ஏகப்பட்ட கனவுகளோடு ‘வணங்கான்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க கமிட்டானார் கீர்த்தி ஷெட்டி.
தெலுங்கில் விஜய் சேதுபதியின் மகளாக கீர்த்தி ஷெட்டி நடித்த ‘உப்பெண்ணா’ படத்தின் மூலம் இவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு. மளமளவென தெலுங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால்,சமீபத்தில் தெலுங்கில் அவர் நடித்தப் படங்கள் பெரிதாக போகவில்லை.
இதனால் தமிழில் ஒரு இடத்தைப் பிடித்துவிட வேண்டுமென்ற நோக்கத்தோடுதான் இங்கே வந்தார். பாலா இயக்கத்தில், சூர்யாவுக்கு ஜோடி என்றதும் ஜோராக கால்ஷீட்டை அள்ளிக் கொடுத்தார்.
கீர்த்தி ஷெட்டிக்கு ஒன்னரைக்கோடி சம்பளம் கொடுத்திருப்பதாகவும் பேச்சு அடிப்பட்டது.
ஆனால் சூர்யாவுக்கும் பாலாவுக்கு முட்டிக்கொண்டதும், ’வணங்கான்’ ப்ராஜெக்ட்டில் இருந்து சூர்யா விலகிவிட்டார். சூர்யா இல்லையென்றாலும், பாலா படத்தில் நடிக்கவேண்டுமென கீர்த்தி ஷெட்டி தரப்பில் ஒன்றும் சொல்லவில்லை.
ஆனாலும் அவர் கொடுத்த கால்ஷீட் அனைத்தையும் வீணடித்துவிட்டார்களாம். அதுதவிர பாலா படத்தில் நடித்தால் படம் இழுத்துக்கொண்டே போகும், சூர்யாவும் ஹீரோ இல்லை. அதனால் நடிக்க வேண்டுமா வேண்டாமா என்று யோசித்து கொள்ளுங்கள் என்று இங்கே தூபம் போட்டிருக்கிறார்கள்.
இதனால் சம்பளம் ஒன்னரைக் கோடிக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கொள்ள கூடாது என கீர்த்தி ஷெட்டி இந்த ப்ராஜெக்ட்டில் இருந்து கழன்று ஓட்டம் பிடித்திருப்பதாக சொல்கிறார்கள்.
#keerthyshetty, #vanangaan, #suriya, #bala, #uppenna, #upenna, #tollywood, #vijaysethupathy,
அரசியல் களத்தில் இறங்கும் தளபதி!
விஜய் சும்மா இருந்தாலும் அவரைச் சுற்றி நடக்கும் பஞ்சாயத்துகள் அவரை அரசியலுக்குள் இழுத்துவிட்டுவிடும் என்கிறார்கள்.
சினிமாவிலும் விஜய் படங்கள் வெளியாவதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் பேச்சு அடிப்படுகிறது.
இதனால் அரசியல்ரீதியாக களமிறங்கினால் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியுமென விஜய் தரப்பில் யோசிக்கப்பட்டு வருகிறதாம். இதை செயல்படுத்தும் வகையில் ‘லியோ’ படம் முடிந்து வெளியாகும் நேரத்தில் அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரவிருப்பதால், ரஜினியின் பாணியில் வாய்ஸ் கொடுப்பதா அல்லது நேரடியாக புதுக்கட்சி தொடங்கி களத்தில் இறங்குவதா என விஜய் தீவிர யோசனையில் இருப்பதாகவும் கிசுகிசு கிளம்பியிருக்கிறது.
’லியோ’ ஷூட் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் ஆரம்பிக்கும் நேரத்தில் தனது ரசிகர் மன்றங்களை ஒழுங்கமைக்கும் பணிகளை விஜய் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிகிறது.
#leo, #vijay, #rhalapathy, #vijay67, #politics, #newpoliticalparty, #logeshkanagaraj, #lcu,
தமிழ் சினிமாவில் மீண்டும் கதைத் திருட்டு!
சமீபத்தில் ஒடிடி-யில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டிருக்கும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
மம்மூட்டியின் நடிப்பிற்கும், இயல்பான திரைக்கதைக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில்தான் இயக்குநர் ஹலீதா ஷமீம் ஒரு பதிவொன்றை சமூக ஊடகத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் தான் இயக்கிய ‘ஏலே’ படத்திற்காக கிராமத்து மக்களை தயார் செய்து முதன் முதலில் அக்கிராமத்தில் அவர்களை நடிக்க வைத்து எடுத்தோம்.
அதே கிராமத்தில் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படமாக்கப்பட்டது மகிழ்ச்சியே.
இருப்பினும் நான் பார்த்து பார்த்து சேகரித்த அழகியல் யாவும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தின் நெடுக களவாடப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது. என்று மனம் குமுறியிருந்தார்.
இந்த திரைக்கதை மற்றும் காட்சிப்படுத்துதல் பஞ்சாயத்து முடிவதற்குள்ளாகவே அடுத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது சமீபத்தில் வெளியாகி இருக்கும் ’அயோத்தி’ படம்
‘தீராத பக்கங்கள்’ வலைப்பக்கத்தில் 2011 செப்டெம்பர் 3-ம் தேதியில் எழுதிய ‘அழக்கூடத் திராணி அற்றவர்கள்’ என்னும் பதிவின் அப்பட்டமான காப்பியாக தெரிகிறது ‘அயோத்தி’ படம் என்ற குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் எழுத்தாளர் ஜீவசுந்தரி.
இப்படி அடுத்தடுத்து இன்ஸ்பிரேஷ என்ற பெயரிலோ அல்லது நேரடியாகவோ கதைத்திருட்டு குற்றச்சாட்டு எழுந்திருப்பது கோலிவுட்டில் கலவரத்தைக் கிளப்பியிருக்கிறது.
#nanpagalnerathumayakkam, #mamooty, #halitha, #ayodhi, #copy, #storytheft, #sasikumar,