No menu items!

கார் டிரைவருக்கு கிடைத்த 9000 கோடி ரூபாய்!

கார் டிரைவருக்கு கிடைத்த 9000 கோடி ரூபாய்!

இந்த சீனை அப்படியே கற்பனை பண்ணிப் பாருங்க…எப்படியிருக்கும்னு.

உங்க தினசரி வேலைக்கு மத்தியில, மத்தியான நேரத்துல களைப்பா ஒரு குட்டி தூக்கம் போடலாம்னு அசந்து படுத்துட்டு இருக்கறப்போ உங்க மொபைல் ஃபோனுக்கு ஒரு மெசேஜ் வருது. உங்க அக்கவுண்ட்ல 9000 கோடி ரூபாய் கிரேடிட் ஆயிருக்கு அப்டினு,

ஆமாம். ஒன்பதாயிரம் கோடிதான்.

மெசேஜ் வந்த அந்த நொடி உங்க மனநிலை எப்படி இருக்கும் ?

இது உண்மையா பொய்யா? யாராவது நம்மளை வச்சு காமெடி கீமெடி பண்றாங்களா? இது ஏதாவது ஏமாத்து வேலையா?… இப்படி ஆயிரம் கேள்வி வரும். மைண்ட் வேக வேகமா யோசிக்கும்.

உடனே திருப்பியும் அந்த மெசெஜை படிச்சுப் பார்ப்போம். எங்கிருந்து வந்துருக்க்குனு செக் பண்ணுவோம். அனுப்புனது நம்ம பேங்க்தான்னு தெரிஞ்சா….

என்ன என்ன சொல்றான் பாருங்க! இதுலா நடக்குற காரியமா, நடக்கரத பேசு!

இந்த டயலாக் தான் உடனே உங்க நினைவுக்கு வரும்.

ஆனால் இது கற்பனையில்லை. நடந்தது. உண்மையில் இந்த நிகழ்வு சென்னையில், கோடம்பாக்கதில் வாடகை வீட்டில் வசிக்கும் கார் டிரைவராக பணியாற்றும் ராஜ்குமாருக்கு, செப்டம்பர் 9 ஆம் தேதி மதியம் 3 மணியளவில் நடந்தது என்றால் நம்ப முடிகிறதா?

எப்பவும் போல அன்றும் சாப்பிட்டுவிட்டு லேசாக கண் அசரும் வேலையில் அவரது தொலைப்பேசி எண்ணுக்கு அவர் அக்கவுண்ட் வைத்திருக்கிற பேங்கிலிருந்து 9000 கோடி கிரேடிட்டட் என்கிற செய்தி வந்துள்ளது.

முதலில் அவர் அதை நம்பவில்லை, எதாவது ஸ்பேம் மெசேஜாகதான் இருக்கும் என்று நினைத்தார். பிறகு அந்த மெசேஜ், தான் அக்கவுண்ட் வைத்திருக்கிற பேங்கிலிருந்து தான் வந்திருக்கிறது என்று ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறார். இதற்கு முன்னாடி அவரது அக்கவுண்டில் வெறும் 105 ரூபாய் தான் இருந்ததாம்.

உண்மையா என்று செக் செய்ய, 9000 கோடியிலிருந்து 21,000 ரூபாயை தனது நண்பர் அக்கவுண்டிற்கு மாறியிருக்கிறார் ராஜ்குமார்.

அடுத்தநாள் காலையில் அவர் அக்கவுண்ட் வைத்திருந்த TMB ( (Tamilnad Mercantile Bank) பேங்கிலிருந்து ராஜ் குமாரை தொடர்பு கொண்டு தவறுதலாக பணம் மாற்றி அனுப்பிவிட்டோம். அதிலிருந்து பணம் ஏதும் எடுக்க வேண்டாம் என்று தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அந்த வங்கி அதிகாரி ஒருவர், பணம் எடுத்தால் உங்கள் மீது காவல் துறையில் புகார் கொடுக்கப்படும் என்று மிரட்டவும் செய்திருக்கிறார்.

பயந்துப் போன ராஜ்குமார் தனது நண்பர்களுடன் பேசியிருக்கிறார். அவர்கள் தந்த ஆலோசனையின்படி ஒரு வழக்கறிஞரை அழைத்துக் கொண்டு தி.நகர் காவல் நிலையம் சென்றிருக்கிறார்.

எனது அக்கவுண்டில் 9000 கோடி ரூபாய் வந்திருக்கிறது. வங்கியிலிருந்து பேசுகிறார்கள். எனக்கு பயமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். வங்கி அதிகாரிகளையும் காவல் நிலையத்துக்கு வரவழைத்திருக்கிறார்கள். இரு தரப்பினரும் சமரசம் பேசியிருக்கிறார்கள். 9000 கோடியிலிருந்து ராஜ்குமார் எடுத்த 21,000 ரூபாயை திருப்பித் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு ராஜ்குமார் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இறுதியில் ராஜ்குமாருக்கு கார் லோன் தருவதாகவும் அதற்கு முன் பணமாக இந்த 21 ஆயிரத்தை வைத்துக் கொள்ளட்டும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்.

சரி, இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் எப்படி ராஜ்குமார் வங்கிக் கணக்குக்கு வந்தது? டி எம் பி வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு இந்தப் பெரிய தொகையை மாற்றியிருக்கிறார்கள். அப்போது கவனக் குறைவாக அக்கவுண்ட் எண்ணை தவறாக பதிந்ததால் இந்தக் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

சில மணி நேரம் ஒன்பதாயிரம் கோடிக்கு அதிபதியாக இருந்த ராஜ்குமார் இப்போது தனது பழைய வாழ்க்கைக்கு திரும்பிவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...