No menu items!

ஷங்கர் கொள்கைல உடன்பாடு இல்லை – கமல் Open Talk – இந்தியன் 2 விழா

ஷங்கர் கொள்கைல உடன்பாடு இல்லை – கமல் Open Talk – இந்தியன் 2 விழா

லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்தியன் 2 திரைப்படம் ஒரு வழியாக நிறைவு பெற்று பாடல் அறிமுக விழாவும் நடந்து விட்டது. பல ஆண்டுகள் முடங்கிப்போய் படப்பிடிப்பு நடக்காமல் இருந்த இந்த படம் வெளி வருமா ? என்கிற கேள்வியை திரையுலகில் கேட்கும்படி ஆனது. அந்தளவுக்கு சிக்கலில் இருந்தது தயாரிப்பு தரப்பு. பூந்தமல்லி படப்பிடிப்பு தளத்தில் ஷூட்டிங் நேரத்தில் நடந்த விபத்தில் ஏற்பட்ட உயிரழப்பு படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. மயிரிழையில் உயிர் தப்பிய இயக்குனர் ஷங்கர் அதிலிருந்திலிருந்து விடுபடவே பல மாதங்கள் ஆகிவிட்டது. விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் கொடுத்து அவர்களை அரவணைத்தது.

இந்தியன் 2 படத்திற்கு பிறகு கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி முடித்து, விக்ரம் படத்தை தயாரித்து வெளியிட்டும், தற்போது தக்ஸ் லைஃப் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து வருகிறார். ஷங்கர் ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படத்தையும் எடுத்து முடித்து விட்டார். இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு எல்லா சிக்கல்களும் தீர்ந்து போய் தொடர்ந்து வேலைகள் நடந்து இப்போது ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது.

நேரு உள் விளையாட்டரங்கில்; நடந்த விழாவில் இளம் தலையினரின் பங்களிப்பைத்தான் அதிக பார்க்க முடிந்தது. இந்தியன் 1 வெளியாகும் போது குழந்தையாக நான் இருந்தேன் இப்போது இந்தியன்2 படத்திற்கு இசைய்மைக்கி்றேன் என்று அனிரூத் சொன்னபோது அரங்கத்தில் கைதட்டல் எழுந்தது. இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடனம் ஆடி அசத்தினார். மகன். ஆனால் ஷங்கர் இயக்கிய ஐ திரைப்படத்தில் அர்னால்ட் வந்து கலந்து கொண்அதைப் போன்ற பிரமாண்டம் இந்த நிகழ்ச்சில் இல்லை என்பதை உணரமுடிந்தது. கமல்ஹாசன் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வை இன்னும் கொஞ்சம் உழைத்து பிரமாண்டப்படுத்தியிருக்கலாம்.

இதில் கமல்ஹாசன் பேசும்போது, இது நீளமான கதை. எங்கிருந்து ஆரம்பிகிறதுனு தெரியல. ஷங்கர் அடைந்திருக்கும் இந்த உயரம் அதிர்ஷ்டம், விபத்து அல்ல. அன்று பார்த்த அதே துடிப்புடன் இன்றும் இருக்காரு. அவர் முதன்முதல்ல ஒரு கதையை எடுத்துட்டு என்கிட்ட வந்தாரு. அப்போ எனக்கு அந்த சித்தாந்ததுல உடன்பாடு இல்லனு நடிக்கல. இது எல்லோருக்கும் தெரிஞ்சதுதான். ஷங்கர் இதுக்கு பிறகும் என்கிட்ட வந்தாரு. அப்போ நான் சிவாஜி சாரை வச்சு ஒரு படத்தை இயக்கலாம்னு முடிவு பண்ணியிருந்தேன்.

அப்போ அதே மாதிரியான கதையைதான் ஷங்கர் சொன்னாரு. அப்போ நான் சிவாஜி ஐயாகிட்ட இதை பத்தி சொல்லும்போது அவரும் நீ சொன்ன கதையில நீ மகன் நான் அப்பா, இதுல அப்பாவும் மகனும் நீதான். இந்த கதையை பண்ணுனு சொன்னாரு. நான் பலர் பல விஷயங்கள் கத்துக்கிட்டதுனால தான் இன்னைக்கு ரசிகர்கள் முன்னாடி நிக்கிறேன். சுபாஷ்கரன் இந்த படத்தை இன்னும் பார்த்திருக்கமாட்டாரு. எங்க ரெண்டு பேரையும் நம்பி பல விஷயங்கள் பண்ணுங்கன்னு சொன்னாரு. இந்த படத்துக்கு கொரோனா, விபத்துனு பல தடைகள் வந்துச்சு. இந்தியனே அரசியல்தான் பேசுது. என்னுடன் இந்த படத்துல உதயநிதி உறுதுணையாக நின்றது போல அவரோடு நான் உடன் நிற்கும் நேரம் வரலாம். மருதநாயகம் படத்துக்கு ரவிவர்மன் துணை ஒளிப்பதிவாளராக வேலைப் பார்த்தார். இந்த படத்துல எது கிராபிக்ஸ்னு கேட்டீங்கன்னா..அது தான் ஸ்ரீனிவாஸ் மோகனுடைய வெற்றி. அது போலதான் சொல்லப்போறாங்க. இந்த படத்துல் ஒரு அசிஸ்டன்ட் என்கிட்ட ‘உங்க கூட நான் இந்த படத்துல மறுபடியும் வேலை பாக்குறேன்’னு சொன்னாரு. அவர் விபத்துல இறந்துட்டாரு. அதே போல் விவேக், மனோபாலா. அவங்க இல்லைங்கிறது உங்களுக்கு குறையாக இருக்கலாம். ஆனால், படத்துல அது குறையாக இருக்காது. என் வயசை விட 15 வயசுதான் இந்தியன் தாத்தாவுக்கு அதிகம். என்னுடைய அடையாளம் தமிழன், இந்தியன் என்பதுதான். பிரித்தாளும் முயற்சி இந்தியாவுல நடக்காது. தமிழன் இந்தியாவை ஆளும் நாள் ஏன் வரக்கூடாது. இதையும் செய்து காட்டுவோம். இந்த விழாவுல இதை ஏன் பேசுனீங்கனு கேட்பாங்க.

எந்த விழாவிலையும் பேசுவேன். இந்த நாட்டின் ஒற்றுமையை நாம் காக்க வேண்டும். அதைதான் இந்த படம் உணர்த்துகிறது. நும னார தந மநடலைந படத்தை பார்ப்பதற்கு மாறுவேஷத்துல போனேன். இந்தியன் படத்தோட ஷூட்டிங் சன் டிவி அலுவலகத்துல எடுத்தோம். அப்போ தேனாம்பேட்டையில இருந்து மயிலாபூருக்கு நடந்தே போனேன். ஒரு முறை நடிகர் டி.ராஜேந்தர் என்னை கட்டிப்பிடிச்சு ‘நீங்கலாம் சினிமாவை விட்டு போகக்கூடாது’னு அழுதாரு. நான் இங்க நிக்குறதுக்கு முக்கிய காரணத்துல அவரும் ஒருத்தர் என்று கமல்ஹாசன் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...