No menu items!

மூக்கு பிரச்சினையில் ஸ்ருதி ஹாஸன்

மூக்கு பிரச்சினையில் ஸ்ருதி ஹாஸன்

கார், பைக்குகளுக்கு டிங்கரிங் வொர்க் பண்ணுவதைப் போலவே சினிமா நடிகைகளும் தங்களது அழகை எடுப்பாக காட்ட காஸ்மெட்டிக் சர்ஜரிகளை செய்து கொள்வது வழக்கமான ஒன்றுதான்.

ஸ்ரீதேவி முதல் ஷ்ருதி ஹாஸன் வரை இந்த காஸ்மெட்டிக் சர்ஜரி செய்து கொண்ட நடிகைகளின் பட்டியல் நீள்கிறது.

இந்த விஷயத்தில் தனது மூக்கு பற்றி ஷ்ருதி ஹாஸன் வெளிப்படையாகவே தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

‘என்னுடைய மூக்கு அவ்வளவு எடுப்பாக இருந்தது இல்லை. நான் நடித்த முதல் படத்தைப் பார்த்தால் அது புரியும். டிவியேட்டட் செப்டம் பிரச்சினை இருந்ததை பார்க்க முடியும். இந்த பிரச்சினையை சரி செய்ய முடியுமென்பதால் காஸ்மெட்டிக் சர்ஜரி செய்து கொண்டேன்.

இது என்னுடைய மூக்கு, அதை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ள எனக்கு முழு உரிமை இருக்கிறது. என் மூக்கை ஏன் சரி பண்ணினேன் என்று நியாயப்படுத்த விரும்பவில்லை. என் மூக்குக்காக ஃபில்லர்ஸ் பயன்படுத்தியிருக்கேன். நாளைக்கே என் முகம் எடுப்பாக இல்லை என்று தோன்றினால் அதற்கும் சர்ஜரி செய்து கொள்வேன். யாருக்கு தெரியும். என் உடல். என் உரிமை. அதனால் யாருக்கும் இதில் கேள்வி கேட்க உரிமை இல்லை’ என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்திருக்கிறார்.

ஷ்ருதி ஹாஸனை பற்றி மற்றொரு விஷயம். இவர் காஸ்மெட்டிக் சமாச்சாரங்களுக்கான விளம்பரங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.

அடித்து தூக்கும் அட்லீ. 100 கோடி பிஸினஸ்!

’பாலிவுட் பாக்ஸ் ஆபீஸ் கிங்’ ஷாரூக் கான் ரொம்பவே சோர்ந்து போயிருக்கிறார். காரணம் அடுத்தடுத்த ப்ளாப்கள்.

எப்படியாவது தனது மார்க்கெட்டை மீட்டெடுக்க வேண்டுமென்ற வேகத்தில் இருக்கும் ஷாரூக் கான் தற்போது பெரிதும் நம்பியிருக்கும் படம் நம்மூர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜவான்’.

இதில் விஜய் ஒரு பாடலில் ப்ரெண்ட்லியாக ஆடியிருப்பதாக ஒரு பரபரப்பும் சேர்ந்திருக்கிறது. விஜய் சேதுபதி வில்லன். நயன்தாரா ஹீரோயின். திபீகா படுகோன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படி பாலிவுட் ப்ளஸ் கோலிவுட் காம்பினேஷனில் ’ஜவான்’ எடுக்கப்படுவதால் இப்படம் ஓடிடி நிறுவனங்களின் கவனத்தை ரொம்பவே ஈர்த்திருக்கிறது.

இதனால் இப்படத்தின் ஒடிடி உரிமையை வாங்குவதில் போட்டி நிலவுகிறது. முன்னணி ஒடிடி நிறுவனங்கள் ‘’ஜவான்’ படத்தின் ஹிந்தி உட்பட அனைத்து மொழி உரிமைகளையும் வாங்குவதற்கு பெரும் தொகையை கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

குறிப்பாக அமேஸான் ப்ரைம் இப்படத்தின் ஹிந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உட்பட இந்திய மொழிகளின் ஒடிடி உரிமையைப் பெற 100 கோடி கொடுக்க தயாராக இருக்கிறது என்ற பேச்சு அடிப்படுகிறது.

ஆனால் ’ஜவான்’ படக்குழுவினரோ நூறு கோடியெல்லாம் வேண்டாம். 150 கோடி கொடுத்தால் யோசிக்கலாம் என்று ஒரு டிமாண்ட்டை முன் வைத்திருக்கிறதாம்.

நூறா அல்லது நூற்றியம்பதா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

விக்ரமின் ’கேஜிஎஃப்’

விக்ரம் அடுத்து பா. ரஞ்சித் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடைபெறும் ஒரு ப்ரீயட் படமாக உருவாகி வருகிறது.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் போது, கோலார் தங்க வயல் பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை அடிப்படையாக வைத்து, உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாக இப்படத்தின் கதையை பா.ரஞ்சித் வடிவமைத்து இருப்பதாக ஒரு தகவல் வெளிவந்திருக்கிறது.

விடுதலைக்கு முன்பாக இருந்த கோலார் தங்கவயல் பற்றி நான்கு ஆண்டுகள் தகவல்களை சேகரித்து, கள ஆய்வுகளை மேற்கொண்டு அதன் அடிப்படையில் திரைக்கதையை பா.ரஞ்சித் எழுதியிருக்கிறாராம்.

முழுக்க முழுக்க இது ஒரு ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்கிறார்கள்.

விக்ரமுடன் இதில் ’நேஷனல் க்ரஷ்’ ராஷ்மிகா மந்தானா ஜோடி சேரலாம் என்று கோலிவுட் பட்சி சொல்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...