No menu items!

அமலா பால் ’டும் டும் டும்’ எப்போது?

அமலா பால் ’டும் டும் டும்’ எப்போது?

கடந்த வாரம் அமலா பாலின் பிறந்த நாளன்று அவரது பயணத் துணைவரான ஜகத் தேசாய், வாழ்க்கை துணையாக மாற விரும்புகிறேன் என்று முழங்காலிட்டு காதலை சொன்னார்.

சிங்கிளாக இருக்கும் அமலா பாலும் வாழ்க்கையில் டபுள் ஆக தயார் என சொல்ல, இப்போது அமலா – ஜகத் ஜோடிதான் வைரலாகி வருகிறது.

அமலா பாலும், ஜகத் தேசாயும் ஒரு ஆடம்பர ஹோட்டல் பாத்ரூமில், மெழுகுவர்த்திகளை எரிய விட்டு விட்டு, கூல் ஆக போஸ் கொடுத்து, இணையத்தில் சூட்டைக் கிளப்பியிருக்கிறார்கள்.

32 வயதாகும் அமலா பால் மீண்டும் திருமணம் செய்து கொள்ள தயாராகி விட்டாலும், இப்போது உடனடியாக திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் இல்லையாம்.

குறைந்தப்பட்சம் மூன்று மாதங்களாவது ஜகத் தேசாய் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ள கால அவகாசம் கேட்கிறாராம். பிக்பாஸ் மாதிரி 100 நாட்கள் இருந்தால், அவரைப் புரிந்து கொள்ள முடியும் என டேட்டிங் மூடுக்கு மாறியிருக்கிறாராம்.

கடந்த திருமணத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு, அதற்குப் பிறகு ஆண் நண்பர் பவ்நிந்தர் உடனான கோபம் போன்ற நிகழ்வுகள் மீண்டும் தன் வாழ்வில் நிகழ்ந்துவிடக்கூடாது என அமலா பால் கவனத்தோடு இருக்க விரும்புகிறார் என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரம்.

யார் இந்த ஜகத் தேசாய் என்று விசாரித்தால், இவர் குஜராத் ஆசாமி, வைரங்களுக்குப் புகழ்பெற்ற சூரத்தில் பிறந்தவர். டூரிஸம் மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி துறையில் இருப்பவர். இப்போது கோவாவில் செட்டிலாகி இருக்கிறார். வடக்கு கோவாவில் இருக்கும் லக்ஸ் ஹோம்ஸ்டே நிறுவனத்தில் சேல்ஸ் ஹெட் ஆக பணிப்புரிகிறார். டூர், பார்ட்டி என ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் போகும் இவரது வாழ்க்கையில், இப்போது அமலா பாலும் இணையவிருக்கிறார்.


தனுஷா? நயன்தாராவா? – குழப்பத்தில் நெல்சன்!

’பீஸ்ட்’ என்ற ஒரே படம்தான். அதற்கு முன்பு கொடுத்த ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ மாதிரியான ஹிட் படங்களைக் கொடுத்த நெல்சனை கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் தூக்கி கடாசிவிட்டார்கள்.

அடுத்து களத்திள் இறக்கிவிட்ட ‘ஜெயிலர்’ பாக்ஸ் ஆபிஸில் ரவுண்ட் கட்டி அடிக்க, இப்போது நெல்சனைப் பற்றி கமெண்ட் அடித்தவர்கள் கூட அடங்கிப் போய்விட்டார்கள்.

’ஜெயிலர்’ எடுக்கும் போது நெல்சனுக்கு இருந்த அழுத்தத்தை விட, இப்போதுதான் அவருக்கு பெரும் அழுத்தம் இருப்பதாக கூறுகிறார்கள்.

நெல்சன் அடுத்து யாரை வைத்து படம் இயக்கப் போகிறார். யாருக்காக கதை தயார் செய்திருக்கிறார் என்று ஒரு எதிர்பார்பு ஆரம்பமாகி இருக்கிறது.

மாமனாரை வைத்து இயக்கிய நெல்சன் அடுத்து மருமகன் தனுஷை வைத்து படம் இயக்கும் எண்ணத்தில் இருப்பதாக தெரிகிறது.

தனுஷ் கைவசம் தமிழ், தெலுங்கு, ஹிந்திப் படங்கள் இருக்கின்றன. இந்தப் படங்களின் ஷூட்டிங்குகளுக்காக மாறி மாறி பறந்து கொண்டிருக்கிறார். இதனால் தனுஷின் கால்ஷீட்டை முதலில் கைப்பற்ற நெல்சன் தரப்பு மும்முரமாக காட்டுகிறதாம்.

தனுஷ் பக்கமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றால், தனது ஃபேவரிட் நயன்தாராவை வைத்து களத்தில் இறங்கிவிடலாமா என்றும் நெல்சன் யோசிக்கிறாராம்.

நயன்தாராவிற்காக ஒரு ஹீரோயின் கதையும் நெல்சன் வசம் ரெடியாக இருக்கிறதாம்.

தனுஷா இல்ல நயன்தாரா என்ற குழப்பத்தினால்தான் நெல்சன் தனது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருப்பதாக பேச்சு அடிப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...