No menu items!

சூர்யாவுடன் டூயட் பாடவிருக்கும் பூஜா ஹெக்டே!

சூர்யாவுடன் டூயட் பாடவிருக்கும் பூஜா ஹெக்டே!

அஜித்குமாரை வைத்து தொடர்ந்து படங்கள் இயக்கிய சிறுத்தை சிவாவை அடுத்தடுத்த ஹிட்கள் உச்சத்திற்கு கொண்டுப் போயின.

சிறுத்தை சிவா பெரிதும் எதிர்பார்த்த ரஜினியுடனான ‘அண்ணாத்த’ ஏறிய உயரத்திற்கு இரு மடங்கு அதிகமாக பாதாளத்திற்கு தள்ளிவிட்டது.

இதனால் இந்த கமர்ஷியல் சிறுத்தையின் உறுமல் கொஞ்ச நாட்கள் குறைந்திருந்தது.

சிறுத்தை சிவா ஹிட்கள் கொடுத்த சமயத்தில் அவரோடு இணைய விருப்பம் என சூர்யா தெரிவித்து இருந்தார். ஆனால் ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு அந்த பேச்சு அப்படியே காணாமல் போயிருந்தது.

ஆனால் சூர்யா மீண்டும் அந்த ப்ராஜெக்ட்டை கையிலெடுக்க திட்டமிட்டு இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.

ஒரு ப்ளாப் ஒருத்தரின் திறமையை குறைத்துவிடாது. எனக்கும் ஒரு கமர்ஷியல் ஹிட் தேவை. ஆக்‌ஷன் சென்டிமெண்ட் சமாச்சாரங்களுடன் ஒரு கமர்ஷியல் படமெடுக்க சிறுத்தை சிவா சரியான இயக்குநர் என்றும் சூர்யா கூறியதாகவும் தெரிகிறது.

இதனால் சிறுத்தை சிவாவுடன் இணைய வேலைகள் மும்முரமாக ;நடைபெறுவதாக சொல்கிறார்கள்.

இப்படம் டேக் ஆஃப் ஆனால் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கலாம் என்று கண் சிமிட்டுகிறது சூர்யாவுக்கு நெருங்கிய வட்டாரம்.

நயன்தாரா – விக்னேஷ்சிவனுக்கு ப்ரேக் கொடுத்த ஷாரூக்கான்!

நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி தங்களது தேனிலவை பட்டயாவில் பாதியில் முடித்து கொண்டு சென்னைக்கு திரும்பிவிட்டது. காரணம் நயன்தாராவின் ஷூட்டிங் திட்டமிட்டபடி ஆரம்பிக்க வேண்டியிருந்தது.

அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கும் படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவிற்குள் நுழைவதால்தான் இந்த தேனிலவு ரத்து.

ஷாரூக்கான் – நயன் சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது மும்பையில் மும்முரமாக எடுத்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஷெட்யூல் ஜூலை மாதம் பதினைந்தாம் தேதி வரை நீள்கிறதாம்.

நயன் – விக்னேஷை பார்த்து பரிதாப்பட்ட ஷாரூக், ஷூட்டிங் ஷெட்யூலை கொஞ்சம் ரிலாக்ஸாக வைத்து கொள்ளுங்கள் என்று அட்லீயிடம் கேட்டுக்கொண்டாராம்.

இதனால் ஜூலை 15-ம் தேதிக்கும் பிறகு நயன்தாராவுக்கு சின்ன ப்ரேக் கொடுக்கும் வகையில் ஷாரூக் சம்பந்தப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளது ஜவான் படக்குழு.

இந்த ஆக்‌ஷன் காட்சிகளுக்கான ஷூட்டிங் முடிந்த பிறகு ஷாரூக் – நயன் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஷூட் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.

மும்பையில் நயனுடன் இருக்கும் விக்னேஷ் சிவன் பாடல் காட்சிகளை வெளிநாடுகளில் ஷூட் செய்யும் போது கூடவே இருப்பாரா இல்லை அஜித் படத்திற்கான வேலைகளைப் பார்ப்பதற்காக ‘தங்கமணி என்ஜாய்’ என்று சென்னையிலேயே இருப்பாரா என்பது இன்னும் இரண்டு வாரங்களில் தெரிய வரலாம்.

ஷங்கரின் அடுத்தப்பட பட்ஜெட் 700 கோடி?

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என பெயரெடுத்த ஷங்கர், விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கிடப்பில் போட்ட ’இந்தியன் – 2’ ஷூட்டிங்கை தொடர விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

கமலின் கடும் முயற்சிக்கு பின்னரே ‘இந்தியன் – 2’ மீண்டும் உயிர்த்தெழ இருக்கிறார் என்று கோலிவுட்டில் பேச்சு அடிப்படுகிறது.

இப்படத்திற்கு பிறகு தனது வழக்கமான பாணியில் பிரம்மாண்டமான படமாக எடுப்பதற்கான யோசனையில் ஷங்கர் இருப்பதாகவும் சொல்கிறார். ’அக்வா மேன்’ ஹாலிவுட் திரைப்படம் மாதிரி கடலுக்குள் நடக்கும் அண்டர்வாட்டர் சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதையொன்றை எடுக்கும் யோசனை ஷங்கருக்கு இருக்கிறதாம்.

படம் முழுவதுமே ஸ்பெஷல் எஃபெக்ட்ஸில் எடுக்க வேண்டிய திரைக்கதை என்பதால் இதன் பட்ஜெட் பல நூறு கோடிகளை ஏப்பம் விட்டுவிடும். இதனால் படத்தின் பட்ஜெட் சுமார் 700 கோடி வரை இருக்கலாம் என்றும் கிசுகிசுக்கிறார்கள்.

இதுவரையில் ஷங்கர் இயக்கிய படங்கள் எதுவும் 500 கோடி என்ற இலக்கை இதுவரையில் தாண்டியயே இல்லை. இந்நிலையில் 700 கோடி பட்ஜெட் என்றால் அதன் வசூல் குறைந்தபட்சம் 1000 கோடியாவது இருந்தால்தான் ஒரு டீஸண்ட்டான வசூலாக இருக்கும்.

இப்படத்தை ஒரு முன்னணி ஹிந்தி நடிகர், இந்தியா முழுவதும் பரீட்சயமான ஒரு தென்னிந்திய நடிகரை நடிக்க வைத்தால் இந்திய மார்க்கெட்டை கவர் செய்து விடலாம் என்று யோசிக்கிறார்களாம்.

பட்ஜெட், கான்செப்ட் எல்லாம் பிரம்மாண்டமாக இருந்தாலும், இந்த அண்டர்வாட்டர் ப்ராஜெட் உண்மைதானா என்பதை ‘இந்தியன் -2’ ரிலீஸூக்கு பிறகே ஷங்கர் தரப்பில் உறுதிப்படுத்தபடலாம் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...