No menu items!

கொஞ்சம் கேளுங்கள்… ரயிலே… ரயிலே…என்.எஸ்.கே. பாடிய பாட்டும் வந்தே பாரத் ரயிலும்…!

கொஞ்சம் கேளுங்கள்… ரயிலே… ரயிலே…என்.எஸ்.கே. பாடிய பாட்டும் வந்தே பாரத் ரயிலும்…!

நல்லதம்பி என்கிற படத்தில் கலைவாணர் என்.எஸ்.கே.யின் ‘கிந்தனார் காலாட்சேபம் கேட்டிருக்கிறீர்களா?’ ‘இது கிண்டல் அல்லவே அல்ல’ என்று ஆரம்பிப்பார். உண்மையில் நந்தனார் கதையைவிட கிந்தனார் சுவைமிக்கதாக சமூக சீர்திருத்தத்திற்கு வழிகாணும் விதமாக இருக்கும்.

அதில் ரயில் பற்றி பாடுவார். ‘ஏழை, பணக்காரன் – ஜாதி வித்தியாசம் ஏதுமின்றி அனைவரையும் ஏற்றி செல்லும் ரயிலே… ரயிலே’ என்று ரயிலுக்கு புகழ்மாலை சூட்டுவார்.

“இப்போது? வந்தே பாரத் ரயில் பயணத்தால் வந்ததே ஆபத்து” என்றார் நம் அரசியல் நண்பர்.

வந்தே பாரத் சாதாரண மக்கள் நெருங்க முடியாதபடி டிக்கெட் விலையும் மேல்நோக்கி வேகமெடுத்து விட்டது. “வந்தே பாரத் ரயிலை போகிற வழியில் நின்று நாமெல்லாம் அதை ஏக்கத்தோடு வேடிக்கை பார்க்க வேண்டிய நிலை! இப்போது சாதாரண மக்களுக்காக ‘வந்தே பாரத் சாதாரணம்’ என்ற ரயில் விடப்போகிறார்களாம். என்.எஸ்.கே. பாடிய ரயில் பாட்டுக்கு எதிராக ரயில் ஏழை, பணக்காரன் என்று பிரிக்கிறது” என்றார் அவர்.

மக்களின் சமூக நல்வாழ்வுதான் ஆளுவோரின் குறிக்கோளாக இருந்தது. மக்கள் எல்லோரும் சமம், மகிழ்ச்சி எல்லோருக்கும் இருக்க வேண்டும் இதுதான் முன்பு ஆட்சியில் இருந்தவர்களின் சிந்தனை. எந்த விலையும் ஏறாது. 100 ரூபாய் சம்பளத்திலும் நிம்மதி இருந்தது.

ஐந்தாண்டு திட்டங்களையே ராஜாஜி ‘டம்பாச்சாரி திட்டங்கள்’ – ஆடம்பர திட்டங்கள் – போகப்போக அரசாங்கத்தை மக்களை விட்டு விலகிப்போக செய்துவிடும் என்று குறை கூறினார். எச்சரித்தார். பலிக்கிறதோ இப்போது?

“ஒரு தனிநபரின் குடும்பம் எப்படி தத்தளிக்கும் என்கிற பார்வை இன்று ஆளுவோரிடம் இருந்து போய்விட்டது” என்றார் அந்த மூத்த அரசியல்வாதி.

பல உதாரணங்களை கூறினார். சென்னை நகரில் பஸ் டிக்கெட்டுகள் பல காலத்துக்கு 7 பைசா, 10 பைசா, 25 பைசா என்று இருந்தது. அரசின் பஸ் போக்குவரத்து நஷ்டத்தில் ஓடுவதாக எதிர்க்கட்சிகள் அப்போது சட்டசபையில் குற்றம்சாட்டி கேலி செய்தன.

ஆர்.வெங்கட்ராமன் தொழில் போக்குவரத்து அமைச்சர் அன்று.

அவர் கூறிய பதிலை கவனியுங்கள்.

“அரசு போக்குவரத்து என்பது நஷ்டத்தில் ஓடவும் இல்லை. அது லாபம் சம்பாதிக்க நடத்தப்படுவதும் கிடையாது. அது அதன் குறிக்கோளும் இல்லை. மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிகள் பணத்தில், சாதாரண மக்கள் சௌகரியத்துக்கு ஏற்ப டிக்கெட் கட்டணம் இருக்கும். பஸ்கள் போன்ற சௌகரியங்களை மக்கள் பெறுவதற்குத்தான் வரிகளே போடப்படுகிறது. மாஸ்கோவில் இலவசமாக மக்கள் பஸ்களில் பயணிப்பது போல சென்னையில் பஸ் பயணம் இலவசமாக்கும் எண்ணம் உண்டு.”

இது எப்படி இருக்கு?

“மக்கள் நலனுக்கான சிந்தனை என்ன என்பது புரிகிறதா? இந்த சிந்தனை அரசியல் தலைவர்களிடம் இன்று இருக்கிறதா?” இது நம் அரசியல் நண்பர் எழுப்பிய கேள்வி.

பக்தவச்சலம் முதலமைச்சராக இருந்தபோது திமுகழக தலைவர் மதியழகன் ஒருநாள் சட்டமன்றத்தில், ஒரு பொட்டலத்தை கொண்டு வந்து பிரித்து ஒரு ‘இட்லி’யை எடுத்து தூக்கி காட்டினார். “இட்லி இளைவிட்டது. ஒரு இட்லியை 7 பைசாவிலிருந்து 10 பைசாவாக ஆக்கிவிட்டார்கள்” என்று மதியழகன் குமுறினார்.

முதல்வர் பக்தவச்சலம் முகம் சுளித்தாலும், இட்லியை வாங்கிப் பார்த்தார். சப்பையான இட்லி! உத்தரவு பறந்தது. ஓட்டல்களில் இட்லி எடைப்போடப்பட்டது. மீண்டும் இட்லி பெருத்தது. விலையும் ஏறவில்லை.

அதேபோல நீண்டகாலத்துக்கு ‘காபி’ 15 பைசாதான். ஓட்டல்காரர்கள் திடீரென 5 பைசா ஏற்றியபோது அதுபற்றி சட்டசபையில் கூச்சல், குழப்பம். மீண்டும் காபி விலை குறைந்தது. இப்போது இட்லி என்ன விலை? ஒரு பிரபல ஓட்டலில் இரண்டு இட்லி ஒரு வடை – சாம்பார் – 128 ரூபாய். ஓட்டல் ஏ கிளாஸ், பி கிளாஸ் என்று பிரிக்கப்பட்டிருக்கிறது. எல்லா ஓட்டல்களும் ஏ கிளாஸ்தான். பி கிளாஸ் – தள்ளுவண்டிகள்தான்.

“சட்டசபையில் தினசரி மக்களை பாதிக்கும் சாதாரண விஷயங்களை இன்று எம்.எல்.ஏ.க்கள் தொடுவதே இல்லை. காரணம் அவர்கள் பிரம்மாண்ட கார்களில் பவனி வருகிறார்கள். 5 நட்சத்திர ஓட்டல்களில்தான் அவர்கள் உணவு. ஒரு எம்.எல்.ஏ.விடம் எண்ணெய் விலை என்ன என்று கேட்டுப்பாருங்கள். தெரியாது அவருக்கு” என்றார் நண்பர்.

மக்களுக்காக ‘கோபுரம்’ என்ற தீப்பெட்டி, ‘சனோலா’ என்கிற சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை தமிழக அரசே தயாரித்தது உண்டு.

“தனியார் போட்டிக்கு ஈடுகொடுக்காமல் வேண்டுமென்றே தனியார் நலனுக்காக அவை இழுத்து மூடப்பட்டன. காமராஜ் முதல்வராக இருந்தபோது கோபுரம் தீப்பெட்டி ஏன் விற்கவில்லை என்று கேட்டு அதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூட்டத்தை நடத்தினார். அதிகாரிகளுக்கு காரணம் சொல்ல தெரியவில்லை. காமராஜரே காரணம் கண்டுபிடித்து கூறினார். ‘கோபுரம் தீக்குச்சிகள் குட்டையாக உள்ளன. நம் வீடுகளில் தாய்மார்கள் பற்ற வைத்த பிறகு தீக்குச்சிகளை அணைத்து மறுபயன்பாட்டுக்கு வைத்திருப்பார்கள். தூக்கி எறியமாட்டார்கள்’ என்று சொல்லி குச்சியை சற்று நீளமாக்கக் கூறினார். கோபுரம் விற்பனை கோபுரத்தில். ஆனால் சில வருடங்களில் தனியார் நலனுக்காக பின்னர் அது க்ளோஸ். அதிகாரிகள் கைவரிசை.”

“தனியாருக்கு – அரசு போல மக்கள் நல்வாழ்வு நோக்கமாக இருக்க ஏது வாய்ப்பு? விலைகள் ஏறுவதில் இந்த தனியார் ரகசியமும் உண்டு. வந்தே பாரத் ரயில் போன்றவை முதலில் ஏதோ வளர்ச்சி போல பளபளப்பு காட்டலாம். ஆனால் இந்தியா போன்ற ஜனத்தொகை மிக்க நாட்டில் ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் கைகொடுக்காத திட்டங்கள், வளமான எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்” முடித்தார் அவர்.

இந்தமுறை தக்காளி விலை உயர்வில் கூட ரகசியங்கள் உண்டு என்கிறார் அவர்.

தக்காளி விலை முன்பெல்லாம் விளைச்சல் அதிகமானால் கிலோ 10 ரூபாய் என்று குறையும் அல்லவா. இனி அதுபோல் குறையாது. கிலோ 40 ரூபாய் என்ற ஒரு நிரந்தர விலைக்கு வந்து நிற்கும்.

தக்காளி விலை உயர்வினால் விவசாயிக்கு லாபம் இல்லை. நிரந்தர விலையாலும் லாபம் கிடைக்காது. நிரந்தர விலையால் நடுவில் இருக்கும் தரகர்களுக்குத்தான் லாபம். தக்காளியின் இந்த ஆகாய விலை உயர்வின் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதான்.

விடை பெறும் முன்பு நம் நண்பரான அரசியல்வாதி ஒரு தக்காளியை கடனாக கேட்டார். பிறகு திரும்பித்தருவதாக

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...