No menu items!

அம்மாதான் முதல் குரு – சித் ஸ்ரீராம்

அம்மாதான் முதல் குரு – சித் ஸ்ரீராம்

பெரிய ஸ்டாரா, பாடறதுக்காக சென்னைக்கு வந்து போறீங்க. இந்த மேஜிக் எப்படி நடந்தது? இதையெல்லாம் நீங்க எதிர்பார்த்தீங்களா?


‘ஸ்ரீவள்ளி’, ‘என்னடி மாயாவி’ ‘கதைப்போமா’ ‘முதலும் நீ… முடிவும் நீ..’, ‘மறுவார்த்தை பேசாதே’, ‘கதைப்போமா’ என இளைஞர்களின் கனவுப் பாடல்கள் பலவற்றுக்கும் தன் குரலால் உயிர் கொடுத்திருப்பவர் சித் ஸ்ரீராம். ஒரு மாலைப் பொழுதில் அவரைச் சந்தித்தோம்…

வாவ் தமிழா: பல வருஷங்களுக்கு முன்னால 1 வயசுப் பையனா உங்க அம்மாவோட சென்னையில இருந்து கிளம்பிப் போனீங்க. இப்ப ஒரு பெரிய ஸ்டாரா, பாடறதுக்காக சென்னைக்கு வந்து போறீங்க. இந்த மேஜிக் எப்படி நடந்தது? இதையெல்லாம் நீங்க எதிர்பார்த்தீங்களா?

சித்: கர்நாடக இசையை எனக்கு அறிமுகப்படுத்தினதே என் அம்மாதான். அம்மாதான் முதல் குரு அவங்கதான் 3 வயசுல இருந்து எனக்கு கர்நாடக இசையை சொல்லிக் கொடுத்தாங்க. என் அம்மா, அமெரிக்காவுல இசைப் பள்ளி நடத்திட்டு வந்தாங்க. அதனால் எங்க வீட்ல எப்பவும் பாடல்கள் ஒலிச்சுட்டே இருக்கும். எனக்கு இசை ஆர்வம் வர்றதுக்கு அதுவும் ஒரு காரணம்.


எனக்கு 3 வயசு இருந்தப்போ, எங்க ஸ்கூல்ல ஒரு நிகழ்ச்சி நடந்ததாம். அதில பாட வாய்ப்பு கேட்டு நான் அப்பவே அடம்பிடிச்சதா எல்லாரும் சொல்வாங்க. ஆரம்பத்துல, மேடை ஏறினதும் நான் பயப்படுவேன்னு அம்மா நினைச்சிருக்காங்க. ஆனா எனக்கு பயம் வரல. அதுக்கு பதிலா ஒருவித டென்ஷன் இருந்தது. அந்த டென்ஷன் எனக்கு ரொம்பவும் பிடிச்சுப் போச்சு. மைக்ல பாடும்போது என் குரல் ஸ்பீக்கர்ல எதிரொலிக்கிறது மேஜிக் மாதிரி இருந்தது. அப்படித்தான் என் இசைப்பயணம் தொடங்குச்சு.


பிறகு அடிக்கடி சென்னைக்கு வைந்து தாத்தாகிட்ட இசை கத்துக்கிட்டேன். அவர், ஜி.என்.பி யின் மிக பெரிய ரசிகரா இருந்தார். அவரது பாடல்களைப் பற்றி நிறையப் பேசுவார். 6 வயசுல இருந்தே நான் கச்சேரிகளைக் கேட்கத் தொடங்கிட்டேன். அதோட ஜாஸ், ஆர்.என்.பி இசைகளையும் கேட்க ஆரம்பிச்சேன். இப்படி கேட்டுக் கேட்டே அந்தப் பாடல்களையும் கத்துக்கிட்டேன்.

இசைத்துறையில் எனக்கு பெரிய அளவில் ஆர்வம் இருந்ததை என் 13-வது வயசுல தெரிஞ்சுக்கிட்டேன். ட்ரினிடி கல்லூரியில் மியூசிக் புரொடெக்‌ஷன் அண்ட் இஞ்சினியரிங் படிச்சேன். அப்பகூட தென்னிந்திய சினிமால எனக்கு வாய்ப்பு கிடைக்கும்னு நான் நினைச்சுப் பார்க்கல.

ஏ.ஆர்.ரகுமான் இசைக்காக ஆஸ்கார் விருது வாங்கினப்ப விளையாட்டா அவருக்கு ஒரு மெயில் அனுப்பினேன். அவரும் பதில் போட்டார். அந்த சம்பவம் நடந்து ஒரு வருஷத்துக்கு பிறகு அவரோட இசையில் ‘அடியேய்’ பாடலை பாடினேன். அங்கதான் என் திரையிசை பயணம் தொடங்கிச்சு. அப்புறம் நடந்தது எல்லாம்தான் உங்களுக்கே தெரியுமே.

வாவ் தமிழா: நீங்க பாடற பாடல்கள் கர்நாடக இசை ஸ்டைல்ல இருக்கிறதா பலர் சொல்றாங்களே. அது இயல்பாவே நடக்குதா.. இல்லை அந்த மாதிரி பாடச் சொல்லி உங்களை இசையமைப்பாளர்கள் கேக்கறாங்களா?
சித்: இசையமைப்பாளர்கள் கேட்டா பாடுவேன். சில இடங்களில் சங்கதிகள், ஆலாப்புகளைக் கேட்பாங்க. அப்ப அவங்க கேட்ட மாதிரி பாடுவேன்.

வாவ் தமிழா: தமிழ், மலையாளம், தெலுங்குன்னு பல மொழிகள்ல உங்க பாடல்கள் ஒலிக்குது. மத்த மொழிகள்ல பாடும்போது மொழிப் பிரச்சினையை எப்படி சமாளிக்கிறீங்க?

சித்: தமிழிலும் தெலுங்கிலும் தான் அதிக பாடல்கள் பாடியிருக்கிறேன். தெலுங்கு உச்சரிப்புகளை தெரிஞ்சுக்க எனக்கு கொஞ்சம் நாளாச்சு. இசை அமைப்பாளரிடமும், பாடலாசிரியரிடமும் அர்த்தம் கேட்டு பாடுவேன். தெலுங்கு, கன்னட மொழிகளை படிச்சுட்டு வர்றேன். மலையாளம்தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.

வாவ் தமிழா: கர்னாடக சங்கீதம் பாடறதால உங்களை மாடர்ன் பாகவதர்னு கூப்பிடறது உங்களுக்கு தெரியுமா?


சித்:” இல்லை எனக்கு தெரியாது”

வாவ் தமிழா: கல்யாணம் எப்போ?


சித்: தெரியாது சார். இன்னும் சில வருடங்களில் இருக்கும்னு நினைக்கிறேன். எனக்கு இப்பொழுது திருமணம் பற்றி யோசிக்க நேரமே கிடைக்கவில்லை. இசை பற்றி அறியவேண்டியவை இன்னும் நிறைய இருக்கு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...