சோஹைல் கெதுரியாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. அவருடைய மனைவி என்னுடைய தோழி. இந்த விஷயங்களை எல்லாம் தாண்டி அவர் என்னுடைய பிஸினெஸ் பார்ட்னர். நெருங்கிய நண்பர். எங்கள் இருவருக்கும் இடையில் ஒரு புரிதல் இருக்கிறது. அதனால் திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்கிற ரீதியில் ஹன்சிகா மோத்வானி இருப்பதால் டிசம்பர் 4-ம் தேதி ஹன்சிகா – சோஹைல் திருமணத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தெரிகிறது..
இப்போது அடுத்தக்கட்டமாக உலாவரும் கிசுகிசு என்னவென்றால்,நயன்தாராவைப் போலவே தனது திருமணத்தில் எப்படி காசு பார்க்கலாம் என யோசித்து வருகிறதாம் ஹன்சிகா வட்டாரம்.
ஹன்சிகா – சோஹைல் திருமண நிகழ்வுகள் அனைத்தையும் ஏதாவது ஒரு தொலைக்காட்சிக்கோ அல்லது ஒடிடி நிறுவனத்திற்கோ விற்றுவிட்டால் என்ன. எப்படியும் திருமணத்திற்கு பின்பு வாய்ப்புகள் வராது. அப்படியே வந்தாலும் அக்கா கதாபாத்திரங்களுக்குதான் கூப்பிடுவார்கள். அதனால் இருக்கிற கடைசி வாய்ப்பையும் ஏன் விட வேண்டுமென்று ஹன்சிகா தரப்பு யோசிக்கிறதாம்.
நட்சத்திர பெயருடைய ஒடிடி ப்ளஸ் நிறுவனம் இதையறிந்து பிஸினெஸ்ஸூக்கு வந்திருப்பதாகவும் பேச்சு அடிப்படுகிறது. திருமணத்தை ஷூட் செய்து அதை எடிட் செய்ய நான்கு மாதம் இழுத்தடிக்கும் வேலைகளைப் பண்ணாமல், அப்படியே சுடச்சுட லைவ் ஸ்ட்ரீமிங் பண்ணினால் என்ன என ஒடிடி நிறுவனம் யோசிக்கிறதாம்.
இதற்காக ஒரு பெரிய தொகையையும் கொடுக்க தயாராக இருப்பதாக ஒடிடி நிறுவனம் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறதாம்.
போகிற போக்கைப் பார்த்தால் நயன்தாரா ஃபார்மூலாவை கையிலெடுக்கும் ஹன்சிகா, நயன் திருமண படத்திற்கு முன்பாகவே தனது கல்யாண படத்தை காட்டிவிடுவார் போல.
Thalapathy ’வாரிசுடு’-க்கு சிக்கல்.
சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு சினிமாவின் மிகப்பெரும் தயாரிப்பாளரும், செல்வாக்குமிக்கவருமான தில் ராஜூ ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டார்.
’தெலுங்குப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். சங்கராந்தி, தசரா போன்ற பண்டிகைகள் வரும் போது, தெலுங்குப் படங்களுக்கு அதிக திரையரங்குகளை ஒதுக்குங்கள். டப்பிங் படங்களை வெளியிடாதீர்கள். டப்பிங் படங்களை முக்கிய நாட்களில் வெளியிடுவதால் தெலுங்குப் படங்கள் பாதிக்கப்படுகின்றன. தெலுங்கு சினிமா நன்றாக இருக்க வேண்டுமென்றால், டப்பிங் படங்களுக்குப் பதிலாக நேரடி தெலுங்குப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்’ என்று குரல் கொடுத்திருந்தார் தில் ராஜூ.
சில ஆண்டுகள் இடைவெளியில் தில் ராஜூ நம்மூர் விஜயை வைத்து தெலுங்கு இயக்குநர் வம்சி படிபள்ளியை வைத்து ஒரு தயாரித்து இருக்கிறார். அந்தப் படத்தின் பெயர்தான் ‘வாரிசுடு’.
ஆரம்பத்தில் ’வாரிசு’ தமிழிலும், ’வாரிசுடு’ தெலுங்கிலும் எடுக்கப்பட்டு வருகிறது என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது. பிறகு இங்கே தமிழ் சினிமாவில் வாரிசுவை ப்ரமோஷன் செய்ய, நேரடி தமிழ்ப்படம் என்று அப்பட இயக்குநர் கூற பிரச்சினை ஆரம்பித்தது
இரண்டாம் பத்தியில் சொன்ன தில் ராஜூவின் ஸ்டேட்மெண்டை தெலுங்கு ஃப்லிம் ப்ரொடியூஸர்ஸ் கவுன்சில் தற்போது கையிலெடுத்து இருக்கிறது; காரணம் தில் ராஜூ தயாரித்திருக்கும் விஜய் நடிக்கும் ’வாரிசு’ நேரடி தமிழ்ப்படம். என்று அப்பட இயக்குநர் வம்சி படிபள்ளி கூறியிருப்பதுதான். அப்படியானால் ‘வாரிசு’ டப்பிங் படம்தானே என்று இப்போது குடைச்சல் ஆரம்பித்திருக்கிறது.
டப்பிங் படமான ‘வாரிசுடு’வுக்கு பதிலாக அதே நாட்களில் வெளியாகும் நேரடி தெலுங்குப்படங்களுக்கு அதிக திரையரங்குகளை ஒதுக்குங்கள் என பேச்சுகள் எழ ஆரம்பித்திருக்கிறதாம்.
இதனால் தில் ராஜூ கொஞ்சம் ’டல்’ ராஜூவாக தென்படுகிறாராம்.
Love Marriege இப்போதைக்கு இல்லை – Vishal
விஷால் மீண்டும் காதலில் விழுந்துவிட்டார் என்ற பேச்சு இப்போது அதிகம் எதிரொலிக்கிறது.
அதற்கேற்ற வகையில் ’நிச்சயமாக அரேஜ்ஜிட் மேரேஜ் இல்லை. எனக்கு அது பிடிக்காது. அதனால் காதல் திருமணம்தான். நான் திருமணம் செய்யவிருக்கும் பெண் குறித்து உங்களிடம் எல்லாம் சொல்லிவிட்டுதான் கல்யாணம் செய்வேன்’ என்று விஷால் ஏற்கனவே கூறியிருந்தார்.
இப்போது மீண்டும் திருமணம் குறித்து விஷால் மனம் திறந்து இருக்கிறார்.
‘நடிகர் சங்க கட்டிடம் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த புதிய கட்டிடம் 3500 நட்சத்திரங்கள் மற்றும் மேடைநாடக நட்சத்திரங்களுக்காக கட்டப்படுகிறது. அதனால் இந்த இலக்கை நிறைவேற்றிய பிறகே இனி திருமணம். கட்டிட வேலைகள் நிறைவடைந்த பிறகு எப்போது திருமணம் என்று நான் சொல்கிறேன்.
நானும் என் குழுவினரும் நடிகர் சங்க கட்டிட கட்டுமான பணிகளுக்காக கடுமையாக உழைத்து வருகிறோம். சீக்கிரமே நல்ல செய்தியைச் சொல்கிறேன்’ என்கிறார் விஷால்.
இப்படி சொல்லிவிட்டு, ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் வரை போனதே அது ஏன் என்று முணுமுணுக்கிறது சினிமா ஊடக வட்டாரம்.