No menu items!

லோகேஷ் கனகராஜூக்கு செக் வைத்த ரஜினி

லோகேஷ் கனகராஜூக்கு செக் வைத்த ரஜினி

விஜய் மற்றும் கமலிடம் தனது வேலையைக் காட்டிய லோகேஷ் கனகராஜூக்கு, ரஜினி ஆரம்பத்திலேயே செக் வைத்திருக்கிறாராம்.

ஒரே காரணம் காக்கா பருந்து கதையும், அதற்கு லோகேஷ் கனகராஜின் நண்பர் ரத்னகுமாரின் கமெண்ட்டும்தான். லோகேஷ் கனகராஜூவுக்கு தெரியாமல் இப்படியொரு எதிர்ப்பு கிளம்ப்யிருக்க வாய்ப்பில்லை என ரஜினி நினைக்கிறாராம். விஜய் ஆதரவாக நான் பேசினால்தான் பிரச்சினை, நீ பேசினால் இருக்காது என்ற ரீதியில் ரத்னகுமாரின் பேச்சு திட்டமிடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ரஜினிக்கு இன்னும் இருக்கிறதாம்.

இதனால்தான் ரஜினி ஆரம்பத்திலேயே லோகேஷிடம் கதை விவாதத்தில் உங்களது நண்பர் வேண்டாம். அடுத்து இந்தப் படம் லோகேஷ் இயக்கத்தில் ரஜினியின் படமாக இருக்கவேண்டும். அதனால் எல்சியூ என்று எதுவும் வேண்டாம் என்று கறாராக கூறிவிட்டாராம்.

மேலும் கதையில் உருவாகும் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் உடனுக்குடன் தெரிவிக்குமாறு லோகேஷூக்கு உத்தரவும் இடப்பட்டதாம். இதனால் லோகேஷூக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான். இருந்தாலும் தனது சினிமா கேரியரில் இது போன்ற வாய்ப்பு கிடைக்காது என்பதால் எல்லாவற்றுக்கும் ஒப்புக்கொண்டதாக கூறுகிறார்கள். இதற்குப் பிறகே ரஜினி கொஞ்சம் நிதானமானாராம்.

கூலி என்று படத்தின் பெயரை அறிவிக்கும் ட்ரெய்லருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு ரஜினியை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இரண்டரை மணி நேரம் மட்டும் ஷூட் செய்தாலும், அதை பக்காவாக கமர்ஷியலாக மாற்றியிருப்பதை பார்த்து லோகேஷூக்கு தனது வாழ்த்துகளைச் சொல்லியிருக்கிறார் ரஜினி.

இதற்குப் பிறகே லோகேஷ் கனகராஜூவுக்கு நிம்மதியாகி இருக்கிறதாம். இதே மூடில் படத்தின் ஷூட்டிங்கையும் முடித்துவிட வேண்டுமென லோகேஷ் தரப்பு திவீரமாக இருக்கிறதாம்.


வசூலில் சாதனை படைக்கும் ’கில்லி’

பல ஆண்டுகளுக்கு முன் வெளியான ஒரு வெற்றிப்படத்தை, மீண்டும் திரையிடும் ரி-ரிலீஸ் கலாச்சாரம் ஆரம்பித்த ஆண்டு 2003.

ஹிந்தியில் பெரும் வெற்றிப்பெற்ற ‘ஷோலே’ படத்தைதான் இப்படி ரி-ரிலீஸ் செய்தார்கள்.

தமிழ்நாட்டில் எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் படங்களை அவ்வப்போது கிராமங்களில் டூரிங் டாக்கீஸ்களில் வெளியிடுவார்கள். இந்த மாதிரியான ரிலீஸ் என்பது ஒரே நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் ஆக இருக்காது. அப்படி வெளியாகும் பழையப் படங்கள், பி மற்றும் சி சென்டர்களில் சொல்லிக்கொள்ளுமளவிற்கான வசூலைப் பெறும்.

இந்த கலாச்சாரத்தைதான் ரி-ரிலீஸ் என்று பெயர் வைத்து ஒரே நாளில் பல நகரங்களில் திரையிடும் பாணியைக் கொண்டு வந்தார்கள்.

அந்த வகையில் தற்போது ரி-ரிலீஸ் ஆகி இருக்கும் ’கில்லி’ புதிய படங்களுக்கு இணையாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஏப்ரல் 20-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது கில்லி. படம் பல திரையரங்குகளில் வெளியானது, அதேபோல் மக்களும் இந்தப் படத்தைப் பார்க்க திரையரங்குகளுக்கு வருகை தந்தார்கள். இதனால் முதல் வார ஒட்டுமொத்த வசூல் சுமார் 20 கோடியைத் தொட்டிருப்பதாக கூறுகிறார்கள். இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 15 கோடி வசூல் ஆகியிருக்கிறது. 5.25 கோடி [அதாவது 625 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்] வெளிநாட்டு வசூலாகி இருக்கிறது.

இங்கே தேர்தல் இருந்த காரணத்தால், வழக்கத்திற்கு மாறாக சனிக்கிழமை வெளியானது. ஆனால் வெளிநாடுகளில் வெள்ளிக்கிழமையே வெளியாகிவிட்டது.

இங்கே முதல் வாரத்தில் ஆறு நாட்கள்தான் என்று கணக்கு வைத்தாலும், ரி-ரிலீஸ் ஆன தென்னிந்தியப் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை ‘கில்லி’ பெற்றிருக்கிறது. வெளியான முதல் நாளிலேயே ஒட்டுமொத்தமாக 10 கோடி வசூல் ஆகி இருக்கிறது.

இந்திய அளவில் ரி-ரிலீஸ் ஆன படங்களில் அதிகம் வசூலித்த இரண்டாவது படம் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது. இதற்கு முன்பு மீண்டும் வெளியான ’ஷோலே’ 3டி [2013] மற்றும் ‘டைட்டானிக்’ 3டி [2012] ஆகிய படங்கள் அதிக வசூலை ஈட்டிய படங்களாக இருக்கின்றன.

அநேகமாக இந்த இரண்டுப் படங்களையும் பின்னுக்குத்தள்ளிவிட்டு ரி-ரிலீஸ் வசூலில் அதிக வசூல் பெற்ற படம் என்ற சாதனையை கில்லி படைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஷோலே மற்றும் டைட்டானிக் ஆகிய இரண்டுப் படங்களுக்குமான வசூல் இந்திய முழுவதிலும் ரி-ரிலீஸ் ஆனதிலிருந்து கிடைத்தது. ஆனால் ‘கில்லி’ தமிழ் நாட்டை மட்டுமே குறிவைத்து வெளியான படம் என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம்.

இதே வசூல் நீடித்தால் ‘கில்லி’ 25 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசூல் சமீபத்தில் வெளியான முன்னணி நட்சத்திரங்களின் புதிய படங்கள் கூட எட்ட முடியாத வசூலாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...