No menu items!

நயன்தாராவின் ஒரு கோடி ரூபாய் Watch!

நயன்தாராவின் ஒரு கோடி ரூபாய் Watch!

Watchகளை watch பண்ணும் காலம் இது.

பாஜகவின் தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் சர்ச்சை எல்லோர் பார்வையையும் Watchகள் பக்கம் திருப்பிவிட்டிருக்கிறது. யார் என்ன Watch கட்டியிருக்கிறார்கள் என்று உற்றுப் பார்க்கத் துவங்கிவிட்டனர்.

அரிதான சம்பவமாக நயன்தாரா சமீபத்தில் டிடிக்கு பேட்டியளித்தார். கோயில் சுண்டல் போல் அந்தப் பேட்டி எல்லா ஊடக நிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட்டது. நீங்களும் பார்த்திருப்பீர்கள். வாவ் தமிழாவின் யூடியுப் தளத்திலும் பார்க்கலாம் (https://www.youtube.com/watch?v=JIL1UJL6Ubw) இந்த வீடியோவில் என்ன விசேஷம் என்றால் விக்னேஷ் சிவன் பரிசளித்த Watch என்று கையைக் காட்டுவார். அந்த வாட்சிலிருந்து பிரபலங்கள் அணியும் கடிகாரப் பட்டியலைப் பார்ப்போம்.

விக்னேஷ் சிவன் பரிசளித்த Watch என்று நயன்தாரா காட்டியது Michael Kors கடிகாரம். அந்த வாட்ச் நயன்தாரா ரேஞ்ச்சுக்கு கொஞ்சம் விலை கம்மிதான்.

Michael Kors கைக் கடிகாரங்கள் விலை 7 ஆயிரம் ரூபாயில் துவங்குகிறது. 40 ஆயிரம் ரூபாய் வரை செல்கிறது. விக்னேஷ் சிவன் அளித்த வாட்ச் 40 ஆயிரம் ரூபாய் வாட்ச் என்று சொல்லப்படுகிறது.

நாற்பதாயிரம் ரூபாயெல்லாம் நயன் – விக்கிக்கு ஒரு காசா என்று நீங்கள் நினைப்பது. கரெக்ட். நீங்கள் அப்படி நினைப்பீர்கள் என்று தெரிந்துதான் சமீபத்தில் கணவர் விக்னேஷுடன் விஷு பண்டிகையைக் கொண்டாட தனி விமானத்தில் பயணித்தபோது வேறு ஒரு வாட்ச் கட்டியிருந்தார். அந்த வாட்ச் பெயர் ரிச்சர்ட் மில் ஆர்எம் – RICHARD MILLE RM 11 ASIA EDITION – உலகின் விலை உயர்ந்த வாட்ச். அந்த விமானப் பயணத்தில் நயன் கட்டியிருந்த கைக் கடிகாரத்தின் விலை ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாய். இந்தப் பணத்தில் சென்னையில் ஒரு வாட்ச் ஷோரூம் வைத்து பத்து பேருக்கு வேலை கொடுக்கலாம்.

இந்த ரிச்சர்ட் மில் கைக்கடிகாரங்களை மிகப் பெரிய கோடீஸ்வரர்களும் அதிகம் சம்பாதிக்கும் நட்சத்திரங்களும்தான் அணிவார்கள். நம்ம நயன் அணிந்திருக்கிறார்.

‘என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவா?’ என்று படையப்பா படத்தில் ரஜினிகாந்த் பாடுவார். அதுபோல நயனின் ஒரு கோடி ரூபாய் கைக் கடிகாரத்துக்கு காரணம் தமிழ்தான் என்று தமிழர்கள் பெருமைக் கொள்ளலாம்.

தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலருக்கு கைக்கடிகாரங்கள் மீது அலாதியான காதல் இருக்கிறது. கமல்ஹாசன் பல வகை கைக்கடிகாரங்களை வைத்திருக்கிறார். அவருக்கு பிடித்தது ரோலக்ஸ் மாடல்கள்.

ரஜினிகாந்துக்கு பிடித்தது எளிமையான மைக்கேல் கார் கைக் கடிகாரங்கள் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இசையால் நம்மை மயக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் கைக் கடிகாரங்களில் மயங்கிவிடுவார். சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தபோது அவர் அணிந்திருந்த கைக் கடிகாரம் தெளிவாக புகைப்படங்களில் பதிவாகியிருந்தது. அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம் HUBLOT BIGBANG CERAMIC BLUE வாட்ச். இதன் விலை, அதிகமில்லை ஜெண்டில்மென் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்தான்.

த்ரிஷாவும் வாட்ச் ப்ரியை. பலவிதமான கைக் கடிகாரங்கள் வைத்திருக்கிறார். அவருக்குப் பிடித்தமானது Rolex Datejust என்ற கடிகாரம். அதன் விலை 8.5 லட்சம் ரூபாய்.

காஜல் அகர்வால் விலையுயர்ந்த கைக் கடிகாரங்களை அணிபவர். அவர் அணியும் Ballon Bleu De Cartier Rose Gold கைக் கடிகாரத்தின் விலை 14 லட்சம்.

சமந்தா அணியும் கைக் கடிகாரங்களும் விலை அதிகமானவைதான். சமீபத்தில் அவர் ஒரு விழாவுக்கு அணிந்து வந்திருந்த Bvlgari Serpenti கடிகாரத்தின் விலை 6 லட்சம் ரூபாய்.

மலையாள நடிகர்களுக்கு அதிக சம்பளம் கிடையாது. படத் தயாரிப்பே சில கோடிகளில் முடிந்துவிடும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் மோகன்லால் அணிந்திருக்கும் கைக் கடிகாரத்தின் புகைப்படம் வெளிவந்திருக்கிறது. Patek Philippe Aquanaut Travel Time என்ற அந்த வாட்ச்சின் விலை 25 லட்சம் ரூபாய்.

சரி, நட்சத்திரங்கள் அணியும் கைக் கடிகாரங்களின் விலைகள் பற்றி படித்தாகிவிட்டது.

இனி நமது 40 ஆயிரம் ரூபாய் மாத சம்பள வேலையை விட்ட இடத்திலிருந்து தொடர்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...