No menu items!

மன வேதனையில் ரஜினி! – இறங்கி வருவாரா தனுஷ்?

மன வேதனையில் ரஜினி! – இறங்கி வருவாரா தனுஷ்?

ஊருக்கே சூப்பர் ஸ்டார் என்றாலும் போயஸ் கார்டனில் இருக்கும் தனது வீட்டுக்குள் ஒரு சராசரி அப்பாவாகதான் ரஜினி காந்த் இருக்கிறார்.

பெயர், புகழ், அந்தஸ்து, பணம், நலம் விரும்பிகள், ரசிகர்கள், அரசியல் செல்வாக்கு என அனைத்தும் இருந்தும் ரஜினி வேதனையில் இருப்பதாக கூறுகிறார்கள்.

’எல்லோரும் கல்யாணம் பண்ணி சந்தோஷமாக இருக்கவேண்டுமென ஒரு கல்யாண மண்டபத்தைக் கட்டிய எனக்கு, என் மகள்களின் திருமண வாழ்க்கையில் ஏன் இவ்வளவு சோதனைகள்..வேதனைகள்.. ’ என்று ஒரு அப்பாவாக மன வருத்தத்தில் இருக்கிறாராம்.

தனது இரு மகள்களின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது திருப்திகரமாக அமையாமல், ஏதேதோ போராட்டங்களுக்கு நடுவேதான் இருக்கவேண்டியிருக்கிறதே என்று தனக்கு நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் ரஜினி மனம்விட்டு பேசியிருக்கிறார்.

முதலாவதாக செளந்தர்யாவின் திருமண வாழ்க்கை. கல்யாணம் ஆன கொஞ்ச நாட்களிலேயே கட்டுக்கோப்பான, பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்த அஸ்வினுக்கும் செளந்தர்யாவுக்கும் பரஸ்பர அந்நியோன்யம் ஏற்படவில்லை. அஸ்வின் குடும்பத்திற்கும் செளந்தர்யாவுக்கும் கூட மனம் இசைந்து போகவில்லை. இதனால் திருமணமான ஆறு மாதங்களிலேயே பிரச்சினை உருவானது,

இந்த பிரச்சினைகளின் உச்சம் செளந்தர்யாவின் விவாகரத்து.

மறுபக்கம் ஐஸ்வர்யா – தனுஷ் காதல். பல பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே ரஜினி இவர்களது திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார். ஈகோ, பழிவாங்கல் மாதிரியான பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து இந்த திருமணம் நடக்க கூடாது என்பதற்காகதான் ஆரம்பத்தில் ரஜினி ஐஸ்வர்யா – தனுஷ் கல்யாணத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கவில்லை.

ஐஸ்வர்யா – தனுஷ் திருமணம் ஒரு வழியாக நடைப்பெற்றதும் ரொம்பவே உற்சாகத்தில் இருந்தார் ரஜினி.

ரஜினிக்கு பெரும் ஆறுதல் பேரன்கள்.

ஷூட்டிங் இல்லாத நாட்களில் பெரும்பாலான நாட்களை கேளம்பாக்கத்தில் இருக்கும் தனது பண்ணைவீட்டில் யாருமில்லாமல் தனிமையில் பொழுதை கழிப்பது ரஜினியின் வழக்கம். பண்ணவீட்டில் நீச்சலடிப்பது அவருக்கு மிகவும் பிடித்த விஷயம். அடுத்து பண்ணவீட்டிற்கு அருகே இருக்கும் அனுமார் கோயிலுக்கு சென்று அங்கிருக்கும் பாறையில் அமர்ந்தபடி தியானம் செய்வது அவருக்கு ஆத்மார்த்தமான திருப்தியை அளிக்கும் பழக்கம்.

ஆனால் பேரன்கள் வந்த பிறகு ரஜினி பேரன்களுடன் அதிக நேரம் செலவிடுவதை வாடிக்கையாக மாற்றிக்கொண்டார்.

தனுஷ் ஷூட்டிங் சென்றால், ஐஸ்வர்யா வீட்டிற்கே வந்து பேரன்களுடன் விளையாடி பொழுதைக் கழிப்பது ரஜினியின் ஃபேவரிட் மொமெண்ட்களானது,

அடுத்து இரண்டு மகள்களில் ரஜினியின் பெட் ஐஸ்வர்யா. எந்த விஷயமாக இருந்தாலும் ரஜினி மனம் விட்டு பேசும் லிட்டில் ஃப்ரெண்ட் மகள் ஐஸ்வர்யாதான். மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றாலும் கூட, பாதுகாப்புக்கான கம்பானியன் ஐஸ்வர்யாதான்.

இப்படியொரு சூழலில் செளதர்யாவின் இரண்டாவது திருமணம். ரஜினிக்கு ஒரு ஆறுதல். வேறு வேறு சம்பிரதாயங்களைப் பின்பற்றும் குடும்பமாக இருந்தாலும், புரிதல் இருப்பதால் இப்பொழுது செளந்தர்யாவுக்கு கட்டிக்கொடுத்த குடும்பத்திலும் ரொம்ப மதிப்பு.

இப்படி உற்சாகத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக போய்க்கொண்டிருந்த நேரத்தில்தான் சூப்பர் ஸ்டார் எதிர்பாராத ஒரு ப்ரீ க்ளைமாக்ஸ்ஸாக அமைந்திருக்கிறது ஐஸ்வர்யா – தனுஷ் ஜோடியின் பிரிவு.

மருமகனாக ஏற்றுக்கொண்ட தனுஷூக்கு ஆரம்பத்தில் தொழில்ரீதியிலான டிப்ஸ்களை அள்ளிவிட்டவர் ரஜினி.

அப்பொழுதெல்லாம் தனது பேட்டிகளில் ரஜினியை லைட்டாக புகழ்வது தனுஷின் பழக்கம்.

சினிமா கேரியரில் நடிகைகளுடன் கிசுகிசுக்கள் கிளம்பிய போது சாட்டையை லேசாக சுழற்றுவது போல் கோபம் காட்டி பல பிரச்சினைகளை தீர்த்து வைத்தவர் ரஜினி.

இதற்கு பிறகுதான் தனுஷ் எந்த பேட்டியாக இருந்தாலும் தனது தந்தை இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் பெயரை உச்சரிக்க தவறியதே இல்லை. நான் இந்த அளவிற்கு உயரத்தைத் தொட காரணம் என் அப்பா. அவர் அன்று நடையாய் நடந்ததால்தான் நான் இன்று வசதியாக இருக்கிறேன் என்பதுபோல் அடிக்கடி சொல்ல ஆரம்பித்தார் தனுஷ்.

இப்படி பாப் கார்ன் கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றன் பின் ஒன்றாக பொறிப்பது போல கொஞ்சம் கொஞ்சமாக ஐஸ்வர்யா – தனுஷ் ஜோடிக்கு நடுவே பிரச்சினைகள் வெடித்தது.

ஐஸ்வர்யாவைப் பொறுத்தவரை திருமண முறிவில் உடன்பாடு இல்லை என்கிறார்கள். மகன்களின் வாழ்க்கை, சூப்பர் ஸ்டாரின் மகள் போன்ற சில அடையாளங்கள் மற்றும் சில கட்டாயங்களுக்காக ஆரம்பத்தில் பிரிவை ஐஸ்வர்யா விரும்பவில்லை.

ஆனால் தனுஷ் கொஞ்சம் பிடிவாதமாக இருந்தார் என்கிறார்கள்.

இது ரஜினியை ரொம்பவே சங்கடப்படுத்திவிட்டதாக அவருக்கு நெருங்கிய நண்பர்கள் கூறுகிறார்கள்.

திருமண முறிவு என்று அறிவித்த பிறகு தனுஷ் படப்பிடிப்புகளில் அதிக நேரத்தை செலவிட, ஐஸ்வர்யா உடம்பை கட்டுக்கோப்பாக வைக்க ஜிம்களில் செலவிட, இரு மகன்களும் கொஞ்சம் தளர்ந்து போய்விட்டார்கள்.

இதுதான் ரஜினியை மன வருத்திற்கு தள்ளிவிட்டது.

மறுபுறம் ரஜினி பின்னணி இல்லாத தனுஷ் கமர்ஷியல் ஹீரோவாக இருந்தாலும் அவருக்கு சில நெருக்கடிகள் உருவானதாக ஒரு பேச்சு அடிப்படுகிறது. படமெடுப்பதில் நிதி நெருக்கடியும் தனுஷூக்கு இருப்பதாகவும் பேசிக்கொள்கிறார்கள்.

இப்படியொரு சூழலில்தான் ரஜினி மகளிடம் மனம் விட்டு பேசியிருக்கிறார்.

நல்லதோ கெட்டதோ வாழ்க்கையில் ஒரு நோக்கம் இருக்கவேண்டும். குழந்தைகளை மனதில் கொண்டு ஒரு முடிவெடும்மா என்று கேட்டுக் கொண்டதாக ரஜினியின் நண்பர்கள் வட்டாரம் கூறுகிறது.

என் நிம்மதி உங்கள் இருவரின் கைகளில்தான் இருக்கிறது என்று ரஜினி உருக்கமாக சொன்னதுதான் இப்போது ஒரு மெல்லிய மாற்றத்தை தனுஷ் – ஐஸ்வர்யா இடையே உருவாக்கி இருக்கிறது.

ஐஸ்வர்யா கூட கருத்து வேறுபாடு இருந்தாலும், தன்னுடைய படங்களின் ப்ரிவியூ இருந்தால் மகன்களை ப்ரிவியூ தியேட்டருக்கு அழைத்து வந்து, தன்னுடன் வைத்து கொள்வது தனுஷின் வாடிக்கை. அந்த நாள் முழுவதும் தன்னுடன் மகன்கள் இருக்க வேண்டுமென்பதற்காக அந்த ப்ரிவியூ தியேட்டரை நாள் முழுவதும் அனைத்து ஷோ டைம்களுக்கு புக் செய்துவிடுவார் தனுஷ்.

இப்படி மகன்களினால் மீண்டும் இந்த இருவரும் ஒன்று சேர ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...