No menu items!

அரிசிக்கு ஓடும் வெளிநாட்டு இந்தியர்கள் – என்னாச்சு?

அரிசிக்கு ஓடும் வெளிநாட்டு இந்தியர்கள் – என்னாச்சு?

அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு இப்போது ஒரு புதிய பிரச்சினை. மூட்டை மூட்டையாய் அரிசி வாங்கி வீட்டில் அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக அமெரிக்காவின் பல பெருநகரங்களில் அரசி வாங்க க்யூவில் நிற்கிறார்கள் இந்தியர்கள். காரணம் வரும் மாதங்களில் அமெரிக்காவில் அரிசி கிடைக்குமா என்கிற அச்சம். அமெரிக்கா மட்டுமில்லாமல் கனடா, இங்கிலாந்து போன்ற இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளிலும் இந்த அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

ஏன் இந்த அச்சம்?

இந்த வருடம் இந்தியாவில் நெல் விளைச்சல் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அரிசி விலை உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. விலையேற்றத்தை தடுப்பதற்காகவும் அரிசி பற்றாக்குறை ஏற்படாமால் பார்த்துக் கொள்வதற்காவும் பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடையினால் வெளிநாட்டில் இந்திய அரிசிக்கு பற்றாக்குறை ஏற்படும். உலக அளவில் அரிசி ஏற்றுமதியில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. உலகத்தின் 40 சதவீத அரிசி இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுவதுதான். இந்தியா தவிர வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்தும் பெரிய அளவில் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போது இந்தியாவிலிருந்து வருடத்துக்கு 22 மில்லியன் டன் அரிசி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதாவது 2.2 கோடி டன் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் ஒரு கோடி டன் பாசுமதி அல்லாத சாதாரண அரிசி. இந்த அரிசி வகைகள் தவிர புழுங்கல் அரிசியும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. புழுங்கல் அரிசிக்கு தடை விதிக்கப்படவில்லை. இந்தியாவிலிருந்து சுமார் 74 லட்சம் டன் புழுங்கல் அரிசி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியர்கள் உலகம் முழுவதும் வியாபித்து இருந்தாலும் அவர்களின் முக்கிய உணவாக அரிசி இருக்கிறது. குறிப்பாக தென்னிந்தியர்களுக்கு அரிசிதான் முக்கிய உணவு. சோறாக சாப்பிடவில்லை என்றாலும் தோசை, இட்லி போன்றவற்றுக்கு அவர்களுக்கு அரிசி தேவைப்படுகிறது.

இந்த வாரம் அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டுகளில் இந்தியர்கள் இஷ்டத்துக்கு அரிசி மூட்டைகளை வாங்கிச் சென்று வீட்டில் அடுக்கி வைத்துக் கொண்டார்கள். அதனால் அமெரிக்காவில் பல கடைகளில் ஒருவருக்கு ஒரு அரிசி மூட்டைதான் என்ற கட்டுப்பாட்டை கொண்டு வந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் இப்போது 9 கிலோ அரிசி மூட்டை 27 டாலர்கள் என்ற விலையில் விற்கப்படுகிறது. அதாவது சுமார் 2200 ரூபாய்.

இந்த விலைக்கு அமெரிக்காவில் அரிசி சாப்பிடாமலேயே இருந்துவிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...