No menu items!

முதல் விளம்பரத்திலேயே ஒரு கோடி சம்பளம்!

முதல் விளம்பரத்திலேயே ஒரு கோடி சம்பளம்!

எவ்வளவு திறமை இருந்தாலும், அசர வைக்கும் அழகு இருந்தாலும் சினிமாவில் செல்லுபடியாகாது. எடுத்த எடுப்பிலேயே பெரிய படம். பெரும் சம்பளம், பிரம்மாண்டமான விளம்பரம் எல்லாம் வேண்டுமானால் பெரிய ஹீரோவின் மகனாகவோ அல்லது மகளாகவோ இருக்கவேண்டும். ஹீரோவின் வாரிசு இல்லையென்றாலும் முன்னணி கமர்ஷியல் டைக்ரடரின் வாரிசாகவோ இருந்தாக வேண்டும்.

இதற்கு லேட்டஸ்ட் உதாரணம் நம்மூரில் அதிதி ஷங்கர். இயக்குநர் ஷங்கரி மகள் என்பதாலேயே முதல் படத்திலேயே கார்த்திக்கு ஜோடியானார். பிரபல நாட்டுப்புற பாடகி பாடி முடித்து ரிக்கார்ட் ஆன பாடலையும், அதிதியை வைத்து பாட வைத்து பிரபலப்படுத்தினார்கள்.

இதே வரிசையில் இப்போது களமிறங்கி இருப்பது சித்தாரா. தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் மகள். இவருக்கு சோஷியல் மீடியாவில் ஏற்கனவே 10 லட்சம் பேர் லைக் போடுவதையும், கமெண்ட்கள் அடிப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

திடீரென சித்தாரா ஒரு விளம்பரத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்த விளம்பரத்தையும் அமெரிக்காவின் புகழ்பெற்ற நியூயார்க் டைம் ஸ்கொயரில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

ஒரு படம் கூட இதுவரை நடிக்கவில்லை. ஆனால் இந்த விளம்பரத்தில் நடிக்க சித்தாராவுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ஒரு கோடி என வாயைப் பிளைக்க வைக்கிறார்கள்.

பாலிவுட்டில் ஆதிக்க செலுத்தும் நிபோடிசம், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தென்னிந்திய சினிமாவிலும் வளர ஆரம்பித்திருக்கிறது. கமர்ஷியல் ஹீரோக்களும், டைரக்டர்களும் தங்களது வாரிசு என்ற ஒரே அடையாளத்துடன் களமிறக்குவதால், திறமையுள்ளவர்களில் 90 சதவீத பேருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்ற முணுமுணுப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.


ரஜினியை முந்தும் கமல்!

ரஜினி இப்பொழுதும் தன்னுடைய அதே சினிமா ஃபார்மூலாவுடன் 2 பாடல்கள், நான்கு சண்டைக்காட்சிகள், ஆறு பஞ்ச் டயலாக்குகள் இங்கேயே குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்க, கமல் டெக்கதலான் போட்டிகளில் வருவது போல பல தளங்களில் பாய்ச்சல் காட்ட ஆரம்பித்திருக்கிறார்.

கமலின் இப்படி திடீரென வேகமெடுக்க காரணம் ‘விக்ரம்’ படத்தின் மாபெரும் வெற்றி.

இதனால் இப்போது கமலின் மார்க்கெட் தடாலடியாக புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அதை அறுவடை செய்ய, பக்காவாக திட்டமிட்டு அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

முன்பெல்லாம் வெளிநாட்டு உரிமையாக சொல்லப்படும் எஃப்.எம்.எஸ். விலை கமல் படங்களுக்கு அதிகம் என்பார்கள். ஆனால் இடையில் ரஜினி, அடுத்து விஜய் இவர்கள் இந்த வியாபாரத்தில் கமலை எங்கேயோ போகுமளவிற்கு ஓரங்கட்டி இருந்தார்கள்.

இப்போது கமல் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிவருவதால், அவரது படங்களுக்கான வியாபாரம் சூடுப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

இதற்கு உதாரணமாக கமல், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை எடுத்து மிரட்டிய இயக்குநர் ஹெச். வினோத்துடன் இணைந்து அடுத்தப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்தப்படத்தின் அறிவிப்பு வெளிவந்த வேகத்திலேயே, இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன்பே, டிஜிட்டல் உரிமை பெரும் விலைக்குப் போய் இருப்பதாக கூறுகிறார்கள்.

கமல் – வினோத் கூட்டணிக்கு பெரும் எதிர்பார்பு இருப்பதால், இப்படத்தின் ஒடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் வாங்கி இருக்கிறதாம். ஒடிடி உரிமை மட்டும் 125 கோடிக்கு விலைப் போயிருக்கிறது என கூறப்படுகிறது.

சமீபத்தில் ஒடிடி உரிமை அதிக விலைக்குப் போன படங்களின் டாப் 10 பட்டியலில் இப்போது கமலின் பெயரிடப்படாத 233-வது படமும் இணைந்திருக்கிறது.

கமலின் மக்கள் நீதி மய்யத்தின் சின்னமான டார்ச் லைட்டையும், ’Rise to rule’, என்ற வாசகத்தையும் வைத்திருப்பதால், இப்படம் அரசியலை பின்னணியாக கொண்ட படமாக இருக்கலாம் என்ற யூகங்களும் கிளம்பியிருக்கிறது.


தமிழ் சினிமாவில் இதுவரை வைக்காத டைட்டில்!

விஜய் ஆண்டனி நடிக்கும் படங்களின் பெயர்கள் பெரும்பாலும் மற்ற கமர்ஷியல் நடிகர்கள் தங்களது படங்களுக்கு வைக்க தயங்கும் பெயர்களாகவே இருக்கும். ‘கொலைக்காரன்’, ‘பிச்சைக்காரன்’, ‘சைத்தான்’, ‘எமன்’, ‘திமிரு புடிச்சவன்’ இப்படி விஜய் ஆண்டனியின் படங்களின் பெயர்கள் அதிர வைக்கின்றன.
இப்படியொரு பின்னணியில், விஜய் ஆண்டனியின் அடுத்தப்படத்திற்கு மீண்டும் ஒரு டைட்டிலை தேடிப்பிடித்திருக்கிறார்கள். அந்த டைட்டில் ‘கொலை’.

9 Lives of Mara என்ற ஆங்கிலப்படத்தை இயக்கிய பாலாஜி.கே.குமார் இயக்கவிருக்கும் படத்திற்குதான் இப்படியொரு டைட்டிலை வைத்திருக்கிறார்கள். 100 வருட தமிழ் சினிமாவில் இப்படியொரு பெயரை இதுவரை யாரும் வைத்தது இல்லை என்கிறார்கள்.

’ராட்சசன்’, ‘போர்தொழில்’ படங்களுக்கு சினிமா ப்ரியர்களிடையே வரவேற்பு கிடைத்திருப்பதை அறுவடை செய்யும் வகையில் இந்தக் ‘கொலை’யை கையிலெடுத்து இருக்கிறார்களாம்.

கமர்ஷியல் ஹீரோயின்கள் ரொம்ப பிஸியாக இருப்பதால் எனக்கு ஜோடியாக நடிப்பார்களா என்பது தெரியவில்லை என்று வெளிப்படையாக கூறும் விஜய் ஆண்டனிக்கு, வழக்கம் போல் அதிக அறிமுகம் இல்லாத ஒரு அழகு முகம்தான் ஜோடி. பெயர் மீனாட்சி செளத்ரி.

2018-ல் மிஸ். இந்தியா பட்டத்தை வென்றவரை இப்போது வெள்ளித்திரையில் களமிறக்கி இருக்கிறார் இயக்குநர்.

இந்தப்படத்தில் மற்றுமொரு ஹைலைட் சமாச்சாரம் இருக்கிறது. தனது குரலால் மயக்கிய பி.சுசீலா பாடிய ‘பார்த்த ஞாபகம்’ பாடலை ஷ்ரேயா கோஷல் பாடியிருக்கிறார்.

ஆரம்பத்தில் சுசீலா பாடிய பாடலை நீங்கள் பாடவேண்டும் என ஷ்ரேயா கோஷலிடம் சொன்னப்போது அலறியடித்து கொண்டு நோ சொல்லியிருக்கிறார். அப்பேர்பட்ட பாடகி பாடிய பாடலை நான் திரும்ப பாடுவதா. அது சரிவராது என அடம்பிடித்த ஷ்ரேயாவை ஒரு வழியாக சமாதானப்படுத்தி பாட வைத்திருக்கிறார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...