No menu items!

கவுதம் அதானியின் மறுபக்கம்

கவுதம் அதானியின் மறுபக்கம்

இன்றைய காலகட்டத்தில் கவுதம் அதானியைப் பற்றி தெரியாத இந்தியர்கள் இருக்க முடியாது. நம் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஏதாவது ஒரு வர்த்தகத்தையோ அல்லது தொழிலையோ அதானியின் நிறுவனம் செய்து வருகிறது. உலகின் முன்னணி பணக்காரர்கள் வரிசையில் முதல் 5 இடங்களுக்குக்குள் மாறி மாறி வரும் நபராக அதானி இருக்கிறார்.

இப்படி ஒரு தொழிலதிபராக அதானியைப் பற்றி நிறைய தெரிந்திருந்தாலும், தனி நபராக அவரைப் பற்றி பலருக்குத் தெரியாது. அம்பானி, டத்தன் டாடா, அசிம் பிரேம்ஜி, இன்போசிஸ் நாராயணமூர்த்தி போன்ற பணக்காரர்களின் தனிப்பட்ட விஷயங்கள் தெரிந்த அளவுக்கு அதாபியின் தனிப்பட்ட விஷயங்கள் பலருக்கும் தெரியாது.

அதானியின் மறுபக்கத்தை மக்களுக்கு தெரிவிக்கும் விதமாக ‘Gautam Adani: Reimagining Business in India and the World ’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் ஆர்.என்.பாஸ்கர். இந்தப் புத்தகத்தில் வெளியில் தெரியாத பல செய்திகள் இருக்கின்றன.

அதானியின் திருமணம்:

மிகப்பெரிய தொழிலதிபர் ஆகவேண்டும் என்ற கனவுகளுடன் இருந்த கவுதம் அதானிக்கு தனது மகளைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார் அகமதாபாத்தைச் சேர்ந்த செவந்திலால். அவரது மகள் பிரீத்திபென் அப்போது பல் மருத்துவம் படித்துக்கொண்டிருந்தார். அதானியோ அப்போது பட்டப் படிப்பைக்கூட முடித்திருக்கவில்லை.

இந்த நேரத்தில் கவுதம் அதானியை திருமணம் செய்வது பற்றி பிரீத்திபென்னிடம் கேட்டிருக்கிறார் செவந்திலால். ஆனால் படிப்பைக்கூட முடிக்காமல் இருக்கும் கவுதம் அதானியை, அபோது பிரீத்திக்கு பிடிக்கவில்லை. அதனால் அவரைத் திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

ஆனால் மகளின் பேச்ச்சைக் கேட்டு உடனே திருமணப் பேச்சை நிறுத்த செவந்திலால் தயாராக இல்லை. மாறாக பிரீத்திபென்னுடன் பேசினார். ‘ஒரு நாள் நீயும் கவுதம் அதானியும் தனியாக ஓர் இடத்தில் சந்தித்துப் பேசுங்கள். அப்படி அவரிடம் பேசினால் உனக்கு நிச்சயம் அவரைப் பிடிக்கும். அந்த சந்திப்புக்கு பிறகு திருமணம் தொடர்பாக நீ என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார்.

பின்னர் அவர்கள் இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர். அந்த சந்திப்பில் பிரீத்திக்கு கவுதம் அதானியைப் பிடித்துப் போக, இருவருக்கும் இடையே 1986-ம் ஆண்டு மே 1-ம் தேதி திருமணம் நடந்துள்ளது.

வீட்டில் பிஸினஸ் இல்லை:

திருமணம் முடிந்த காலட்டத்தில், தனது வர்த்தக வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் இருந்தார் கவுதம் அதானி. அதனால் மற்ற கணவர்களைப் போல் மனைவியுடன் ஊர் சுற்ற அவருக்கு அதிக நேரம் கிடைக்கவில்லை. அதேசமயம் வீட்டுக்கு வந்தபின் வேலையைப் பற்றி சிந்திக்கவே மாட்டார். வீடு தொடர்பான விஷயங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார். குடும்ப உறுப்பினர்களுடனும், வீட்டுக்கு வரும் உறவினர்களுடனும் நன்றாக நேரத்தைச் செலவிடுவார்.

நஷ்டங்களைப் பற்றி கவலையில்லை:

பொதுவாக ஒரு பிஸினஸில் தவறு ஏற்பட்டு நஷ்டம் வந்தால், அதைப்பற்றி கவலைப்பட்டுக்கொண்டே இருப்பது பிஸினஸ்மேன்களின் வழக்கம். இந்த கவலையால் அடுத்த சில நாட்களுக்கு அவர்களுக்கு வேலையே ஓடாது. ஆனால் கவுதம் அதானி அதற்கு நேர் எதிரானவர். வர்த்தகத்தில் ஏதாவது நஷ்டம் ஏற்பட்டால் அதைப்பற்றி கவலைப்பட மாட்டார். ‘நடந்தது நடந்துவிட்டது. நாம் அடுத்த வேலையைப் பார்ப்போம்’. என்று வேறு விஷயத்தில் கவனத்தைத் திருப்புவார்.

தவறுக்கு மன்னிப்பே தண்டனை:

தன்னைப் போலவே தனது வேலையாட்கள் ஏதாவது தவறு செய்தாலும், அதைப்பற்றி அவர் கவலைப்படுவதோ, அதற்காக அவர்களைத் திட்டுவதோ இல்லை. ‘ஒரு தவறு செய்துவிட்டால், அப்படிச் செய்தவரை கூப்பிட்டு ஆலோசனை வாழங்க வேண்டும். மாறாக அவரைக் கூப்பிட்டு திட்டினால், அந்த தவறு சரியாகிவிடுமா?’ என்று கேட்பாராம் கவுதம் அதானி.

ஒருமுறை தனது தவறால் அதானிக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திய ஊழியர் ஒருவர் பதவி விலக எண்ணியுள்ளார். ஆனால் அதற்கு கவுதம் அதானி சம்மதிக்கவில்லை. அவரை மன்னித்த அதானி, அவரை பணியில் தொடருமாறு சொல்லியுள்ளார். அந்த ஊழியர் இப்போதும் அதானியின் நிறுவனத்தில் ஒரு முக்கிய பொறுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

விசுவாசிகளை உருவாக்குதல்:

தன்னைச் சுற்றி விசுவாசமான ஒரு கூட்டம் எப்போதும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் அதானி. அதனாலேயே விசுவாசிகளை உருவாக்க, அவர்களுக்காக பல உதவிகளைச் செய்வார். தன்னுடன் கூட்டாளியாக ஒரு வர்த்தகத்தில் இணைந்த நபர், அதனால் நஷ்டமடைந்தால் அவருக்காக வருத்தப்படுவது கவுதம் அதானியின் இயல்பு. அவருக்காக ஏதாவது செய்தாக வேண்டும் என்று யோசித்துக்கொண்டே இருப்பார். முடிந்தால் தனது அடுத்த பிஸினஸில் அவரையும் ஒரு பங்குதாரராக சேர்ப்பார்.

மனைவியின் துணை:

வர்த்தக உலகில் இன்று கவுதம் அதானி ஒரு ராஜாவாக இருப்பதற்கு அவரது மனைவி பிரீத்திபென்னும் ஒரு காரணம். அதானி வர்த்தகத்தைக் கவனிக்க, பிரீத்திபென் முழுமையாக குடும்பத்தைக் கவனித்தார். இதனால் வீட்டு விஷயங்களைப் பற்றி அதானி அதிகம் கவலைப்படாமல் இருந்தார். அதானியின் மூத்த மகன் கரணுக்கு இப்போது 36 வயதாகிறது. அமெரிக்காவில் பொருளாதாரம் படித்த அவர், தற்போது APSEZ நிறுவனத்தில் சிஇஓவாக இருக்கிறார்.

இளைய மகன் ஜீத்துக்கு 29 வயதாகிறது. இவர் அதானியின் நிதிக் குழுமத்தில் துணைத் தலைவராக இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...