No menu items!

எல்லோருக்கும் இல்லையா? – ஒரு வித்தியாச ‘ஆய்’வு

எல்லோருக்கும் இல்லையா? – ஒரு வித்தியாச ‘ஆய்’வு

சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வதில் கழிப்பறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் உலகில்    420 கோடி பேர்,  அதாவது உலக மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் கழிப்பறை வசதி இல்லாத அல்லது பாதுகாப்பற்ற கழிப்பறையுடன் இருப்பதாக 2019-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.   

சர்வதேச அளவில் கழிப்பறைகளின் நிலை இப்படி இருக்கும் சூழலில், இந்தியாவில் எத்தனை பேர் சுகாதாரமான கழிப்பறைகளை பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றிய ஆய்வு சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளது.  National Family Health Survey கடந்த 2019 முதல் 2021 வரை எடுத்துள்ள இந்த ஆய்வில் பல்வேறு விஷயங்கள் தெரியவந்துள்ளன.

இந்த ஆய்வின்படி இந்தியாவிலேயே சுகாதாரமான கழிப்பறை வசதிகளை அதிகம் கொண்டிருப்பது ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். இந்திய மக்கள்தொகையில் ஜெயின் சமூகத்தினரின் மொத்த எண்ணிக்கை 0.4 சதவீதம்தான். மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் அவர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். மக்கள் தொகையில் மற்ற சமூகத்தினரைவிட குறைவாக உள்ள ஜெயினர்கள், கழிப்பறை வசதிகளைப் பொறுத்தவரை, மற்ற சமூகத்தினரைவிட முன்னணியில் உள்ளனர். ஜெயின் சமூகத்தை சேர்ந்த  மக்களில் 97.6 சதவீதம் பேரின் வீடுகளில் கழிப்பறை வசதிகள் இருப்பதாக National Family Health Survey ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு அடுத்ததாக சீக்கிய மதத்தைச் சேர்ந்த 97.5 சதவீதத்தினரின் வீடுகளில் கழிப்பறை வசதி இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் கிறிஸ்தவ சமூகத்தினர் உள்ளனர் இச்சமூகத்தைச் சேர்ந்த 91.2 சதவீதம் பேரின் வீடுகளில் கழிப்பறை வசதிகள் உள்ளன.

இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமூகங்களில் முதலிடம் வகிக்கும் இஸ்லாமியர்களில் 90 சதவீதம் பேர் கழிப்பறை வசதிகளைப் பெற்றுள்ளனர். பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களில் 87.8 சதவீதம் பேரின் வீடுகளில் கழிப்பறை வசதிகள் உள்ளன.

இந்திய மக்கள்தொகையில் 79.8 சதவீதத்தைக் கொண்டிருக்கும் இந்துக்கள்தான் கழிப்பறை வசதியில் மிகவும் பின்தங்கியுள்ளனர். இந்தியாவில் உள்ள இந்துக்களில் 80.9 சதவீதம் பேர் மட்டுமே வீட்டில் சுகாதாரமான கழிப்பறை வசதியுடன் இருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதர சமூகத்தைச் சேர்ந்தவர்களில் 72.5 சதவீதம் பேரின் வீடுகளில் கழிப்பறை வசதிகள் உள்ளன.

வீடுகளில் கழிப்பறை இருப்பதற்கு மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதற்கு உதாரணமாக தாழ்த்தப்பட்ட  மக்களில் 76.9 சதவீதம் பேரும், பழங்குடியின மக்களில் 68.5 சதவீதம் பேரும் கழிப்பறை வசதிகளைப் பெற்றுள்ளனர்.

கழிப்பறை குறித்து பேசத் தயங்கிய நிலை மாறி தற்போது விழிப்புணர்வு அதிகரித்து வருவது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏராளமான நோய்கள் பரவக் காரணமாக உள்ளது. இதைத் தடுக்கும் நோக்கத்துடன் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை கட்டித் தரும் திட்டம் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டப்படி ஒரு வீட்டில் கழிப்பறை கட்ட ரூ.12,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதில் ரூ.7,200-ஐ மத்திய அரசும், ரூ.4,800-ஐ மாநில அரசும் வழங்குகின்றன. இந்த நிதி உதவியால் கழிப்பறைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...