67 [Thalapathy 67] படத்தை லோகேஷ் கனகராஜ் [Lokesh Kanagaraj] இயக்குகிறார். இதுவும் ஒரு கேங்ஸ்டர் / மாஃபியா படமாக இருக்கும் என ஒரு பேச்சு அடிப்படுகிறது.
இந்த படம் குறித்த பரபரப்பு இருக்கும் போதே தளபதி68 [Thalapathy 68] படத்தை இயக்கப் போவது யார் என மாறுபட்ட கருத்துகள் உலா வர ஆரம்பித்திருக்கின்றன.
’லவ் டுடே’ படம் வெளியாக பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜயின் அடுத்தப்படத்தை இயக்கப்போவது பிரதீப் ரங்கராஜன் என்றார்கள். இந்தப் படம் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டது.
இந்த கிசுகிசு உலா வந்து கொண்டிருக்கும் போதே இப்பொழுது அடுத்த பேச்சு ஆரம்பித்திருக்கிறது.
அதாவது தளபதி68 [Thalapathy 68] படத்தை இயக்குவதற்கு விஜயை வைத்து ஏற்கனவே ‘தெறி’, ‘பிகில்’ என இரண்டுப் படங்களை இயக்கிய அட்லீக்குதான் வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.
விஜய் – அட்லீ காம்பினேஷனில் உருவாக இருக்கும் இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கப் போவதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் ஒரு பேச்சு கோலிவுட்டில் அடிப்படுகிறது.
அட்லீயா, பிரதீப்பா அல்லது வேறு யார் என்ற தகவல் வாரிசு படம் வெளியாகும் போது தெரியவரலாம் என்கிறது விஜய்க்கு நெருங்கிய வட்டாரம்.
காந்தாராவுக்கு ரிஷப் ஷெட்டி வாங்கிய சம்பளம்
2022-ல் ஏகோபித்த ஆதரவை சம்பாதித்த படம் கன்னடப் படமான ‘காந்தாரா’ [Kantara].
இப்படத்தை ‘கே.ஜி.எஃப். 2’ படத்தை தயாரித்த ஹொம்பாலே [Hombale] நிறுவனம் தயாரித்து இருந்தது.
காந்தாராவின் மொத்த பட்ஜெட் 16 கோடிகளாம். இரட்டை இலக்க பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் 406 கோடி என மூன்று இலக்கத்தில் ஒட்டுமொத்த கலெக்ஷனை கல்லா கட்டி இருக்கிறது.
இப்படத்தில் வில்லன் போல் சித்தரிக்கப்பட்டு இறுதியில் நல்லது செய்யும் வன அதிகாரியாக நடித்த கிஷோருக்கு [Kishore] ஒரு கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாம்.
ஹீரோயினாக நடித்த சப்தமி கெளடாவுக்கும் [Saptami Gowda] ஒரு கோடி சம்பளமாம்.
இவர்கள் தவிர முக்கிய வில்லனாக நடித்த அச்சுத் குமாருக்கு [Achyuth Kumar] 40 லட்சமும், சுதாரக்கா கதாப்பாத்திரத்தில் நடித்த பிரமோத் ஷெட்டிக்கு 60 லட்சமும் சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறதாம்.