தமிழ் நடிகைகளில் கொஞ்சம் வித்தியாசமானவர்கள் யார் யாரென்று, கொஞ்சம் யோசித்து பட்டியல் போட்டால், அதில் ‘வெள்ளாவியில் வைத்து வெளுத்தெடுத்தது’ போன்று இருக்கும் தாப்ஸிக்கும் ஒரு இடம் இருக்கும்.
மனதில் பட்டதைப் பட்டென்று சொல்வது, வித்தியாசமான கதைகளில் நடிப்பது, ஆடம்பர அலட்டல் இல்லாமல் பழகுவது என தாப்ஸியின் கேரக்டர் வேறு தளத்தில் இருக்கிறது.
ஒரு உதாரணத்திற்கு, தமிழில் இருந்து ஹிந்திக்கு ஏன் போனீர்கள் என்று கேட்டதற்கு, எவ்வளவு நாள்தான் தமிழில் நடிப்பது. அதான் ஹிந்திக்குப் போனேன். ஹிந்தியில் மட்டும் ரொம்ப நாள் நடித்துகொண்டு இருக்க முடியாதே. தெலுங்குப் பக்கம் வந்தேன். இப்படி நல்ல வாய்ப்புகள் வந்தால் எந்த மொழியிலும் நடிப்பேன் என்றார்.
அப்படிப்பட்ட தாப்ஸியிடம் உங்களைப் பற்றி நீங்களே ‘WOW – 10’ பட்டியலைப் போடுங்களேன் என்று கேட்டால், இப்படி லிஸ்டை நீட்டுகிறார்.
- சினிமா மட்டுமே என் வாழ்க்கை இல்லை. என் வாழ்க்கையில் சினிமா ஒரு பகுதி அவ்வளவே.
- என்னுடைய நெருங்கி வட்டம் மிகச்சிறியது. நான், என் குடும்பம் மற்றும் நண்பர்கள் தவிர வேறு யாருக்கும் இதில் இடமில்லை.
- ஷூட்டிங் இல்லையென்றால், நீண்ட தூரப் பயணம் போவேன். முடிந்த வரை தனியாக பயணம் செய்வதுதான் எனக்கு பிடிக்கும்.
- நான் வெளியே போனால் ஒரு பவுன்ஸரை வைத்து கொள்ளுங்கள் என்கிறார் என்னுடையே மேனேஜர். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. ஏதாவது பப்ளிக் மீட்டிங் போனால் மட்டும், பவுன்ஸர் உதவி தேவைப்படும்.
- என்றைக்குமே நான் ஒரு சுதந்திர பறவைதான்.
- ஸ்குவாஷ் எனக்கு பிடித்த விளையாட்டு. இப்பொழுதெல்லாம் ஸ்குவாஷ் விளையாடுகிறேன்.
- என்னுடைய பிறந்த நாளை என் குடும்பத்துடன் மட்டும்தான் கொண்டாடுவேன்.
- மும்பையில் எனக்கு மொத்தமே 4 நண்பர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கும் சினிமாவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
- சினிமாவில் யாருடனும் நான் வலுக்கட்டாயமாக நட்புப் பாராட்டுவது இல்லை.
- சினிமா துறையைச் சார்ந்தவரை நிச்சயம் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.