No menu items!

மூணாறில் இருந்து மெரீனா வரை – வால்டர் தேவாரம் எளிய வாழ்க்கை!

மூணாறில் இருந்து மெரீனா வரை – வால்டர் தேவாரம் எளிய வாழ்க்கை!

தலைப்பைப் பார்த்தவுடன். கவிதையோ கதை புத்தகமோ என்று நினைத்திருந்தால் நீங்கள் ஏமாத்து போவீர்கள். தமிழ்நாடு காவல்துறை முன்னாள் இயக்குநர் வால்டர் தேவாரம் தன்னுடைய காவல்துறை அனுபவங்களை எழுதியுள்ள புத்தகத்தின் பெயர்தான் அது.

அது ஏன் மூணாறில் துவங்குகிறது தலைப்பு? வால்டர் தேவராத்தின் தந்தை அங்கு தான் எஸ்டேட் அதிகாரியாகப் பணி புரிந்தார். வால்டர் பிறந்து வளர்ந்தது எல்லாம் அங்கு தான். அப்புறம் மெரீனா? வேறொன்றுமில்லை அவர் தமிழ்நாடு சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி யாக பணி புரிந்த அலுவலகம் மெரீனா கடற்கரைக்கு எதிரே உள்ளது. மூணாறுக்கும் மெரீனாவுக்கும் மற்றொரு ஒற்றுமை உண்டு இரண்டுமே இயற்கை அழகை கொண்டது.

நேற்று மாலை சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் ஆபீஸர் மெஸ் வளாகத்தில் உள்ள அழகிய புல் வெளியில் இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா நடந்தது. தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரே நேரத்தில் இந்த புத்தகங்களை வெளியிட்டது கூடுதல் சிறப்பு. ஆங்கிலப் புத்தகம் முழுக்க வால்டரின் கை வண்ணத்தால் உருவானது. இந்த புத்தகத்தை தமிழில் மொழியாக்கம் செய்தவர் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி துக்கையாண்டி.

புத்தகத்தை வால்டர் தேவாரம் வெளியிட முன்னாள் மேற்கு வங்காளம் ஆளுநர் எம்.கே.நாராயணன் பெற்று கொண்டார். இந்த புத்தகத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பன் வேட்டை முதல் தனது பணிக்காலத்தில் நடந்த பல சம்பவங்களை தொகுத்திருக்கிறார். தமிழ்நாடு முதல்வர்களாக இருந்த பக்தவச்சலம், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரிடம் பணியாற்றிய அனுபவங்களையும் எழுதியிருக்கிறார்.

படித்து பார்க்கும் போதுதான் துப்பாக்கியை பிடிப்பதில் மட்டுமல்ல பேனாவிலும் வால்டர் ஒரு ஹீரோ என்பது தெரிந்தது. புத்தக வெளியீட்டு விழா மிக எளிமையாகவும் அதே நேரம் அழகாகவும் நடந்தது. புல்வெளி முழுதும் முன்னாள் இன்னாள் காவல் துறை அதிகாரிகள்.

விழாவுக்கு கோட் சூட்டில் 85 வயதில் இளைஞர் போல் வந்தார் வால்டர் தேவாரம். வால்டர் சாருக்கு வயதே ஆகாதோ என்று பக்கத்தில் இருந்த அதிகாரி முனுமுனுத்தது காதில் விழுந்தது. முன்னாள் இன்னாள் போலீஸ்அதிகாரிகள் அவரோடு நின்று போட்டி போட்டுக் கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டனர். இன்றைக்கும் பட்டித்தொட்டி எல்லாம் ஒரு காவல் அதிகாரி பெயரை சொல் என்றால் வால்டர் என்பார்கள் வேறு யாருக்கும் இந்தப் புகழ் கிடையாது என்றார் ஒர் அதிகார். மீசைக்காரர் வந்து விட்டார் சுட்டு விடுவார் என்று பயந்து ஓடிய கூட்டங்களை நிறைய பார்த்து இருக்கிறேன் என்று சிலாகித்தார் மற்றொரு அதிகாரி.

ஓய்வு பெற்ற பின் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பலர் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது வால்டரை பெருமை சேர்ப்பதாக இருந்தது.

வால்டரைப் பற்றி ஒரு ஐபிஎஸ் அதிகாரி சொன்ன சம்பவம் இது.”

”வால்டர் தேவாரம் வேலூரில் பணிபுரிந்தபோது குடியாத்தம் பக்கத்தில் உள்ள காட்டில் இருந்து ஒரு கரடி ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்துக் கொண்டிருந்தது. இதை கேள்விப் பட்ட வால்டர் அந்த கரடியை வேட்டையாட கிளம்பி விட்டார். வேட்டையாட வருபவர்களைப் பார்த்ததும் கரடி ஒரு குகைக்குள் ஓடி விட்டது. இடுப்பில் கயிறை கட்டிக் கொண்டு குகைக்குள் இறங்கியிருக்கிறார் வால்டர். கரடி வெளியே வந்தால் சுட வேண்டும் என்று ஒரு அதிகாரிக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. வால்டர் இடுப்பில் கட்டியிருந்த கயிறை மேலே இழுக்க சில போலீஸ்காரர்கள் கயிற்றை கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

வால்டர் குகைக்குள் சென்ற கொஞ்ச நேரத்தில் டும் என்ற சப்தம். உடனே பயத்தில் மேலே இருந்த காவலர்கள் கயிறை இழுத்து வால்டரை மேலே தூக்கிவிட்டார்கள். வால்டர் எந்தப் பதற்றமும் இல்லாமல் மேலே வந்தார். வால்டர் சுட்டதில் கரடி இறந்து போயிருந்தது. இதுதான் வால்டரின் துணிச்சல்” என்றார் அந்த அதிகாரி.

”ஐ.பி.எஸ் தேர்வில் இந்தியாவிலே முதல் இடம் பெற்றவர். தனது பணிகாலம் வரை அவருக்கு சொந்த கார் கிடையாது. இப்ப அவர் பயன் படுத்தும் ஜீப் கூட தமிழ்நாடு தடகளம் சங்கத்தின் மூலம் கொடுக்கப் பட்டது. பெரிய உயர் அதிகாரி முதல் சாதாரண கான்ஸ்டபில் வரை ஒரே சமமாகத்தான் பழகுவார்.” என்கிறார் அவருடன் பணிபுரிந்த இன்னொரு அதிகாரி.

சென்னை சேத்துபட்டில் உள்ள ஒரு அப்பார்ட்மென்டில் வால்டர் தேவாரம் இப்போது வசிக்கிறார். சொந்த வீடு கிடையாது. காவல்துறையில் சாதாரண அதிகாரிகூட மிக வசதியாக வாழும் இந்தக் காலத்தில் தமிழ்நாட்டின் முன்னாள் டிஜிபி எளிமையாக சிறு அப்பார்ட்மெண்டில் வசிக்கிறார்.

துணிச்சலுக்கு மட்டுமில்லை, எளிமைக்கும் ஓர் உதாரணம்தான் வால்டர் தேவாரம்.

3 COMMENTS

  1. முற்றிலும் உண்மை. எளிமை நேர்மை thunivuivaigalukku அவருக்கு நிகர் இல்லை என்று சொல்லலாம். காவலர்கள் அவரை தெய்வமாக பார்ப்பார்கள். கலைஞர் அவர்கள் ஒரு முறை ‘ போலீஸ் என்றால் மீசைக்காரன் தான் ‘ என்று சொன்னார். இதை நான் அவரிடம் சொல்லி இருக்கிறேன். அவர் மீது சில விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவை பொறாமை காரணமாக பரப்பப்பட்டவை ஆக இருக்கலாம். அவர் மீது appadiy அவதூறு பரப்பியவர்கள் அனைவரையும் vida அதே காரணங்களில் இவர் மிக நல்லவர். அவர்கள் யாருக்கும் அந்த தகுதி இல்லை. திரு வால்டர் அவர்களை தமிழ் நாடு காவல் துறை என்றும் மறக்க முடியாது.

  2. திரு.வால்டர் தேவாரம் அவர்கள் மாற்று தறனானிகள் மேல் மிக்க கனிவானவர். குறிப்பாக மாற்று தின்னாளி விளையாட்டில் அவர்களை ஈடுபடுத
    த வேண்டும், விளையாட்டு அவர்களுக்கு வாழ்வின் ஓர் அங்கமாக இருக்க வேண்டும் என்பதோடு நில்லாமல் அதற்கான முயற்சி கள் செய்துள்ளார்.

  3. Excellent Sir, but as a Nagercoil person, I didn’t able to accept some statement like he is not having own house, Mr Devaram was married with a very richest family belongs to Nagercoil. but, Devaram Iyya living simplicity life, I highly appreciated his dedications/sincerity etc., during his police duty, he always love South Side peoples to select as Police, thanks : SANKARAVEL SUYAMBHU, COIMBATORE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...