No menu items!

18 வருடங்களுக்குப் பிறகு: பாலா – சூர்யா கூட்டணி

18 வருடங்களுக்குப் பிறகு: பாலா – சூர்யா கூட்டணி

தமிழ்சினிமாவில் முன்னனி இயக்குநர்களுல் ஒருவரான பாலா கடந்த நான்கு ஆண்டுகளாக சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார், காரணம் குடும்ப சூழல். விவாகரத்து சுமூகமாக முடிந்தப் பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். அதன் முதல் படிதான் பாலா- சூர்யா கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம்.

18 ஆண்டுகளுக்குப் பிறகு பாலா-சூர்யா கூட்டணி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் இன்று பூஜையுடன் தொடங்கியிருக்கிறது. ‘சூர்யா 41’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் சூர்யா-ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனத்தின் 19 வது தயாரிப்பு இந்தப் படம்.

சர்ச்சைகள் சூழ்ந்து இருந்ததால் பாலாவை நெருங்காமல் பல ஹீரோக்கள் தள்ளி நிற்க சூர்யா தான் பெரிதும் மதிக்கும் பாலாவுக்கு உதவிக் கரம் நீட்டியிருப்பதாக திரையுலகத்தினர் கூறுகிறார்கள்.

படம் எப்படியிருக்கும் என்று கேட்டால் அவர்கள் சொல்லும் ஒரே விஷயம் இது பாலா ஸ்டைல் ஆக்‌ஷன் படம் என்பது. பாலா பொதுவாய் தனது படங்களில் வழக்கமான கமர்ஷியல் மசாலாவை சேர்க்க மாட்டார். ஆனால் இந்தப் படத்தின் திரைக்கதை கமர்ஷியல் மசாலா பாணியில் அமைந்திருப்பதாக தயாரிப்பு உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே நந்தா, பிதாமகன் திரைப்படங்களில் பாலாவுடம் சூர்யா இணைந்து பணியாற்றியிருக்கிறார். அந்த இரண்டு திரைப்படங்களுமே வித்தியாசமான கதைக் களத்தை கொண்டிருந்தன. பிதாமகன் தேனி பகுதியை சார்ந்திருந்தது. நந்தா ராமநாதபுரப் பகுதியை கதைக் களமாக கொண்டிருந்தது. இந்தப் புதிய படம் கன்னியாகுமரி மாவட்டத்தின் வாழ்வியலை கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதிகளில் தொடங்கப்பட்டு படமாக்கப்பட்டு வருகிறது.

சூர்யாவுக்கு ஜோடியாக முதல் முறையாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார் டோலிவுட்டின் பிரபல ஹீரோயின் கிரித்தி ஷெட்டி அறிமுகமாகிறார். மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா என்ற புதுமுகம்.

ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் மேற்கொள்ள இசையமைக்கிறார் ஜி. வி. பிரகாஷ்.

இந்த புதிய பயணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூர்யா… ‘ மீண்டும் பாலா சாரின் ‘ஆக்க்ஷன்’ சப்தத்தை 18 ஆண்டுகளுக்கு பிறகு கேட்க துவங்கியதால் பெரும் மகிழ்ச்சி. வேண்டும் உங்கள் ஆசிகள்’ என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...