No menu items!

ரஜினி, விஜய் வாய்ஸ் – நாடளுமன்றத் தேர்தல் ட்விஸ்ட் – மிஸ்.ரகசியா

ரஜினி, விஜய் வாய்ஸ் – நாடளுமன்றத் தேர்தல் ட்விஸ்ட் – மிஸ்.ரகசியா

“திமுக கூட்டணியில இருக்கிற பிரச்சினைகள் ஒரு வழியா சரியாகிட்டு வருதே?”

“ஆமாம். திமுகவைப் பொறுத்தவரை வேட்பாளர்கள் பட்டியல்கூட ரெடியா இருக்கு. ஆனா தொகுதிப் பங்கீடு முடியாததால எதையும் அறிவிக்க முடியலையேன்னு முதல்வர் எரிச்சலாகிட்டாராம். எல்லா பிரச்சினைகளையும் ஞாயிற்றுக்கிழமைக்குள்ள முடிச்சுடணும்னு தொகுதி பங்கீட்டு குழுவுக்கு முதல்வர் உத்தரவு போட்டிருக்காராம். அதுக்கு பிறகுதான் அவங்க தீவிரமா செயல்பட்டு பேச்சுவார்த்தையை சுமுகமா முடிக்க தொடங்கி இருக்காங்க.”

“பேச்சுவார்த்தைல முறுக்கிட்டு இருந்த வைகோகூட பணிஞ்சு போயிட்டாரே?”

“அவர் இந்த விஷயமா முதல்ல துரைமுருகன்கிட்ட பேசி இருக்கார். ‘நான் சில விஷயங்களை தளபதிகிட்ட தெளிவுபடுத்த விரும்பறேன். அவரை என்னோட பேச சொல்லுங்க’ன்னு சொல்லி இருக்கார். இதை முதல்வர்கிட்ட துரைமுருகன் சொல்ல, அடுத்த 10 நிமிஷத்துல முதல்வர் வைகோகிட்ட பேசி இருக்கார். அப்ப வைகோ, ’நான் முதல்ல பேசுறேன் தயவு செஞ்சு குறுக்கே பேசாதீங்க. இந்த கூட்டணியை விட்டு மதிமுக விலகும்னு வர்ற கட்டுக் கதைகளை நம்பாதீங்க. துரை வைகோ உதயசூரியன் சின்னத்தில் போட்டி போட விரும்பலைன்னு வர்ற செய்தியும் தப்பு. தேர்தல் ஆணையத்தோட அங்கீகாரம் தேவைங்கிறதாலதான் நாங்க எங்க சின்னத்தில் போட்டியிட விரும்பறோம். சட்டசபை தேர்தல்ல எங்கள் வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்துல போட்டி போடுவாங்க. நான் எப்பவும் வாக்கு மாற மாட்டேன். எல்லோரும் ராஜ்யசபா சீட் கேட்டு உங்களை தொந்தரவு செய்யறாங்க. அது எனக்கு தெரியும். என்னைப் பொறுத்தவரை கலைஞரின் போர்வாள்ங்கிற உரிமையில அந்த சீட்டை கேட்கறேன். இப்ப சொல்லுங்கள்… நான் என்ன செய்யணும்?’னு கேட்டிருக்கார். அதுக்கு முதல்வர், நிச்சயம் உங்க விருப்பம் நிறைவேறும்னு சொல்லி இருக்கார். இதுக்கு பிறகுதான் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்னு வைகோ அறிக்கை வெளியிட்டிருக்கார்.”

“திருமாவளவன் விஷயம் என்ன ஆச்சு?”

”திருமாவளவன் கதை வேற. அவங்க மூணு தொகுதி கேட்டாங்க. அதுல ஒண்ணு பொதுத் தொகுதி. முதல்வர் சம்மதிக்கல. எங்களோட நெருக்கடியை புரிஞ்சுக்கங்கனு திருமாவளவன்கிட்ட சொல்லியிருக்கிறார். அதனால் 2019ல் போட்டியிட்ட அதே விழுப்புரம், சிதம்பரம் தொகுதி விசிகவுக்கு கிடைச்சிருக்கு. இதுல ஒரு தொகுதில உதயசூரியன் சின்னத்திலயும் இன்னொன்னுல விசிக சின்னத்திலயும் போட்டி போடப் போறாங்க. ஆனாலும் திமுகவுக்கு ரொம்ப நெருக்கடி கொடுத்துட்டாங்கனு அறிவாலயத்துல பேச்சு இருக்கு”

“அப்ப காங்கிரஸ்?”

“திமுக தரப்புல டெல்லி தலைவர்கள்கிட்ட பேசிட்டு இருக்காங்க. அதுவும் ஞாயிற்றுக்கிழமைக்குள்ள முடியும், அவங்களோட பேச்சுவார்த்தை முடிஞ்சதும் கமலுக்கும் திமுக கூட்டணியில தொகுதி ஒதுக்கப்படும்.”

“கமலுக்கு எத்தனை சீட்?”

‘அவர் மூணு கேக்கிறார். ரெண்டாவது கொடுங்கனு இப்ப இறங்கி வந்திருக்காங்க. ஒண்ணு நிச்சயம். ரெண்டு கொடுக்கிறது முதல்வர் விருப்பம்ன்ற நிலைமைல இப்போ இருக்கு. கமலுக்கு கொடுக்க முதல்வருக்கு ஆசைதான் அந்தத் தொகுதியை காங்கிரஸ்கிட்டருந்து எடுக்க வேண்டியிருக்கு. அதனால தள்ளிப் போய்கிட்டு இருக்கு”

“அதிமுக தரப்பு பேச்ச்சுவார்த்தைகள் எப்படி போயிட்டு இருக்கு?”

“பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக கூட இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்துட்டு இருக்கு. அந்த கட்சிகளோட தலைமைகிட்ட பேசின எடப்பாடி, ‘நீங்கள் வந்தால் நாம எல்லாரும் ஜெயிக்கலாம். சட்டசபை தேர்தல்லயும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உங்கள் கட்சியின் உண்மையான செல்வாக்கு என்னன்னு உங்களுக்கே தெரியும். அதை நான் சொல்ல விரும்பலை. நீங்கள் நிபந்தனை எல்லாம் விதிக்க கூடாது. நீங்க கூட்டணிக்கு வந்தா நல்லது. இல்லைன்னா நீங்க லெட்டர் பேட் கட்சியா மாறிடுவீங்க. அதை நீங்க சிந்திச்சு பார்த்துக்கங்க’ன்னு கராறா சொல்லி இருக்கார். கூட்டணிக்கு யாரும் வரலைன்னா பாரதிய ஜனதா கட்சி மாதிரி தனிச்சு நின்னு அதிமுகவோட வலுவை தெரிஞ்சுக்கற மூட்ல அவர் இருக்கார்னு கட்சி வட்டாரத்துல பேசிக்கறாங்க.”

”எடப்பாடிக்கு வேற வழியில்லைல”

“ஆமாம். அதே மாதிரி இந்த நாடாளுமன்றத் தேர்தல்ல வழக்கமான கட்சிக்காரங்கள இறக்காம அதிமுகவுல இருக்கிற செல்வச் செழிப்பான தொழிலதிபர்களை போட்டியிட வைக்கலாம்னு ஒரு யோசனை இருக்கு. அவங்க போட்டி போட்டா அவங்களே செலவுகளை பாத்துப்பாங்க. அவங்க தோத்துட்டாங்கனா சட்டப் பேரவைத் தேர்தல்ல அவங்களுக்கு சீட் கொடுக்கலாம்னு யோசிக்கிறாங்க”

“எடப்பாடி யோசிக்காத விஷயமே இல்ல போல. சரி, சரத்குமார் அதிமுகவோடதானே பேசிட்டு இருந்தார். பிறகு எப்படி திடீர்னு பாஜக கூட்டணிக்கு போனார்?”

“அதிமுக சார்பா சரத்குமாரை சந்திச்ச வேலுமணி, ‘நீங்க தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து போட்டி போடுங்க. ராதிகா தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தா பெண்கள் ஓட்டு நம்ம பக்கம் வரும்’ன்னு சொல்லி இருக்கார். அதுக்கு சரத்குமார் எந்த பதிலையும் சொல்லாம திருப்பி அனுப்பி இருக்கார். அதே நாள் மாலை, மத்திய அமைச்சர் முருகன் சரத்குமாரை சந்திச்சு, பாரதிய ஜனதா கூட்டணிக்கு வரச்சொல்லி கேட்டிருக்கார். அப்ப ராதிகாவும் கூட இருந்திருக்காங்க. முருகனோட ஆஃபர் ராதிகாவுக்கு பிடிச்சு இருந்த்தால அவர் சரத்குமாரை பாஜக கூட்டணியில சேரச் சொல்லி இருக்காங்க. அப்படித்தான் சரத்குமார் பாஜக கூட்டணிக்கு போயிருக்கார்.”

“அப்படி என்ன முருகன் ஆஃபர் பண்ணார்?”

“முருகன் ஆஃபர்ல வைட்டமின்கள் நிறைய இருந்தது. இப்ப சரத்குமார் கட்சிக்கு சக்தி தேவை என்பதால் இந்த வைட்டமின்களை ஏத்துக்கிட்டார்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் ரகசியா.

“பொன்முடியோட திருக்கோவிலூர் தொகுதியை காலி தொகுதியா அறிவிச்சிருக்காங்களே?”

“நாடாளுமன்றத் தேர்தலோட இடைத்தேர்தல் நடந்தால் நமக்கு செலவு மிச்சமாகும்னு திமுக தலைமை நினைக்குது. அந்த தொகுதியில பொன்முடியோட இளைய மகன் அசோக் சிகாமணியை திமுக வேட்பாளரா நிறுத்தும்னு பேசிக்கறாங்க.”

”அடுத்த வாரிசையும் களத்துல இறக்கிறாங்களா! சரி, விஜய் கட்சி பரபரப்பா இயங்குதுபோல. வேகமா உறுப்பினர்களை சேர்க்கிறாங்க போல”

“ஆமாம், இந்தத் தேர்தல்ல ரஜினி மாதிரியே விஜய்யும் வாய்ஸ் கொடுக்கப் போகிறாராம்?”

“என்ன வாய்ஸ்”

“நல்லவரானு மட்டும் பார்க்காதிங்க வல்லவரானும் பாத்து ஓட்டுப் போடுங்கனு சொல்லப் போறாராம்”

”அது என்ன நல்லவர் வல்லவர்? ரஜினி ஸ்டைலில் குழப்புறாரே”

”ரஜினிக்கும் வாய்ஸ் கொடுக்கச் சொல்லி பிரஷர் வந்திருக்கு. அதனால சில குறிப்பிட்ட தொகுதிகள்ல மட்டும் தன் வாய்ஸை கொடுக்கப் போறாராம்?’

“அது என்ன குறிப்பிட்ட தொகுதில?”

“உதாரணமா நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் போட்டியிட்டா அங்க ஏதாவது ஒரு விழா நடத்தில் அந்த விழாவுல ரஜினி பேசும்போது நிர்மலா சீதாராமனை பாராட்டி பேசுவார். இது சில குறிப்பிட்ட தொகுதிகள்ல அரசியல் இல்லாத விழாக்கள்ல ரஜினி கலந்துக் கொண்டு வேட்பாளரை பாராட்டி பேசுவாராம்”

”என்னவெல்லாம் திட்டம் போடுறாங்க…சரி, ரஜினி வாய்ஸ்க்குலாம் மதிப்பு இருக்குமா?”

“லால் சலாம் அளவு வெற்றி கிடைக்கும்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...