No menu items!

’பாகுபலி’ இல்லைன்னா ’பொன்னியின் செல்வன்’ இல்ல1!

’பாகுபலி’ இல்லைன்னா ’பொன்னியின் செல்வன்’ இல்ல1!

மணி ரத்னம் பொதுவாகவே எதைப் பற்றியும் பேச மாட்டார். கமெண்ட் அடிக்க மாட்டார். சைலண்ட்டாக ஒரு பார்வை பார்த்துவிட்டு போய்விடுவார்.

ஷூட்டிங்கில் ஒரு நடிகரோ, நடிகையோ அல்லது ஆர்ட் டைரக்டர், ஸ்டண்ட் மாஸ்டர், கேமராமேன் மாதிரி ஏதேனும் டெக்னீஷியனோ தங்களது வேலையைப் பார்க்கும் போது மணி ரத்னம் ஒரு கமெண்ட்டும் அடிக்கவில்லை என்றால் அது ஓகேதான் என்று அர்த்தம்.

சில சமயங்களில் மணி ரத்னம் புன்னகைத்தால் அது நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.

இப்பேர்பட்ட மணி ரத்னம், இப்பொழுது வாயைத் திறந்து பாராட்டியிருக்கிறார் என்றால் ஆச்சர்யம்தான்.

மணி ரத்னத்தின் பாராட்டைப் பெற்றவர் ’பாகுபலி’ வரிசை படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான ப்ரமோஷன் வேலைகளில் பொன்னியின் செல்வன் டீம் மும்முரமாக இருக்கிறது. ஹைதராபாத்தில் நடந்த விழாவில் பேசிய மணி ரத்னம், ‘’பாகுபலி படத்தை ராஜமெளலி இரண்டு பாகங்களாக எடுக்காம இருந்திருந்தா இன்னிக்கு ‘பொன்னியின் செல்வன்’ படத்தை நான் எடுத்திருக்கவே மாட்டேன். அதனால ராஜமெளலிக்குதான் நான் நன்றி சொல்லணும். ’பொன்னியின் செல்வன்’ படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க பாகுபலிதான் ஒரு பாதை வகுத்து கொடுத்திருக்கு. அதே மாதிரி ஒட்டுமொத்த சினிமா இண்டஸ்ட்ரிக்கும் ஒரு வரலாற்றுப் படத்தை எடுப்பதற்கான தைரியத்தையும் கொடுத்திருக்கு.. ஃப்லிம் மேக்கர்ஸ் இந்திய வரலாற்றை திரைப்படங்களாக எடுக்க மிகப்பெரிய பாதையை உருவாக்கி கொடுத்திருக்கார் ராஜமெளலி’’ என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

மணி ரத்னம் முதல் முறையாக இப்படி மனம்விட்டு, வாய்விட்டு பாராட்டியதை பார்த்து கோலிவுட்டில் பலர் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள்.

’பொன்னியின் செல்வன் 2’ க்ளாஸிக் படமாக இருக்கும் – கார்த்தி

’பொன்னியின் செல்வன்’ படத்தில் ரொம்பவே ஒன்றிப்போய் இருக்கிறார் கார்த்தி.

வந்தியத்தேவனாக நடித்திருக்கும் கார்த்தி, ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் என்னுடன் நடித்திருக்கும் நடிகர்கள், நடிகைகளுடன் என் உயிர் இருக்கும் வரை வாழ்க்கை முழுவதும் நட்போடு இருப்பேன்’ என்று உருகியிருக்கிறார்.

அந்தளவிற்கு த்ரிஷா, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா லஷ்மி ஆகியோருடன் கார்த்திக்கு நட்பு அந்தளவிற்கு நெருக்கமாகி இருக்கிறது. இப்போது ப்ரமோஷனுக்காக எங்கே சென்றாலும் இந்த நான்கு பேரும் ஒன்றாக கட்டிப்பிடித்து கொண்டுதான், கைகளைப் பிடித்து கொண்டுதான் வலம் வருகிறார்கள்.

பொன்னியின் செல்வன் மேக்கிங் பற்றி பேசுகையில், ‘’பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றையும், பாகம் இரண்டையும் ஒரே நேரத்தில்தான் ஷூட் பண்ணினோம். முதல் பாகம் பொழுதுபோக்கு அம்சப் படமாக இருந்திருக்கும், ஆனால் இரண்டாம் பாகம் ஒரு பக்காவான க்ளாஸிக் படமாக இருக்கும்.’’ என்று ஒரு தெரிவித்து இருக்கிறார்.


ஆண் நண்பருடன் காரில் தமன்னா!

சினிமாவில் அவ்வப்போது யாராவது காதல் கிசுகிசுவில் சிக்குவது வழக்கம்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் எந்த நடிகரும், நடிகையும் தங்களது காதலை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதே இல்லை.

இந்த மாதிரி காதல் கசமுசாவில் சிக்கும் நடிகைகளும், நடிகர்களும் சொல்லி வைத்த மாதிரி, ஒரே கமெண்ட்டைதான் அடிப்பார்கள். அவர் ஒரு நல்ல நண்பர் என நடிகைகள் சொல்வார்கள். எங்களுக்குள்ளே நல்ல நட்பு இருக்கிறது என்று நடிகர்கள் சிரிப்பார்கள்.

இப்போது இந்த வகையறாவில் சிக்கி இருப்பவர் தமன்னா.

தமன்னா நடித்து வரும் வெப்சிரீஸில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் வர்மாவுடன் காதல் என சமீபகாலமாகவே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

கோவாவில் புத்தாண்டு கொண்டாட்டம் ஒன்றில் இவர்கள் இருவரும் முத்தமிட்டு கொண்டார்கள் என்று ஒரு வீடியோவும் வெளி வந்தது.

இப்போது இந்த காதல் ஜோடி தங்களது ஒளடி க்யூ7 காரில் மும்பையில் அடிக்கடி ரவுண்ட் அடித்து வருவதாகவும், ஒன்றாக ஷாப்பிங் போவதாகவும் தெரிய வந்திருக்கிறது.

இதற்கிடையில் விஜய் வர்மாவுடன் தமன்னா காரில் உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.

தமன்னா சிறு வயதிலேயே நடிக்க வந்துவிட்டாலும், இப்போது வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லாததாலும் சீக்கிரமே திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுவார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.


மே 1- அஜித் ரசிகர்களுக்கு எதிர்பாராத கொண்டாட்டம்!

1993-ல் வெளியான ‘அமராவதி’ மூலம் அஜித்குமார் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தை அந்த காலக்கட்டத்தில் மிகப்பிரபலமாக இருந்த ‘சோழா கிரியேஷன்ஸ்’. நிறுவனத்தின் போன்னுரங்கம் தயாரித்திருந்தார்.

ஆக அஜித் தமிழ் சினிமாவிற்கு வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இப்போது அஜித்திற்கு இருக்கும் வரவேற்பு நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே போவதால், அவரது முதல் படமான ‘அமராவதி’யை மீண்டும் ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருக்கிறார் சோழா பொன்னுரங்கம்.

அஜித் பிறந்த நாளான மே 1-ம் தேதி இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள். 30 வருடங்களுக்கு முன்பு எடுத்த படம் என்பதால், அதை இன்றைய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் முறைக்கு மாற்றியிருக்கிறார்கள். படத்தில் இடம்பெறும் ஒலி, ஒளி இவை இரண்டையும் டிஜிட்டலாக்கி இருக்கிறார்கள்.

புதிய படங்களுக்கே திரையரங்குகள் கிடைப்பது பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால் இந்தப் படத்திற்கு திரையரங்குகள் எவ்வளவு கிடைக்கும் என்பது இன்னும் நிச்சயமாகவில்லை. ஆனாலும் 400 திரையரங்குகளிலாவது திரையிடும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் சோழா பொன்னுரங்கம்.
சால்ட் & பெப்பர் லுக்கிலே பார்த்து பார்த்து பழக்கப்பட்ட இந்த தலைமுறை அஜித்தை இளமைத்துள்ளலுடன் பார்க்க ’அமராவதி’ ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதால் திரையரங்குகள் மளமளவென புக் ஆகிவருகிறதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...