No menu items!

பாலிவுட்டின் பணக்கார தம்பதி!

பாலிவுட்டின் பணக்கார தம்பதி!

பாலிவுட்டின் பணக்கார ஜோடிகளில் ஒன்று ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் ஜோடி. முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோனின் சொத்து மதிப்பு 314 கோடி ரூபாய். அவரது கணவர் ரன்வீர் சிங்கின் சொத்து மதிப்பு 334 கோடி ரூபாய்.

தம்பதிகள் இருவரும் கோடிக்கணக்கில் சம்பாதிப்பது மட்டுமின்றி, மனதுக்கு பிடித்த வகையில் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தியும் வருகின்றனர். அப்படி அவர்கள் பயன்படுத்தும் பொருட்களில் சில…

119 கோடியில் ஒரு பிளாட்

பாலிவுட் நடிகைகளிலேயே மிக காஸ்ட்லியான பிளாட்டை வைத்திருப்பவர் தீபிகா படுகோன். மும்பையின் பாந்த்ரா பகுதியில் லஷ் ரெசிடென்ஷியல் டவரில் 119 கோடி ரூபாய் மதிப்புள்ள பிரம்மாண்டமான பிளாட்டை வாங்கியிருக்கிறார்கள் தீபிகா படுகோனும், அவரது கணவர் ரன்வீர் சிங்கும். இந்த பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பில் 16, 17 மற்றும் 18-வது மாடிகளைக் கொண்டது இவர்களின் பிளாட். சல்மான் கானின் காலக்ஸி அபார்ட்மெண்டுக்கும், ஷாருக்க்கானின் மன்னட் பங்களாவுக்கும் இடையே இந்த பிரம்மாண்ட பிளாட் அமைந்துள்ளது. தீபிகா – ரன்வீர் சிங் ஜோடியின் பிளாட்டின் மொத்த பரப்பளவு 11,266 சதுரடி.

பாந்த்ராவில் உள்ள பிளாட்டைத் தவிர வொர்லி பகுதியில் உள்ள பிமோண்டே டவர்ஸ் பகுதியிலும் இவர்களுக்கு சொந்தமாக ஒரு பிளாட் உள்ளது. 2,776 சதுரடி பரப்புள்ள இந்த பிளாட்டின் மதிப்பு 16 கோடி ரூபாய்.

கோடிகளில் ஒரு கைக்கடிகாரம்

Tissot Classic Prince பிராண்ட்டின் வைர கைக்கடிகாரத்தை விரும்பி அணிவார் தீபிகா படுகோன். அவரது இந்த கைக்கடிகாரத்தின் மதிப்பு 8 லட்சம் ரூபாய். இவரது கணவர் ரன்வீர் சிங் அணிந்திருக்கும் Franck Muller Vanguard Yachting கைக்கடிகாரத்தின் விலை 2.1 கோடி ரூபாய். வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளதான் இந்த கைக்கடிகாரத்தின் விலை அதிகமாக இருக்கிறது.

சொகுசுக் கார்

ரன்வீர் சிங்குக்கும் அவரது மனைவி தீபிகா படுகோனுக்கும் பிடித்த நிறம் சிவப்பு. அதனால் அந்த நிறத்தில் உள்ள Lamborghini Urus காரைத்தான் அவர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். பல்வேறு சொகுசு வசதிகளைக் கொண்ட இந்த காரின் விலை 3 கோடி ரூபாய். இந்த காரைத் தவிர 88 லட்ச ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் காரையும் அவர்கள் சொந்தமாக வைத்துள்ளனர்.

நிச்சயதார்த்த மோதிரம்:

திருமணத்தின்போது தீபிகா படுகோனுக்கு ரன்வீர் சிங் அணிவித்த மோதிரத்தின் மதிப்பு 2 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. பிளாட்டினத்தில் மரகத் கற்களைப் பதித்து இந்த வைர மோதிரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கைப்பையே 8 லட்சம்

விதவிதமான ஹேண்ட் பேகுகளை (கைப்பைகள்) பயன்படுத்துவது தீபிகா படுகோனுக்கு மிகவும் பிடித்த விஷயம். வெளியில் செல்லும்போது Hermes Birkin பிராண்ட் ஹேண்ட்பேகைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார் தீபிகா படுகோன். அவர் பயன்படுத்தும் ஒரு ஹேண்ட்பேகின் விலை 8 லட்சம் ரூபாய். அவர் பயன்படுத்தும் மற்றொரு வகை ஹேண்ட் பேகான Fendi Dotcom -ன் விலை ரூ.2.52 லட்சம்

வானிடி வேன்

நிகழ்ச்சிகளுக்கோ ஷூட்டிங்குக்கோ போவதாக இருந்தால் விலை உயர்ந்த உடைகளை அணிவது ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் ஜோடியின் வழக்கம். லட்ச ரூபாய் மதிப்புள்ள பல உடைகள் அவர்களிடம் உள்ளன. தீபிகா வழக்கமாக அணியும் Burberry Trench கோட்டின் விலை 1.27 லட்சம்.

படப்பிடிப்புகளுக்கு தீபிகா படுகோன் செல்லும்போது அவர் பயன்படுத்தும் வானிடி வேனில் 3 பகுதிகள் உள்ளன. ஒன்று அவரது தனிப்பட்ட இடம். இரண்டாவது விருந்தினர்களை அவர் சந்திக்கும் சிறு பகுதி. மூன்றாவது பகுதி சமையலறை. இந்த பிரம்மாண்ட வானிடி வேனை வினிதா சைதன்யா என்பவர் வடிவமைத்துள்ளார். இதன் விலை 80 லட்ச ரூபாய்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...