No menu items!

தண்ணீரூக்கு அடியில் சண்டைப் போட்ட கீர்த்தி ஷெட்டி!

தண்ணீரூக்கு அடியில் சண்டைப் போட்ட கீர்த்தி ஷெட்டி!

சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தால், தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரலாம் என கணக்குப் போட்ட கீர்த்தி ஷெட்டிக்கு பாலா அல்வா கொடுத்ததுதான் மிச்சம். ‘வணங்கான்’ படத்தில் சூர்யா இல்லையென்றதுமே, கீர்த்தி ரொம்பவே அப்செட்.

இதனால் சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த கீர்த்தியிடம் வகையாக சிக்கியவர் வெங்கட் பிரபு.

நாகார்ஜூனாவின் வாரிசும், சமந்தாவின் முன்னாள் கணவருமான நாக சைதன்யாவுக்கு தமிழில் தனது மார்க்கெட்டை விரிவுப்படுத்தவேண்டுமென்று ஆசை. இதனால்தான் தமிழ் இயக்குநரை வைத்து தெலுங்கு, தமிழ் என இருமொழிகளில் படமெடுக்க நீண்ட நாட்களாகவே திட்டமிட்டு வந்தார். அப்படி அமைந்ததுதான் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘கஸ்டடி’.

தமிழ் இயக்குநர் மட்டுமில்லாமல் தமிழிலும் இப்படம் வெளியாகும் என்பதால் கீர்த்தி, ரொம்பவே மெனக்கெட்டு நடித்திருக்கிறாராம்.

இப்படத்தில் நாக சைதன்யா போலீஸ் ஆக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக டூயட் பாடும் கதாபாத்திரம் என நினைத்து கமிட்டான கீர்த்தி ஷெட்டியை நன்றாக வேலை வாங்கிவிட்டார் வெங்கட்பிரபு.

படம் முழுவதும் வருகிற கதாபாத்திரம், முக்கியமான காட்சிகளில் இடம்பெறும் கீர்த்தியின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அதிகம், இதனால் கீர்த்தியை ஜிம்னாஸ்டிக்ஸ் கற்றுகொள்ள அனுப்பி வைத்துவிட்டார் வெங்கட்பிரபு.

ஜிம்னாஸ்டிக்ஸை ஓரளவுக்கு கற்றுகொண்டு அக்கடா என்று உட்கார்ந்த கீர்த்தியை அப்படியே கிளம்புமா என அடுத்த பயிற்சிக்கு அனுப்பிவிட்டார் வெங்கட்பிரபு. ’கஸ்டடி’ படத்தில் தண்ணீருக்கு அடியில் இரண்டுமூன்று நிமிடங்கள் மூச்சுவிடாமல் தாக்குப்பிடித்தபடியே நடிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கின்றன. அதற்கான பயிற்சியை எடுத்துவிட்டு. வாம்மா, அப்புறம் ஷூட்டிங் போகலாம் என்று சொல்லியிருக்கிறார் வெங்கட்பிரபு.

இதனால் பயத்தில் நடுங்கிக்கொண்டே அந்த பயிற்சிக்கும் வேறுவழியில்லாமல் கிளம்பி இருக்கிறார் கீர்த்தி ஷெட்டி.

இரண்டு நாட்கள், தண்ணீருக்கு அடியில் இருந்தபடியே மூச்சுவிடாமல் நடிப்பதற்கான பயிற்சியை இரண்டு நாட்கள் எடுத்தபிறகே, 15 நாட்கள் அந்த காட்சிகளை ஷூட் செய்திருக்கிறார்கள்.

இதனால் தமிழில் நான் ஒரு ஆக்‌ஷன் ஹீரோயினாக அறிமுகமாவேன் என்று நினைக்கவில்லை என்று உற்சாகத்தில் இருக்கிறார் கீர்த்தி ஷெட்டி.


தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் பண அரசியல்!

முன்பெல்லாம் அரசியலில் ஆட்சியைப் பிடிக்க சினிமா ட்ராமாக்கள் அதிக நடக்கும்.

இப்பொழுது சினிமா தொடர்பான சங்கங்களில் அதிகாரத்தைப் பிடிக்க பணத்தை வைத்து அரங்கேறும் அரசியல் நடக்க ஆரம்பித்திருக்கிறது.

இதற்கு உதாரணம் சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல்.
இந்த முறை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தலில் கோடிக்கணக்கில் பணம் விளையாடி இருக்கிறது என்கிறார்கள்.

இரண்டு அணிகளாகவும், சிலர் சுயேட்சை வேட்பாளர்களாகவும் போட்டியிட தயாரிப்பாளர் சங்கத்தேர்தல் சூடுப்பிடித்தது.

இந்த இருதரப்பிலும் ஓட்டுப் போடும் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு பண பட்டுவாடா நடந்திருக்கிறது. சில பல பரிசுகளும் ரகசியமாக வழங்கப்பட்டிருக்கிறது.

ஒரு தரப்பில் ஓட்டு ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாயும், மற்றொரு தரப்பில் எப்படியாவது இந்தாண்டு பதவிகளை பிடித்துவிட வேண்டுமென ஓட்டுக்கு முப்பதாயிரம் ரூபாயும் கொடுக்கப்பட்டதாம்.

துணைத்தலைவர் பதவிக்குதான் ரொம்பவே டிமாண்ட் இருந்திருக்கிறது. துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சுயேட்ச்சை வேட்பாளர் ஒருவர் தேர்தலில் இருந்து விலக 30 லட்ச ரூபாய் கொடுக்குமளவிற்கு டிமாண்ட் அதிகரித்துவிட்டதாம்.

இதற்கு காரணம் இந்தாண்டு கார்பொரேட் தரப்பிலிருந்து சிலர் முக்கிய பதவிகளுக்கு போட்டியிட்டதுதான் என்று கிசுகிசுக்கிறார்கள்.

உறுப்பினர்களை சந்தித்து கேன்வாஸ் செய்வதற்காக நடத்தப்பட்ட சந்திப்பில், உணவுக்கான ஒரு ப்ளேட் ஆயிரம் வீதம் ஆயிரம் பேருக்கு 10 லட்சமும், கவலைகளை மறந்து பேசும் விருந்தோம்பல் கொண்டாட்டத்திற்காக 3 லட்சமும் செலவழிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். சிலருக்கு விமான டிக்கெட்டும் போட்டு வரவழைத்து ஓட்டு போட வைத்திருப்பதாகவும் பேச்சு அடிப்படுகிறது.

ஒரு தரப்பில் பணப்பலம் அதிகமிருந்ததால், எதிர் தரப்பில் அந்தளவிற்கு பணம் செலவழிக்க முடியாமல் போயிருக்கிறது.

இந்த தேர்தலில், ஓட்டு போடும் போது செல்ஃபோன் பயன்படுத்தகூடாது என்ற விதிமுறையும் மீறப்பட்டிருப்பதாக ஒரு கிசுகிசு உலாவருகிறது. ஓட்டு போட்டுவிட்டு அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பகிர்ந்த நிகழ்வுகளும் அரங்கேறியது என்கிறார்கள். அப்படி நடந்திருந்தால் அது கண்டிப்பாக கண்டனத்திற்கு உரியதுதான் என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.

தேர்தலில் போட்டியிட்ட இருதரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளையும், தகவல்களையும் பரிமாறி வருகிறார்கள். இதனால் தமிழ் சினிமா எந்தளவிற்கு பாதிப்பிற்கு உள்ளாகும் என்பது இனிதான் தெரியவரும்.


’விடாமுயற்சி’ அஜித்தின் வேண்டுகோள்!

அஜித்62 படம் பற்றிய தகவல்கள் இழுத்துக்கொண்டே போனது நினைவில் இருக்கலாம்.

ஒரு வழியாக மகிழ்திருமேனி இயக்க இருக்கிறார். படத்தின் பெயர் ‘விடாமுயற்சி’ என்று லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகுதான் ஏ.கே.வின் ரசிகர்கள் நிம்மதியாகி இருக்கிறார்கள்.

‘விடாமுயற்சி’ படத்தின் ப்ரீ-ப்ரொடக்‌ஷன் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

அஜித்தின் பிறந்தநாளான மே 1-ம் தேதி படம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டுமென லைகா விரும்பியதால், மகிழ்திருமேனி அதற்குள் ஸ்கிரிப்டை முழுமையாக எழுதி முடித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்.

இதனால் ஒரு பெரிய பட்டாளமே விடாமுயற்சி கதை விவாதத்தில் ஈடுப்பட்டு இருந்தது. இரவுப்பகலாக நடந்த விவாதம், ஒரு வழியாக கதையை முடிவு செய்ய உதவியிருக்கிறது.

இப்பொழுது நடிகர்கள், நடிகைகள் தேர்வும், அவர்களது கால்ஷீட் கேட்கும் பணியும் ஏறக்குறைய முடிவடையும் தருவாயில் இருக்கிறது.

இதனால் மே 22-ம் தேதி விடாமுயற்சி ஷூட்டிங்கை தொடங்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளதாம்.

ஷூட்டிங் தொடங்கி ஐந்து மாதங்களில் ஒட்டுமொத்த ஷூட்டிங்கை முடிக்கவேண்டுமென அஜித் வேண்டுகோள் வைத்திருக்கிறாராம். இதற்காக 80 நாட்கள் கால்ஷீட்டும் கொடுத்திருக்கிறார் அஜித்.

ஷூட்டிங்கை ஒரே மூச்சில் முடிக்க அஜித் வேண்டுகோள் வைக்க காரணம் அவரது கனவுப் பயணமான பைக்கில் உலகை வலம்வரும் அந்த வேர்ல்ட் டூர்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...