’வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகியது, பாலாவுக்கோ அல்லது சூர்யாவுக்கோ எந்தமாதிரியான நஷ்டம் என்பது இன்னும் தெரியவில்லை.
பாலா அருண் விஜயை வைத்து, ‘வணங்கான்’ படத்தை தொடந்து விட்டார். சூர்யாவோ அடுத்து லோகேஷ் கனகராஜை வைத்து ‘ரோலக்ஸ்’ படம் பண்ணும் யோசனையில் இருக்கிறாராம்.
ஆனால் இதில் வகையாக மாட்டிக்கொண்டது சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமான கீர்த்தி ஷெட்டிதான்.
தமிழில் ஒரு இடத்தைப் பிடிக்கலாம் என்ற ஆசையோடு வந்தவருக்கு, எதிர்பாராத ஏமாற்றம். சூர்யாவுக்கு ஜோடி இல்லையென்றதும், கீர்த்தி கொடுத்த கால்ஷீட்டை திரும்ப பெற்று கொண்டார்.
ஆனால் இப்போது ‘வணங்கான்’ படத்திலிருந்து பின்வாங்கியது தவறோ என்று குழப்பத்தில் இருக்கிறாராம். அவர் எதிர்பார்த்த மாதிரி பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதனால் இங்குள்ள தனது மேனேஜர் தரப்பை முடுக்கி விட்டிருக்கிறாராம்.
கெத்து காட்டினால் வேலை ஆகாது என்பதை மிகவும் தாமதமாக புரிந்து கொண்ட கீர்த்தி தரப்பு, ஆடித்தள்ளுபடி பாணியில் சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்து இருக்கிறதாம். அதாவது இப்போது கீர்த்தி ஷெட்டியை ஒப்பந்தம் செய்தால் 50 லட்சம் சம்பளம் வேண்டாம். 30 லட்சம் மட்டும் போதும் என்று கமுக்கமாக சொல்கிறார்களாம்.
முப்பது லட்சம் என்றதும் இப்பொழுது இரண்டாம் கட்ட ஹீரோக்கள் தங்களது படங்களில் நடிக்க கேட்க ஆரம்பிக்க, என்ன செய்வது என்று தெரியாமல் கீர்த்தி தரப்பு அதிர்ச்சியில் இருக்கிறதாம்.
#keetthyshetty, #keerthyshetty, #suriya, #vanangaan, #bala,
ரஜினி மகளுக்கு கொடுத்த 35!
’பீஸ்ட்’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், அப்பட இயக்குநர் நெல்சனை மாற்றாமல் தனது ‘ஜெயிலர்’ படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்ததில் ரஜினிக்கு செம மரியாதை.
அதை நன்றாகவே புரிந்து கொண்ட நெல்சன், மற்ற மொழிகளில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களையெல்லாம் ’ஜெயிலர்’ ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அள்ளிக்கொண்டு வந்துவிட்டார்.
ரஜினியின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு, அவர் உடலும் மனமும் நோகாத மாதிரி ஷூட்டிங்கை நடந்தியிருக்கிறார் நெல்சன். இப்போது ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் எடுத்துமுடித்தாகிவிட்டது.
இனி ஜெயிலரை பொறுத்தவரை, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மட்டும்தான் பாக்கி.
இதனால் ரஜினி தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ பக்கம் தனது கவனத்தை திருப்பி இருக்கிறார்.
ரஜினி கால்ஷீட் ரெடி என்றதுமே, இரண்டு வாரங்கள் கழித்து திட்டமிட்டு இருந்த ஷெட்யூலை இப்போது முன்கூட்டியே ஷூட் செய்வதற்கு ஏற்றபடி மாற்றி இருக்கிரார் ஐஸ்வர்யா.
’ஒரே ஷெட்யூலில் முடிச்சிடும்மா’ என்று மகளிடம் ரஜினி கூறியிருக்கிறார்.
’அப்படீன்னா உங்க கால்ஷீட் கொஞ்சம் அதிகம் வேணும்பா’ என்று தந்தையை பாசத்தால் மடக்கியிருக்கிறார் ஐஸ்வர்யா.
’ஓகே. எத்தனை நாள் வேணும்’ என்று ரஜினி ரிலாக்ஸாக கேட்டிருக்கிறார்.
‘ஜஸ்ட் 35 டேய்ஸ் போதும்பா’ என்று ஐஸ்வர்யா கேட்க. உடனே 35 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் ரஜினிகாந்த்.
ரஜினி மொத்தமாக 35 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதால், இப்படத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால், விக்ராந்த் என எல்லா நட்சத்திரங்களின் கால்ஷீட்டையும் மொத்தமாக வாங்கி இருக்கிறார்கள்.
இப்போது சென்னையில் ‘லால் சலாம்’ ஷூட்டிங் பரபரவென போய்கொண்டிருக்கிறது, அடுத்து மைசூர், ஹைதராபாத், புனே என ‘லால் சலாம்’ படக்குழு ரஜினியோடு பறக்க இருக்கிறது.
#rajini, #rajinikanth, #lalsalam, #laalsalaam, #aishwaryarajini, #jailer, #tamilcinema,
IMDb சொல்லும் 10!
திரைப்படங்கள் தொடர்பான தகவல்களை அளிக்கும் பிரபல இணையதளமான ஐஎம்டிபி, இந்த கோடைக்காலத்தில் இந்தியர்கள் அதிக எதிர்பார்புடன் பார்க்க காத்திருக்கும் 10 படங்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 படங்கள் என்றாலும், இந்தப்பட்டியலில் 4 படங்கள் தென்னிந்தியப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
’பாகுபலி’ பட புகழ் பிரபாஸ் நடிக்கும் ‘ஆதிபுருஷ்’, பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸின் ‘சத்ரபதி’, தேஜா சஜ்ஜாவின் ‘ஹனுமன்’, ‘நாக சைதன்யாவின் ‘கஸ்டடி’ என 4 தெலுங்குப்படங்கள் இடம்பெற்று இருக்கின்றன. இவை முறையே 3-வது, 5-வது, 9-வது மற்றும் 10-வது இடங்களைப் பெற்றிருக்கின்றன.
இந்தப் பட்டியலில் நம்மூர் அட்லீ ஷாரூக்கானை வைத்து இயக்கும் ‘ஜவான்’ முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இதற்கு அடுத்து ரன்பீர் கபூர் நடிக்கும் ‘அனிமல்’ படமும், இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்தப் படங்கள் தவிர ’கடார் 2’, ’மைதான்’,. ‘யோதா’ மற்றும் ‘ராக்கி அவுர் ராணி கீ ப்ரேம் கஹானி’ ஆகியப் படங்கள் இடம்பிடித்திருக்கின்றன.
ஆனால் இந்த பட்டியலில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ விஜயின் ‘லியோ’ உட்பட எந்த தமிழ்ப்படமும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#Prabhas #Adipurush, #Chatrapathi, #Hanu-Man, #NagaChaitanya, #Custody #ShahRukhKhan, #Jawan, #Atlee, #RanbirKapoor, #Animal, #Telugumovies, #IMDb,