No menu items!

Maddy உடன் ஜோடி சேரும் Nayanthara

Maddy உடன் ஜோடி சேரும் Nayanthara

அஜித், விஜய், சிம்பு, தனுஷ், விக்ரம், சூர்யா என ஒரு ரவுண்ட் வந்துவிட்ட நயன்தாரா இன்றைய நிலவரப்படி ஷாரூக்கானுடனும் சேர்ந்து டூயட் பாடிவிட்டார்.

ஆனால் ‘சாக்லேட் பாய்’ ஆக அறிமுகமாகி இப்பொழுதும் காதலுக்கு காதலன் என்றால் அது நான்தான் என்று புன்னகைக்கும் மாதவன் உடன் இதுவரை நயன் நடித்தது இல்லை.

சசிகாந்த் என்னும் அறிமுக இயக்குநர் நச்சென்று ஒரு Love Subject சொல்ல அதைக்கேட்டு ஸ்க்ரிப்டுக்குள் நழுவி விழுந்திருக்கிறார் நயன். காரணம் ஜோடி மேடி.

எப்போது ஷூட்டிங் என்று கேட்ட நயனிடம், ஜனவரி 2023 என்று இயக்குநரும் தயாரிப்பாளரும் சொல்ல, ஒகே என்று கால்ஷீட்டுக்கு டபுள் டிக் அடித்திருக்கிறாராம் நயன்.

காதல் சொட்ட சொட்ட படம் இருக்கமேண்டுமென்பதற்காக இதில் மற்றொரு காதல் எக்ஸ்பர்ட்டான சித்தார்த்தையும் நடிக்க வைக்கும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

லவ் மேலே மட்டும் கவனத்தை வைத்துவிட்டு ஸ்கிரிப்டில் ஃபெயிலியர் ஆகாம இருந்தால் சரி.


ஹரியைத் துரத்தும் Suriya

சூர்யா எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்கிற மாதிரியான ஒரு பக்காவான கமர்ஷியல் படமாக அமைந்தது ‘சிங்கம்’ மட்டுமே.

இறுதியாக நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ பெரிதாக எடுப்படவில்லை. மறுபக்கம் ‘சூரரைப் போற்று’, ‘Jaibhim’ போன்ற படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் கமர்ஷியல் படங்களாக அமையவில்லை.

வித்தியாசமான படங்களில் நடித்தாலும் கமர்ஷியல் ஹீரோவாக மார்க்கெட்டில் நின்றால்தான் ஒரு கெத்து. அது இப்போதைக்கு சூர்யாவுக்கு மிஸ்ஸிங்.

தனது தம்பி Karthi-க்கு இருக்கும் மார்க்கெட்டை விட சூர்யாவுக்கு கொஞ்சம் டல்லடித்தபடிதான் இருக்கிறது.

இதனால் ஆழ்ந்த யோசனையில் சூர்யா இருக்கிறாராம்.

’சிங்கம்’ படவரிசையில் மூன்று படங்களும் ஏதோ ஒரு வகையில் கமர்ஷியல் படங்களாக அமைந்துவிட, இப்போது மீண்டும் சிங்கத்தை நான்காவது முறையாக கர்ஜிக்கவிடலாமா என்று தீவிரமாக சிந்தித்து கொண்டிருக்கிறார் சூர்யா.

இதன் தொடர்ச்சியாக, ஹரியையும் சூர்யா தரப்பு அணுகியிருக்கிறது. சிங்கம் – 4 படத்திற்கான கதையை ஹரி ஏறக்குறைய முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது. இனி சூர்யாதான் ஒகே சொல்லவேண்டும் என்கிறது ஹரி அண்ட் டீம்.

இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் வாடகைத்தாய் பிரச்சினை, ரோட்டில் பள்ளம் தோண்டி போட்டுவிட்டு கொள்ளையடிக்கும் காண்ட்ராக்டர்களைபத்தி ஒரு ஸ்கிரிபட் பண்ணியிருந்தால் ஜோராக இருக்கும்.


Plastic Surgery எனக்கு தேவையில்லை – Radhika Apte

நல்ல நடிகைதான். கவர்ச்சியையும் கண்ணியமாக காட்டியவர்தான். ஆனாலும் சரியான வாய்ப்புகள் இல்லாமல் அமைதியாக இருக்கிறார் ராதிகா ஆப்தே. ’கபாலி’யில் ரஜினியுடன் ஜோடி கட்டிய அதே அழகிதான்.

மனதில் பட்டதை பட்டென்று பேசுபவர். சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கும் வெளிப்படையாக பதிலளிப்பவர். மெச்சூர்டான பக்குவமுள்ள ஒரு சில நடிகைகளில் ஒருவர்.

‘’என்னைத்தேடி வந்த பல வாய்ப்புகளை நானே முன்வந்து மறுத்து இருக்கிறேன். எனக்கு தெரிந்தே பல நட்சத்திரங்கள் தங்களுடைய முக அழகையும், உடல் அமைப்பும் எடுப்பாக இருக்கும்படி வைத்து கொள்ள அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அழகை எடுப்பாக காட்டும் அறுவை சிகிச்சைகளை செய்து கொள்ள நான் மறுத்ததால், இன்று நடித்துகொண்டிருக்கும் பல இளம் நடிகைகளிடம் என்னுடைய வாய்ப்புகள் போயிருக்கின்றன. வயது என்பது மறுக்க முடியாத ஒன்று. அதை மறுக்க முடியாது. மறைக்க முடியாது. பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் கமர்ஷியல் படங்களுக்கு இளம் நடிகைகளைத்தான் விரும்புகிறார்கள். இவர்களுடன் போட்டிப் போட்டு வாய்ப்புகளைப் பெற அழகை மெருகூட்டும் அறுவை சிகிச்சைகளுக்கு நான் தயாராக இல்லை’ என்று தீர்மானமாக சொல்கிறார் ராதிகா ஆப்தே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...