No menu items!

20 வருடங்கள் இளமையின் இளவரசி திரிஷா

20 வருடங்கள் இளமையின் இளவரசி திரிஷா

நடிகை திரிஷா சினிமாவுக்கு வந்து 20 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டன என்று இணையத்தில் ரசிகர்கள் பட்டாசு வெடித்தது போல  கொண்டாடி வருகிறார்கள்.  அவரது திரைப்படங்களின்  கதைகலையும், பாடல்களையும் வரிசைப்படுத்தி  அவருக்கு வாழ்த்து சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் திரிஷாவின் அடுத்து என்ன படங்களில் நடிக்க இருக்கிறார் என்கிற யூகங்களையும் கிளமி வருகிறது.  

பொதுவாகவே நடிகைகளின் அதிகபட்ச திரைப்படங்கள் 10 திரைப்படங்களாகவே இருக்கும். அதன் பிறகு  காதலில் விழுவார்கள் அல்லது தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு குழந்தைகளுடன் இல்லற வாழ்க்கையில் இறங்கி விடுவார்கள். நடிகைகளுக்கு திருமணம் ஆன தகவல் தெரிந்தவுடன் சினிமா வாய்ப்புகள் குறைந்து விடும்.

திரிஷா திரைவாழ்க்கை அப்படியில்லை.  மிஸ் சென்னையாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு கவனத்தை ஈர்த்தாலும் சினிமாவில் அவர் நடித்தது துணை நடிகை போன்ற ஒரு வேடத்தில்தான் ஜோடி என்ற படத்தில்  ஜோதிகா நாயகியாக நடிக்க அவருடன் ஒரு பாடல்; காட்சியில் ஓரமாக நின்று நடனம் ஆடுவார். அதன் பிறகு ஜோதி கிருஷ்ணா படத்தில்   தமன்னா முதல் நாயகியாக நடிக்க இரண்டாம் நாயகியாக திரிஷா நடித்திருந்தார். இப்படி சினிமா வாழ்க்கையில் முதல் படத்திலிருந்தே போராடித்தான் நடிக்க வேண்டியிருந்தது. எப்போதும் புன்னகைக்கும் அவரது முகம் எப்போதும் அவரை இளமையாகக் காட்டி கொண்டிருப்பதால்  இன்று 20 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் முக்கிய இடத்தில் இருந்து கொண்டிருக்கிறார்.

அமீரின் மௌனம் பேசியதே படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து நடித்த பிறகு முன்னணி  நாயகர்களின் படங்களில் வாய்ப்பை பெற்றார் திரிஷா.

கடந்த பத்து ஆண்டுகளில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்து விட்டார். திரிஷாவுக்கென்று ரசிகர்கள் கூட்டமும் உருவாகியது. அதே போல அவருக்கு எதிரான கிசுகிசுக்களும் வலம் வரத்தொடங்கியது. ஆனால் சினிமாவில் பிரபலமானால் அதற்கு கொடுக்கும் விலை இந்த கிசுகிசுஎன்பதை தெளிவாக தெரிந்து வைத்திருந்தார். அதனால் அவர் இதையெல்லாம் புறந்தள்ளி விட்டு திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து  தனது தேவையை திரையுலகில் புரிய வைத்தது.

சினிமா மட்டுமல்லாமல் விலங்குகளை பராமரித்தால், தெருநாய்களுக்கு அடைக்கலம் கொடுத்தல் என்று சமூகப் பணிக்காகவும் நேரம் ஒதுக்கினார். இவரது பணிகளைப் பார்த்த யுனிசெப் நிறுவனம் திரிஷாவை தனது தூதராக நியமித்தது. பெண் குழந்தைகளின் கல்வி, பெண் சிசு மரணத்தை தடுத்தல், பிராணிகள் பாதுகாப்பு என்று பல்வேறு  வேலைகளில் ஈடுபடுத்தியது. எப்போதும் பரபரப்பாக இயங்கினார்.

கிசிகிசுவாக ராணா, டகுபதியுடனான காதல் என்றும், சிம்புவோடு திருமணம் என்றும் பல யூகங்கள் கலந்து கட்டி அடித்தன. விஜய்யுடனான நட்புதான் அவரது திருமணம் நின்று போனதற்கு முதல் காரணம் என்றும் சொல்லப்பட்டது.  திரைப்படங்களில் நடிப்பதை தீவிரப்படுத்தும் நோக்கில்தான் அவர் திருமணத்தை நிறுத்தினார் என்ற பேச்சும் உண்டு.

சினிமாவைப் பொறுத்தவரைக்கும் திரிஷா எப்போதும் தேடப்படும் நடிகையாகவே இருந்து வருகிறார். இப்போது கூட விஜய் அடுத்து நடிக்க இருக்கும் புதிய படத்தில் திரிஷா நடிக்க இருக்கிறார் என்கிற செய்தி வருகிறது.  வினோத் இயக்கும் இந்தப்படம் விஜய் நடிக்கும் கடைசி படமாக இருக்கும் என்பதால் அதில் நாயகியாக தான் நடிக்க வேண்டும் என்று விஜய்க்கு அழுத்தம் கொடுத்து வருகிறார் திரிஷா. இதில் சமந்தா நடிக்க வேண்டும் என்று இயக்குனர் தரப்பில் முடிவு செய்திருக்கிறார். ஆனாலும் திரிஷாவும் ஒரு நாயகியாக இருக்கும்படி கதையில் மாற்றம் செய்ய சொல்லியிருக்கிறார் விஜய்.

இப்படி திரிஷா 20 ஆண்டுகளாக தன் ஆளுமையை திரையுலகில் காட்டி வருகிறார் என்பது  வேறு எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமையாகவே பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...