No menu items!

ஜெயலலிதா மரணம் : ஓபிஎஸ் பல்டி ஏன்?

ஜெயலலிதா மரணம் : ஓபிஎஸ் பல்டி ஏன்?

தூக்கமில்லாமல் தவிக்கும் எடப்பாடி

“முதல் யுடியூப் வீடியோவே 1 லட்சம் வியூக்களை கடந்ததுக்கு வாவ் தமிழாவுக்கு வாழ்த்துகள்” என்று உற்சாகமாக பாராட்டிக்கொண்டே அலுவலகத்துக்குள் நுழைந்தார் ரகசியா.

“வாம்மா… நம்ம வெப்சைட்டைப் பத்தி என்ன பேசிக்கிறாங்க?’ என்று கேட்டுக்கொண்டே ரகசியாவை வரவேற்றோம். கூடவே வெயிலில் வந்த களைப்பு நீங்க, ஒரு டம்ளர் தர்பூசணி ஜூஸையும் கொடுத்தோம்.

“ஆரம்பமே அமர்க்களமா இருக்கு. இதே வேகம் எப்பவும் இருக்கணும்”னு பேசிக்கிறாங்க என்று சொன்னவாறு ஜூஸைப் பருகினார் ரகசியா.

“முகம் டயர்டா இருக்கே… நைட் தூங்கலியா?”

“வெயில்ல அலஞ்சதால முகம் கொஞ்சம் டயர்டா இருக்கு. மத்தபடி தூக்கத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.

தூக்கம் வராம இருக்கிறதுக்கு நான் என்ன எடப்பாடி பழனிசாமியா?”

“எடப்பாடிக்கு ஏன் தூக்கம் வரலயாம்?”

“எல்லாம் பயம்தான் காரணம். டெல்லி கட்சி மாநில தலைவரோட பேசினத்துக்குப் பிறகுதான் தினமும் ராத்திரி கொஞ்சமாச்சும் நிம்மதியா படுக்கிறாராம். எல்லாத்துக்கும் ரெய்ட் பயம்தான் காரணம். வீட்டுக்கு யாராவது ரெய்டு வந்து தன் மரியாதை கெட்டுப் போயிடுமோன்னு பயப்படறார். பதிலுக்கு அந்த தலைவர், ‘தினமும் ஆளும் கட்சியை என்னைவிட அதிகமாக தாக்கிப் பேசுங்க, இப்படி தாக்கி தாக்கி ஆளும் கட்சிக்கு பீதி கொடுத்து, செல்வாக்கை உடைப்போம்’ ன்னு சொல்றாராம். அண்ணாமலையே அரோகரா என்பதுதான் இப்போது எடப்பாடி பழனிசாமியின் நிலை என்கிறார்கள் கட்சிக்காரர்கள்.”

“ஓஹோ?”

“அதிமுகவோட எம்ஜிஆர் வாக்கு வங்கி கரைஞ்சுட்டதா பாஜக டெல்லி தலைமை நினைக்குது. இலவச பஸ் பயணம் அறிவிப்பு வந்த பிறகு ஏழைப் பெண்களோட ஓட்டு தி.மு.க. பக்கம் சாஞ்சுடுச்சுனு புள்ளிவிவரங்கள் சொல்லுதாம். திரும்பவும் பெண்கள் வாக்கு வங்கி வரணும்னா சசிகலா வந்தாத்தான் முடியும்ன்னு டெல்லி நினைக்க ஆரம்பிச்சிடுச்சுன்னும் தாமரைத் தலைவர் சொல்லியிருக்கார். இது எடப்பாடிக்கு கவலை கொடுக்கிறதாம். இந்த கவலை ஒரு பக்கம் இருக்க அவருடைய இணை தலைவர் டெல்லியில் மகன் மூலம் சொல்றது என்ன, ரகசிய பேச்சுகள் நடக்குதானும் விசாரிச்சிக்கிட்டு இருக்கார். ஆக எடப்பாடிக்கு ரெய்ட், சசிகலானு இப்போ ரெண்டு பயங்கள்.”

ஆறுமுகசாமி ஆணையத்துல ஓ.பன்னீர்செல்வம் ஆஜரானாரே… அதுபத்தி ஏதும் தெரியுமா?”

“ஆறுமுகசாமி ஆணையத்துல ஓபிஎஸ் சொன்னதைப் பத்தித்தான் எல்லா பத்திரிகைகள்லயும் வந்திருக்கே. ஜெயலலிதா மரணத்துல சந்தேகம்னு சொல்லி ஆணையம் அமைக்க காரணமா இருந்த ஒபிஎஸ் இப்போ எனக்கு எதுவும் தெரியாதுனு சொல்லியிருக்கார். செய்திகள்ல தெளிவா வந்திருக்கே. பத்திரிகைகள்ல வராத செய்தி ஒண்ண சொல்றேன். ஆணையத்துல விசாரணை முடிஞ்சதும் ஓ.பிஸ்ஸும் அவரோட பரிவாரமும் மயிலாப்பூர்ல இருக்கிற நியூ உட்லன்ஸ்க்கு போயிருக்காங்க. சொல்லாம கொள்ளாம திடீர்னு 30 பேருக்கு மேல வந்ததால ஓட்டல்காரங்களால சமாளிக்க முடியலையாம். ‘இப்படி திடீர்னு வந்தா சாப்பாடு அரேஞ்ச் பண்ண முடியாது’ன்னு ஓட்டல் நிர்வாகம் சொல்ல… மத்த கஸ்டமர்களை அனுப்பிட்டு எங்களை உக்கார வைங்கன்னு மிரட்டியிருக்காங்க. அதனால ஓட்டல்காரங்களும் வேற வழியில்லாம, சாப்பாடு இல்லைன்னு சொல்லி மத்த கஸ்டமர்களை திருப்பி அனுப்பியிருக்காங்க. இதுல கொஞ்சம் பேரை பாதி சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போதே திருப்பி அனுப்பியிருக்காங்க பாவம்.”

“ஆறுமுகசாமி ஆணையத்துல சசிகலாவுக்கு ஆதரவா ஓ.பன்னீர்செல்வம் பேசியிருக்காரே?

“ஓ.பன்னீர்செல்வத்தோட தம்பி ராஜாதான் கொஞ்ச நாளா சசிகலாவோட நிகழ்ச்சிகளுக்கான திட்டங்களை போட்டுக் கொடுக்கிறாராம். ஓபிஎஸ் இப்ப பல்டி அடிச்சதுக்கு அதுவும் ஒரு காரணம்னு பேசிக்கிறாங்க.”

“2024-ல் நாடாளுமன்றத்தோட சேர்த்து தமிழக சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்கும்னு சிலர் சொல்லிட்டு இருந்தாங்களே…”

“இனி அப்படி பயமுறுத்தற மாதிரி பேசக் கூடாதுன்னு டெல்லி மேலிடம் உத்தரவு போட்டிருக்காம். அதனால பாஜக, அதிமுக தலைவர்கள் இனி அப்படி பேசமாட்டாங்கன்னு நினைக்கறேன்.”

“ரெய்டைப் பத்தி ஏதும் தகவல் உண்டா?”

“தம்பிதுரை உட்பட சில அ.தி.மு.க. எம்.பி.க்கள் சிலர் பிரதமரை சந்திச்சு தங்கள் தலைவர்கள் வீட்டில் ரெய்டு நடத்துவதை நிறுத்த உதவணும்னு கேட்டிருக்காங்க. ஆனா பிரதமர் மறுத்துட்டதாக தகவல். அடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவைப் பார்த்திருக்காங்க. அவர், “பத்து வருடம் ஆட்சியில் இருந்திருக்கீங்கள். அப்ப பழக்கமான அதிகாரிகளை விட்டு தி.மு.க. ஊழல்களை கண்டுபிடியுங்கள். அதை விட்டுவிட்டு இங்கே வருகிறீர்களே”ன்னு சொல்லியிருக்கார். பழைய அதிகாரிகள் இப்போ வாய் திறப்பாங்களான்ற யோசனைல அதிமுகவினர் இருக்காங்க.”

“சசிகலாவுக்கும் தினகரனுக்கும் மோதல்னு செய்திகள் வருதே?”

“நடராஜன் சமாதிக்கு அஞ்சலி செலுத்த சசிகலா போனப்ப தினகரன் அவரோட போகல. அவர் தனியாப் போய் அஞ்சலி செலுத்தி இருக்கார். அதோட நிகழ்ச்சியின்போது தன் கட்சியினர் யாரும் சசிகலாவை வரவேற்று பேசக் கூடாதுன்னு உத்தரவிட்டுருக்கார். திவாகரனோட சசிகலா நெருக்கமா இருக்கிறது தினகரனுக்கு பிடிக்காததுதான் இதுக்கு காரணம். திவாகரன் மகனுக்கு தன் பெண்ணை திருமணம் செய்ய தினகரன் விரும்பினார். திவாகரன் மறுத்தார். பாஸ்கரன் மகனுக்கு திருமணம் செய்துவைத்தார். அன்று முதல் இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லைன்னு சொல்றாங்க.”

“அதிமுகவில சசிகலாவை சேர்க்கிறது எந்த நிலையில இருக்கு?”

“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு கட்சிக்காரங்க பலர் தன்னோட வருவாங்கன்னு உறுதியா நம்பியிருந்தார் சசிகலா. ஆனா தேர்தல் முடிவு வந்து இவ்வளவு நாளாகியும் அதிமுக தலைவர்கள் பெரிய அளவில் தன் பக்கம் வராததால சசிகலா கொஞ்சம் அப்செட்டா இருக்காங்களாம். இருந்தாலும் அவர் மனம் ஆறுதலடையற மாதிரி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக தலைவர்கள் கொஞ்சம் பேர் தஞ்சாவூர்ல சசிகலாவை சந்திச்சு பேசியிருக்காங்க. இதுல எடப்பாடியோட சில நண்பர்களும் அடக்கம்.”

“போக்குவரத்து துறை துணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனை பற்றி ஏதும் தெரியுமா?”

“இதில் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு மிகவும் வேண்டப்பட்டவர் சரியாக மாட்டியிருக்கார். அவர் அள்ளிக் குவிச்ச சொத்துகளைப் பார்த்து அதிகாரிகள் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைஞ்சு போயிருக்காங்க. கூடிய சீக்கிரம் அமைச்சருக்கு கல்தா உறுதின்னு சொல்றாங்க” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது அமைச்சர் ஒருவரிடம் இருந்து போன் வர கையில் எழுதி வைத்திருந்த செய்திகளை டேபிளில் வைத்துவிட்டு புறப்பட்டார்.

அதில் இருந்த சில செய்திகள்:

பிரிந்த இசை ஜோடி

சென்னை, பம்பாய் மட்டுமல்லாமல் சர்வதேச புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி ஒருவரும் ஒரு கட வித்வானும் ஆரம்பத்தில் ஒன்றாக கச்சேரி செய்து வந்தார்கள். ஆனால், சில ஆண்டுகளாக இருவரும் இணைந்து கச்சேரி எதையும் செய்யவில்லை. இதுபற்றி விசாரித்தபோது, சில ஆண்டுகளுக்கு முன் கச்சேரி ஒன்றின் நடுவே மின்சாரம் துண்டிக்கப்பட, கடம் வித்வான் பாடகியின் இடுப்பை கிள்ளிவிட்டதாகவும், அதை கையும் களவுமாகப் பிடித்த பாடகி கடுமையாக கண்டித்ததாகவும், பிரிவுக்கு இதுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

முன்னாள் எம்எல்ஏவின் ஆட்டம்

சத்தியமான அந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருக்கு எப்போதும் சுக்ரதிசைதான். ஆந்திராவைச் சேர்ந்த இவர், ஆரம்பத்தில் கவுன்சிலராக இருந்தார். பிரபலங்களுக்கு கிளுகிளுப்பூட்டி தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்வதில் வல்லவரான இவர், அப்போதே நன்றாக கல்லா கட்டினார். இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினரான இவர், கடந்த ஆட்சிக்காலத்தில் நினைத்ததையெல்லாம் சாதித்தார். அதிமுகவில் இரட்டையர்களும் இவரை ஆதரித்தனர். இப்போது ஆட்சி போன பிறகும் திமுக அமைச்சர் ஒருவரின் தயவால் தனது கிளுகிளுப்பு தொழிலை விரிவுபடுத்தி வருகிறார் என்கிறது அரசியல் வட்டாரம்.

அள்ளிக் கொடுக்கும் நடிகர்

துக்ளக் நடிகரின் தாராளத்தைப் பற்றித்தான் இப்போது கோலிவுட்டில் பேச்சாக இருக்கிறது. தன்னுடன் நடிக்கும் அல்லது நெருங்கிப் பழகும் நடிகைகளுக்கு அள்ளிக் கொடுத்து, அவர்களை தன் பக்கத்தில் வைத்துக்கொள்வது துக்ளக் நடிகரின் வழக்கமாம். சமீபத்தில்கூட கார்ப்பரேட் PR பெண் ஒருவரை இவர் ஆதரித்திருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...