No menu items!

டி20 உலகக் கோப்பை – இந்தியாவுக்கு கை கொடுக்குமா மழை?

டி20 உலகக் கோப்பை – இந்தியாவுக்கு கை கொடுக்குமா மழை?

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே இன்று நடக்கவுள்ள அரை இறுதி ஆட்டத்தின்போது மழை குறுக்கிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் மழை குறுக்கிட்டால் இறுதிப் போட்டிக்கு யார் தேர்வு பெறுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இன்று இரவு 8 மணிக்கு கயானாவில் நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியின்போது மழை பெய்ய 58 சதவீதம் வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மழையின் குறுக்கீடு இருந்தாலும், முடிந்தவரை ஓவர்களைக் குறைத்தாவது போட்டியை நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது.

ஒருவேளை இன்று முழுவதும் மழை நீடித்து போட்டி கைவிடப்பட்டால் ஐசிசியின் 16.10.7 விதிப்படி லீக் சுற்றில் தங்கள் பிரிவில் அதிக புள்ளிகளைப் பெற்ற அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அந்த வகையில் பார்த்தால் இந்திய அணி சூப்பர் 8 பிரிவில் தாங்கள் ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி லீக் சுற்றில் 3 ஆட்டங்களில் ஆடி 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோற்றுள்ளது.

இதை வைத்துப் பார்க்கும்போது, லீக் போட்டிகளில் ஒரு ஆட்டத்தில்கூட தோற்காத இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைய வாய்ப்புகள் உள்ளன. அதனால் இன்று மழை வந்து போட்டி கைவிடப்பட்டாலும் இந்திய ரசிகர்கள் அதற்காக கவலைப்பட வேண்டாம். இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்லும்.

பயமில்லாமல் ஆடுவோம் – ரோஹித் சர்மா:

கடந்த 2022-ம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப் ஆட்ட்த்தில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதற்கு பழிவாங்கும் வகையில் இன்று நடக்கவுள்ள அரை இறுதிப் போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்பதில் இந்திய வீர்ர்கள் தீவிரமாக உள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்காக இந்திய வீர்ர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

போட்டிக்கு முன்னதாக நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “இந்திய வீர்ர்கள் அனைவரும் நல்ல மனநிலையில் உள்ளனர். ஒரு அணியாக, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு சிறப்பாக ஆடி வருகிறோம். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை, அரை இறுதிப் போட்டி என்று பிர்ஷரை எடுத்துக்கொள்ளாமல் சாதாரண போட்டியாக நினைத்து பயமில்லாமல் ஆடுவோம்” என்றார்.

தென் ஆப்பிரிக்கா சாதனை:

மேற்கிந்திய தீவுகளில் உள்ள தருபா நகரில் இன்று நடந்த மற்றொரு அரை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஆப்கானிஸ்தான் மீது தீவிர ஆதிக்கம் செலுத்தியது. ஆப்கானிஸ்தான் அணியை 56 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் ஆல் அவுட் ஆக்கினர். ஆப்கானிஸ்தான் அணியில் ஒமர்சாய் (10 ரன்கள்) மட்டுமே இரட்டை இலக்க ரன்களைப் பெற்றார். தென் ஆப்பிரிக்க அணியில் மார்க்கோ ஜான்சென், ஷம்ஸி ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், ரபாடா, நோர்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

வெற்றிபெற 57 ரன்கள் தேவை என்ற இலக்குடன் ஆடவந்த தென் ஆப்பிரிக்க அணி, 8.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 60 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் முதல் முறையாக உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்ட்த்துக்கு தகுதி பெற்று சாதனை படைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...