No menu items!

இந்தி தேசிய மொழியா? – சுதீப் Vs அஜய் தேவ்கன்

இந்தி தேசிய மொழியா? – சுதீப் Vs அஜய் தேவ்கன்

மீண்டும் இந்தி சர்ச்சை. இந்த முறை தமிழ் நாட்டில் அல்ல. கன்னட நடிகர் சுதீப்புக்குக்கும் இந்தி நடிகர் அஜய் தேவ்கனுக்கும்.

கன்னட நடிகர் சுதீப் நம் அனைவருக்கும் தெரிந்தவர். நான் ஈ திரைப்படத்தில் ஈயைக் கண்டு அலறும் வில்லனாக நடித்தவர்.

அஜய் தேவ்கனை எளிமையாக, நமக்குப் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் மின்சாரக் கனவு, வேலையில்லா பட்டதாரி 2 படங்களில் நடித்த இந்தி உலகின் ஒரு கால கனவுக் கன்னி கஜோலின் கணவர்.

கேஜிஎஃப்2, புஷ்பா, ஆர்ஆர்ஆர் திரைப்படங்களின் அகில இந்திய வெற்றியைக் குறித்து கன்னட தொலைக்காட்சி ஒன்றில் சுதீப் பேசும்போது,

‘இந்தி இனியும் தேசிய மொழியல்ல, நாம் தென்னிந்தியாவிலிருந்து படமெடுப்பதால் நம்மை பான் இந்தியா (Pan Indian) என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்தியிலும் படமெடுத்து பான் இந்திய திரைப்படம் என்று தென்னிந்திய மொழிகளில் டப் செய்து வெளியிடுகிறார்கள். ஆனால் அவை வெற்றிப் பெறுவதில்லை. ஆனால் நாம் எடுக்கும் படங்கள் இந்தியா முழுவதிலும் வெற்றி பெறுகின்றன’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதைக் கேட்ட இந்தி நடிகர் அஜய் தேவ்கனுக்கு கோபம். தனது கோபத்தை ட்விட்டரில் பதிவிட்டார்.

‘சுதீப் சகோதரரே, இந்தி தேசிய மொழியில்லை என்று கூறுகிறீர்கள். பிறகு ஏன் உங்கள் தாய் மொழியில் எடுக்கும் படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்?

இந்தி இப்போது மட்டுமல்ல, எப்போதுமே இந்தியாவின் தேசிய மொழிதான்; என்று அந்தப் பதிவில் கூறியிருந்தார்.

அதற்கு சுதீப் அளித்த பதிலில், ‘அஜய் தேவ்கன் சார், நான் சொல்ல வந்தது வேறு நீங்கள் புரிந்துக் கொண்டதது வேறு. உங்களை நேரில் பார்க்கும்போது விளக்குகிறேன். நான் கூறியது யாரையும் காயப்படுத்தவோ விவாதங்களை கிளப்பவோ அல்ல’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அது மட்டுமில்லாமல், “நீங்கள் இந்தியில் அனுப்பியது எனக்கு புரிந்தது. நாங்கள் மதித்து, நேசித்து இந்தியை கற்றுக் கொண்டிருக்கிறோம். புண்படுத்துவது என் நோக்கம் இல்லை. ஆனால்,

ஒருவேளை என் பதிலை கன்னடத்தில் எழுதியிருந்தால் என்னவாகியிருக்கும்?

நாங்களும் இந்தியாவில்தானே இருக்கிறோம் சார்?!” என்று தொடர்ச்சியாக மற்றொரு பதிவையும் வெளியிட்டிருந்தார்.

ஆனால் இந்த ட்விட்டர் பதிவுகள் அகில இந்திய அளவில் விவாதங்களை கிளப்பிவிட்டிருக்கிறது.

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தன்னுடைய ட்விட்டர் பதிவில்,

‘இந்தி எப்போதுமே தேசிய மொழி அல்ல, எதிர்காலத்திலும் தேசிய மொழியாகாது.

இந்தியாவின் அனைத்து மொழிகளையும் மதிக்க வேண்டும். ஒவ்வொரு மொழிக்கும் ஒரு வரலாறு இருக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இன்றைய கர்நாடக முதல்வர் பொம்மையும் சுதீப்பை ஆதரித்திருக்கிறார். ‘நமது நாடு மொழிகள் அடிப்படையில் மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. சுதீப் சொன்னது சரிதான். அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். பாஜக தலைவரிடமிருந்தே இந்தக் கருத்து வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

குமாரசாமி இன்னும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ‘அஜய் தேவகன் பாஜகவின் குரலாக உளறியிருக்கிறார். ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு வரி என்ற இந்தி தேசியவாதத்தின் அடிப்படையில் இப்படி கூறப்பட்டிருக்கிறது. இந்தி படங்களைவிட கன்னடப் படங்கள் வளர்ந்திருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார்.

இந்த இந்தி தேசிய மொழி விவாதம் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

ஒரு காலத்தில் அஜய் தேவகன் நடித்த விமல் என்ற பாக்கு விளம்பரத்தையெல்லாம் நோண்டி எடுத்திருக்கிறார்கள் நெட்டிசன்கள். அந்த விளம்பரம் இந்தியில் எடுக்கப்பட்டு கன்னடத்தில் டப் செய்யப்பட்டுள்ளது. அப்போது மட்டும் கன்னடம் தேவையா? தேசிய மொழி இந்தி என்று இந்தியிலேயே வெளியிட்டிருக்க வேண்டியதுதானே? என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இந்திய அரசமைப்பு சட்டத்தில் இந்தி தேசிய மொழி என்று குறிப்பிடப்படவில்லை. அரசமைப்பு சட்டத்தின் 343 பிரிவு இந்தி குறித்து தெளிவாக கூறுகிறது.

  1. Official language of the Union
    (1) The official language of the Union shall be Hindi in Devanagari script The form of numerals to be used for the official purposes of the Union shall be the international form of Indian numerals
    (2) Notwithstanding anything in clause ( 1 ), for a period of fifteen years from the commencement of this Constitution, the English language shall continue to be used for all the official purposes of the Union for which it was being used immediately before such commencement: Provided that the president may, during the said period, by order authorise the use of the Hindi language in addition to the English language and of the Devanagari form of numerals in addition to the international form of Indian numerals for
    any of the official purposes of the Union
    (3) Notwithstanding anything in this article, Parliament may by law provide for the use, after the said period of fifteen years, of
    (a) the English language, or
    (b) the Devanagari form of numerals, for such purposes as may be specified in the law

    இந்தப் பிரிவின்படி இந்தி அலுவல் மொழியாகதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்திப் பிரியர்கள், இந்தியை திணிக்க விரும்புகிறவர்கள் இந்தியை தேசிய மொழி என்றே குறிப்பிட்டு வருகிறார்கள்.

இந்தியாவில் இந்தி அதிகம் பேரால் பேசப்படுகிறது என்ற வாதமும் வைக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இந்தி பேசப்படுவதில்லை.

2011ல் எடுக்கப்பட்ட சென்சஸ் கணக்குபடி இந்தியாவில் 43.63 சதவீதத்தினர் இந்தி மொழி பேசுகிறார்கள். 56.37 சதவீதத்தினர் வேறு மொழி பேசுகிறார்கள்.

உத்தரப்பிரதேசத்திலும் உத்தரகாண்ட் மாநிலத்திலும் டெல்லி, ஹிமாச்சலபிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில்தாம் மிக அதிகப்படியாக 96 சதவீத மக்கள் இந்தி பேசுகிறார்கள்.

உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ஹரியானா, ஜார்கண்ட், ராஜஸ்தான், உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம், சத்திஸ்கர் ஆகிய 9 மாநிலங்களில் மட்டுமே இந்தி அதிகார மொழியாக இருக்கிறது.

28 இந்திய மாநிலங்களில் 9 மாநிலங்களில் மட்டுமே இந்தி அதிகாரப்பூர்வ மொழி. மற்ற 19 மாநிலங்களில் அந்தத மாநில மொழிதான்.
இதுதான் இந்தியாவில் இந்தியின் நிலை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...