விஜயும், லோகேஷ் கனகராஜூம் இணைந்திருக்கும் ‘லியோ’ படம் பற்றி நாளுக்கு நாள் ஏதாவது பரபரப்பை கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இதனால் படம் முடிவதற்குள்ளாகவே போட்ட பணத்தை எடுத்துவிடுவார்கள் என்கிறார்கள். அந்தளவிற்கு எல்லா அம்சங்களிலும் வியாபாரம் சூடுப்பிடித்திருக்கிறது.
’லியோ’ படம் ஷூட்டிங் இன்னும் முற்றிலும் முடியவில்லை. ஆனாலும் விஜயின் அடுத்தப்படத்தை இயக்கப் போவது யார் என்று இணையத்தில் சூடான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
’வாரிசு’ படத்தை இயக்கிய வம்சி பைடிப்பள்ளியுடன் மீண்டும் விஜய் இணைகிறார். இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கப்போகிறார் என்று முதலில் பேச்சு அடிப்பட்டது.
அடுத்து விஜய் மீண்டும் அட்லீயுடன் இணைய ஒகே சொல்லிவிட்டார் என்றார்கள்.
இப்போது தெலுங்கில் ’வீரசிம்ம ரெட்டி’ படத்தை இயக்கிய இயக்குநர் கோபிசந்த விஜய்க்கு கதை சொல்லியிருப்பதாக சொல்கிறார்கள்.
ஆனால் விஜயின் எதிர்கால திட்டங்களில் இது எதுவும் இப்போதைக்கு இல்லை என்பதே லேட்டஸ்ட் பரபரப்பு.
பொதுவாகவே தனது படம் முடியும் தரும்வாயில் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவது விஜ்ய நீண்ட காலமாக பின்பற்றி வரும் வழக்கம்.
ஆனால் விஜய் அப்படியொரு அறிவிப்பை இப்போது வெளியிட விரும்பவில்லையாம். ’லியோ’ படத்திற்குப் பிறகு யாருடைய இயக்கத்திலும் நடிக்கப் போவதில்லையாம்.
அப்படியானால்….விஜயின் திட்டம் என்ன??
விஜய் சினிமாவிற்கு ஒரு தற்காலிக முழுக்கு போட இருக்கிறாராம். அதாவது 2024 ஜூன் வரை ப்ரேக் எடுக்கும் திட்டமிருக்கிறதாம்.
அக்டோபர் மாதம் லியோ ரிலீஸ். அதற்கு பிறகு இப்பொழுது அஜித் தனது அடுத்தப் படத்திற்கு எடுத்து கொண்டிருக்கும் நேரத்தைப் போலவே நான்கைந்து மாதங்கள் ப்ரேக் எடுக்க நினைக்கிறாராம். ஸ்கிரிப்ட் வேலைகள் இருக்கிறது என்று காரணம் சொன்னாலும், அது திட்டமிட்ட ப்ரேக்காக இருக்கும் என்கிறார்கள்.
ஏன் இந்த தற்காலிக முழுக்கு என்றால், விஜய் வருகிற 2024 தேர்தலில் ஏதாவது ஒரு வகையில் தனது பலத்தை நிரூபிக்க விரும்புவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.
இதை உறுதிப்படுத்தும் வகையில், தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் வாக்குச்சாவடிகள் பற்றிய விவரங்களைக் கேட்டிருக்கிறார். அரசியல் அனுபவம் உள்ள விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி புஸ்சி ஆனந்தை இந்தப்பணிகளில் ஈடுப்பட சொல்லி ரகசிய உத்தரவும் இடப்பட்டிருக்கிறதாம்.
விஜய்க்கு நெருக்கமான வட்டாரம் சொல்லும் இவையனைத்தும் உண்மை என்றால் விஜயின் அரசியல் பிரவேசம் வருகிற ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இருந்து ஆரம்பமாகலாம் என்று தெரிகிறது.
இதனால் விஜயின் அரசியல் பிரவேசம் பற்றிய கூடுதல் தகவல்கள் இன்னும் சில மாதங்களில் வெளியே வந்துவிடும் என்கிறார்கள்.
நயன்தாரா சம்பளம் இத்தனை கோடியா?
ஒயின் இருக்கிறதே அதற்கு நாட்கள் ஆக ஆகதான் மதிப்பு அதிகம். எத்தனை ஆண்டு பழையதோ அந்தளவிற்கு மவுசு அதிகம்.
அப்படியொரு ஒயினைப் போலதான் இருக்கிறார் நயன்தாரா.
திருமணமானப் பிறகு தன்னுடைய காதலரான விக்னேஷ் சிவனும் அவரும் இணைந்து தொடங்கிய ‘ரவுசி பிக்சர்ஸ்’ மூலம் படத்தயாரிப்பிலும், தான் பார்ட்னராக இருக்கும் லிப் பாம் நிறுவனத்தின் செயல்பாட்டிலும் கவனம் செலுத்துவதாகதான் இருந்தது.
ஆனால் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த சில நாட்களிலேயே, அவருக்கும் பாலிவுட் வாய்ப்பு வந்தது. முதல் படமே பா’லிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் கிங்’ என கொண்டாடப்படும் ஷாரூக்கானுடன் என்றதுமே, தன்னுடைய திட்டத்தை எல்லாம் தள்ளிவைத்துவிட்டார்.
இதனால்தான் திருமணம் முடிந்து தேனிலவுக்குச் சென்ற நயன் – விக்கி ஜோடி போன வேகத்திலேயே ‘ஜவான்’ பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ள திரும்பி வந்தது.
பாலிவுட்டில் திருமணமான பிறகு அறிமுகமானாலும், நயன்தாராவுக்கு அங்கே ராஜ மரியாதைதான்.
ஒரே காரணம் அட்லீ.
தனது ‘ராஜா ராணி’ படம் பெரிய அளவிற்கு மாற காரணமே அந்த ப்ராஜெக்ட்டில் நயன்தாரா எண்ட்ரீ ஆனதுதான். அதே சென்டிமெண்ட்டைதான் தனது பாலிவுட் எண்ட்ரீக்கும் அட்லீ எதிர்பார்த்தாராம்.
இதற்கு ஷாரூக்கானும் உடனே ஒப்புக்கொண்டிருக்கிறார். ஷாரூக்கான் உடனே இதற்கு தலையாட்ட காரணம், ‘ஜவான்’ படத்தை பான் – இந்தியா படமாக வெளியிடும் திட்டமிருக்கிறது. நயன்தாரா நடித்தால் தென்னிந்திய சினிமாவில் எளிதில் வியாபாரம் செய்துவிடலாம் என்பதுதான்.
இப்படி ஆளாளுக்கு ஒரு காரணம் இருந்தாலும், நயன்தாராவுக்கு வருஷம் போக போகதான் மவுசு எகிறிக்கொண்டே போகிறது என்பதற்கு உதாரணம் ‘ஜவான்’ படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம்.
நயன்தாராவுக்கு சம்பளம் எட்டு கோடி என்கிறார்கள்.
சும்மா ஒன்றும் எட்டு கோடி கொடுக்கவில்லை, ‘ஜவான்’ படத்தில் நயனுக்கு டூ பீஸ் நீச்சல் உடை காட்சியும் இருக்கிறது என்று பாலிவுட் வட்டாரம் கொளுத்திப் போட்டிருக்கிறது.
மருமகளை ஓரம் கட்டிய சோழர்கள்
’பொன்னியின் செல்வன் 2’’ படம் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாக உள்ளது. இதனால் இப்படத்தின் ப்ரமோஷன் பரபரவென போய் கொண்டிருக்கிறது.
கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சோபிதா துலிபாலா என பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் ப்ரமோஷனுக்காக இந்தியாவின் முக்கிய நகரங்களுக்குப் பறந்தபடி இருக்கிறார்கள்.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியான போனது, முழுவீச்சில் ப்ரமோஷன் செய்யாததால் வட இந்திய மார்க்கெட்டில் இப்படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. இதனால் மணி ரத்னம் இந்த முறை சோழர்களை பறந்தபடியே பிஸியாக இருக்க வைத்திருக்கிறார்.
இந்த ப்ரமோஷனில்தான் சோழர்கள் கொஞ்சம் ஓரவஞ்சனை காட்டியதாக கமெண்டகள் கிளம்பியிருக்கின்றன.