No menu items!

லியோ எப்படி இருக்கு? – சில விமர்சனங்கள்

லியோ எப்படி இருக்கு? – சில விமர்சனங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகி இருக்கும் லியோ படத்தைப் பற்றிய சில விமர்சன்ங்கள்..

தினமணி

விஜய்யை லியோ காப்பாற்றினாலும் லோகேஷுக்கு இது சற்று சறுக்கல்தான். ஒரு சரக்குக்கு நன்றாக விளம்பரம் செய்ய கற்றுக்கொண்டிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதற்கு மத்தியில் சரக்கை தரமாக தயாரிக்க மறந்து போயிருக்கிறார்.

பிஹைண்ட் டாக்கீஸ்

லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களான விக்ரம் கைதி போன்ற படங்கள் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து LCU என்ற பெயர் உருவானது. எனவே இந்த படம் LCU உருவானது. இல்லையா என்ற மிகப்பெரிய கேள்வி உருவானது. இதனாலேயே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இருப்பினும் விஜய்யின் முந்தைய படமான பீஸ்ட்,வாரிசு ஆகிய படங்களை ஒப்பிடும் போது இந்த படம் பரவாயில்லை. மொத்தத்தில் லியோவில் விஜய் சிங்கம் தான் என்றாலும் கர்ஜனை குறைவு தான்.

கல்கி ஆன்லைன்

விஜய் அழும் போதும், தான் லியோ இல்லை என உணர்த்த போராடும் போதும் சிறந்த நடிப்பை தந்துள்ளார். திரிஷா ஒரு நடுத்தர வயது தாயாக மாறுபட்ட நடிப்பை தந்துள்ளார். சஞ்சய் தத், அர்ஜுன் என இரண்டு வில்லன்கள் இருந்தும் நம்மை பயமுறுத்த மறுக்கிறார்கள்.

படத்தின் கிளைமேக்ஸ் முடிந்து பின் ‘”லியோ நீ அழிக்க வேண்டியது இன்னமும் இருக்கு “என்று போன் கால் மூலமாக அடுத்த பார்ட்டுக்கு டைரக்டர் லீட் தரும் போது ரசிகர்களுக்கு ‘பகீர் ‘என்ற உணர்வு வருவதை உணர முடிந்தது. டைரக்டர் சார் கேங்ஸ்டர்களை கொஞ்சம் நாளைக்கு விட்டு விடுங்க. அவங்க வேலை பார்க்கட்டும். கேங்ஸ்டர்ஸ் பாவமில்லையா?

ஏபிபி நாடு

லோகேஷ் படம் என்றால் சொல்ல வேண்டுமா.. படம் முழுக்க வன்முறை ஆட்டம் தான். பழைய பாடல்கள், மாஸ்டர் பட ரெஃபரன்ஸ்கள் என முதல் பாதியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு இரண்டாம் பாதியில் அமைக்கப்பட்டுள்ள திரைக்கதை சற்று சலிப்பையே ஏற்படுத்துகிறது. படத்தின் ஹைலைட்டே லியோ தாஸ் கேரக்டர் தான் என்றாலும் பெரிய அளவில் அழுத்தமில்லாத கிளைமேக்ஸ் நெருடலாகவே உள்ளது. லோகேஷ் யுனிவர்ஸில் லியோவும் இணைந்துள்ள நிலையில், விஜய்க்கு டஃப் கொடுக்க சஞ்சய் சத், அர்ஜுன் போன்ற அதிரடி வில்லன்கள் இருந்தும் அவர்களுடனான சண்டை காட்சிகள் சட்டென்று முடிந்து விடுவது ஏமாற்றமே. ஆனால் தளபதி மணிக்கணக்கில் அடியாட்களுடன் சண்டை போடுவது என்ன நியாயமோ..!

தமிழ் சமயம்

லியோ படம் துவங்கிய அரை மணிநேரத்திலேயே அடுத்தது என்னவென்பதை எளிதில் கணிக்க முடிகிறது. இருந்தாலும் அதை தன் ஸ்டைலில் கொடுத்து ரசிகர்களை திருப்தி அடைய செய்திருக்கிறார் லோகேஷ்.

த்ரிஷாவின் கதாபாத்திரம் ரசிக்கும்படியாக இருக்கிறது. அவர் சும்மா வந்துவிட்டு செல்லவில்லை. அர்ஜுன், ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
லியோ- விஜய் ஷோ

தமிழ் பிலிம்பீட்

நடிகர் விஜய்யின் நடிப்பு மற்றும் ஆக்‌ஷன் தான் லியோ படத்தின் பிளஸ் என்று சொல்லலாம். கெளதம் மேனன், மன்சூர் அலி கான், சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, சர்ப்ரைஸாக வரும் மடோனா சபாஸ்டியன் என அனைவரது நடிப்பும் சிறப்பு. பின்னணி இசையில் அனிருத் பட்டையை கிளப்பி குறிப்பாக இரண்டாம் பாதி படத்தை காப்பாற்றியுள்ளார். படம் முழுக்க இயக்குநரை தாண்டி பாராட்டுக்களை அள்ளுவது அன்பறிவ் மாஸ்டர்கள் தான். அவர்கள் இல்லை என்றால் லியோ நிச்சயம் மொக்கை வாங்கியிருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...