No menu items!

’காந்தாரா – 2’-ல் ரஜினி?

’காந்தாரா – 2’-ல் ரஜினி?

’காந்தாரா’ பட ஹீரோ ரிஷப் ஷெட்டிக்கு கெளரவமிக்க தாதாசாகேப் ஃபால்கே விருது கிடைத்திருக்கிறது. காந்தாராவில் நடித்த தற்காக இவருக்கு ‘ மோஸ்ட் ப்ராமிஸிங் ஆக்டர்’ விருது கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து பெங்களூருவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ரிஷப் ஷெட்டி கலந்து கொண்டார். அப்போது பத்திரிகையாளர்கள் அவரை கேள்விகளால் துளைத்து எடுத்துவிட்டனர்.

‘காந்தாரா’வைப் பற்றி பேச்சு எழுந்த போது, ‘காந்தாரா -2’ ஒரு ப்ரிக்வல் படமாக இருக்கும். ஸ்கிரிப்ட்டுக்கு அவசியமான ஆய்வுகளில் தற்போது ஈடுப்பட்டு வருகிறேன். இந்தப் படத்தில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கும். முதல் படத்தின் கதையைப் போலவே இருந்தாலும் இந்தப்படத்தில் ஜானர் வேறு மாதிரியாக இருக்கும்.’’ என்றார்.

சமீபத்தில் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார் ரிஷப் ஷெட்டி. அப்போது ரஜினி ரிஷப் ஷெட்டிக்கு தங்க சங்கிலி அணிவித்து பாராட்டினார். இந்த சந்திப்பை தொடர்ந்து, காந்தாரா-2 படத்தில் ரஜினியை கெஸ்ட் ரோலில் நடிக்க அப்படக்குழுவினர் முயற்சி செய்து வருகின்றனர்.

அதனால் இது பற்றி ரிஷப் ஷெட்டியிடம் கேட்டப்போது, அவர் எந்த பதிலும் சொல்லாமல் வெறும் புன்னகையை மட்டுமே பதிலாக கொடுத்திருக்கிறார். காந்தாரா 2 பட த்தின் ஜானர் வேறு என்றும் ரிஷப் சொல்லியிருப்பதால் இப்பொழுது காந்தாரா 2-வில் ரஜினி கெஸ்ட்ரோலில் நடிக்கிறாரா என்ற பரபரப்பு தொற்றியிருக்கிறது..

director, #RishabShetty, #DadasahebPhalkeAward, #Kantara, #MostPromisingActor, #Kantara2, #Rajnikanth, #thalaivar,


’சூர்யா42’ அப்டேட் – பாடிபில்டர்களுடன் மோதும் ’சூர்யா

சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ’சூர்யா42’ படத்திற்காக சென்னையில் இருக்கும் பாடிபில்டர்களை தேடித் தேடி கமிட் செய்து செய்திருக்கிறார்களாம்.

கட்டுக்கோப்பான உடல்வாகு, நல்ல உயரம், முறுக்கேறிய கைகள் இருக்கும் பாடிபில்டர்கள்தான் ‘சூர்யா42’ படக்குழுவின் இலக்காம்.

கதையின்படி, சண்டைக்காட்சிக்கு 25 முதல் 50 வயது வரை உள்ள ஆஜானுபாகுவான பாடிபில்டர்கள் தேவைப்பட்டார்களாம். இதற்காகதான் இந்த பாடிபில்டர்கள் வேட்டை என்கிறார்கள்.

.மேற்கூறிய சண்டைக்காட்சிகளை எண்ணூர் துறைமுகத்தில் எடுத்திருக்கிறார்கள். கேஜிஎஃப் பட த்தில் வருவது போல பிரம்மாண்டமான சண்டைக்காட்சியாக இருக்கவேண்டுமென பெரும் செலவில் இந்தக்காட்சியை எடுத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

இப்படத்தில் சூர்யாவுக்கு. அறத்தார், வெங்கடேடர், மந்தாகர், முகாதர், ப்ரிமநந்தர் என பல கேரக்டர்கள் இருக்கிறதாம். .அதிலும் பாலிவுட்டின் மெல்லிடை அழகி திஷா பதானியின் கவர்ச்சி இதில் தூக்கலாக இருக்கும். இப்படத்திற்கு ‘வீர்’ அல்லது ‘வீரன்’ என்று பொருள்படும்படியான டைட்டில் இருக்கலாம் என்கிறது சூர்யா42 படக்குழு.

பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், பாகுபலி புகழ் பிரபாஸை ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

suriya, #suriya42, #dishapatani, #siruthaisiva, #goa, #kgf, #bollywood, #surya, #siva,


தமிழ் ஹீரோக்களை குறிவைக்கும் தெலுங்கு டைரக்டர்கள்

டோலிவுட் என்றழைக்கப்படும் தெலுங்கு சினிமாவும், கோலிவுட் என்றழைக்கப்படும் தமிழ் சினிமாவும்தான் இன்றைக்கு தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரிய மார்க்கெட்..

மலையாள சினிமாவும், கன்னட சினிமாவும் பிஸினெஸ்ஸை பொறுத்தவரையிலும் சரி, பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனிலும் சரி 100 கோடிகளில் புரளும் சினிமா இண்டஸ்ட்ரிகளாக இன்னும் வேகம் காட்டவில்லை.

ஆனால் இப்பொழுது அதிகம் முணுமுணுக்கப்படும் ‘பான் – இந்தியா’ கான்செப்டை வைத்து தங்களது மார்க்கெட்டை உயர்த்த தமிழ் மற்றூம் தெலுங்கு சினிமாவின் இயக்குநர்கள், நடிகர்களுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் காதலையும், நகைச்சுவையையும் கலந்தடிக்கும் சிவகார்த்திகேயனை வைத்து தெலுங்கு இயக்குநர் அனுதீப் ‘ப்ரின்ஸ்’ படத்தை இயக்கினார். இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியானது.

தமிழ் சினிமாவில் பாக்ஸ் அபீஸில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் விஜயை வைத்து தெலுங்கு சினிமாவை சேர்ந்த இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி ‘வாரிசு’ படத்தை இயக்கினார். இது நேரடி தமிழ்ப் படம் என்றாலும், ஒரு தெலுங்கு படத்திற்கான முக்கியத்துவத்துடன் பல திரையரங்குகளில் வெளியானது.

இப்பொழுது தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லூரி, தனுஷை வைத்து ‘வாத்தி’ என்று தமிழிலும், ‘சார்’ என்ற பெயரில் தெலுங்கிலும் இயக்கி இருக்கிறார்.

இப்படி தெலுங்கு இயக்குநர்கள் தமிழ் ஹீரோக்களை கணக்குப் பன்ணுவதைப் போலவே, தமிழ் இயக்குநர்கள் இப்பொழுது தெலுங்கு ஹீரோக்களை குறிவைத்திருக்கிறார்கள்.

லிங்குசாமி ராம் பொத்னினேனியை வைத்து ‘வாரியர்’ படத்தை இயக்கினார். இதேபோல் நாகார்ஜூனாவின் மகனும், சமந்தாவின் முன்னாள் கணவருமான நாக சைத்ன்யாவை வைத்து வெங்கட்பிரபு தெலுங்குப் படமொன்றை இப்போது எடுத்து வருகிறார். அடுத்து சமுத்திரக்கனி அடுத்து பவன் கல்யாணை வைத்து படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.

இப்படி உருவாகி வரும் தமிழ் – தெலுங்கு சினிமாவின் கூட்டணி அதிகமாகி கொண்டே வருவதன் காரணம், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் யுக்திதான்.

மார்க்கெட் சைஸை விரிவுப்படுத்துவது, வசூலை அதிகரிப்பது இந்த இரண்டு அம்சங்களையும் குறி வைத்து, கூட்டி கழித்து பார்த்து கூட்டணி அமைக்கும் முயற்சிகள் இப்போது ட்ரெண்டாகி வருகிறது.

#Telugu, #Tamilheroes, #Anudeep, #Prince, #SivaKarthikeyan, #VamshiPaidipally, #Vijay, #Varisu, #VenkyAtluri, #Dhanush., #Lingusamy ,#Ram, #TheWarrion, #PawanKalyan, #Samuthirakani., #NagaChaitanya, #VenkatPrabhu ,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...