No menu items!

நகைத்திருட்டு – கண்கலங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நகைத்திருட்டு – கண்கலங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகைகள் கொள்ளைப் போயிருப்பது பரபரப்பாகி இருக்கிறது.

பிப்ரவரி 27-ம் தேதி இது குறித்து தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

பாதுகாப்புக்காக லாக்கரி வைத்திருந்த பல லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடுப் போயிருக்கின்றன. பிப்ரவரி 10-ம் தேதிதான் நகைகள் திருடுப் போனது பற்றி எனக்கு தெரிய வந்தது. இந்த நகைத்திருட்டில் எனக்கு மூன்று பேர் மீது சந்தேகம் உள்ளது. அதில் ஒருவர் டிரைவர், மற்ற இருவரும் வீட்டில் வேலை செய்பவர்கள் என்று ஐஸ்வர்யா புகார் கொடுத்திருக்கிறார்.

2019-ல் நடந்த எனது தங்கை செளந்தர்யாவின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக இந்த நகைகளை அணிந்திருக்கிறார்.. திருமணம் முடிந்ததும் நகைகளை எல்லாம் லாக்கரில் பத்திரமாக வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா. அதன் பிறகு இந்த லாக்கர் மூன்று இடங்களுக்கு மாறி மாறி எடுத்து செல்லப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் வரை இந்த லாக்கர் செயிண்ட் மேரீஸ் சாலையில் இருக்கும் ஐஸ்வர்யாவின் ஃப்ளாட்டில் இருந்திருக்கிறது. பிறகு இங்கிருந்து தனுஷூடன் ஐஸ்வர்யா சேர்ந்து வசித்த சிஐடி நகரில் இருக்கும் வீட்டிற்கு இதே லாக்கர் கொண்டு செல்லப்பட்டுகிறது. பிறகு செப்டெம்பர் 2021-ல் இங்கிருந்து லாக்கர் மீண்டும் செயிண்ட் மேரீஸ் சாலையில் இருக்கும் ஃப்ளாட்டுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 9-ம் தேதி 2022 அன்று ரஜினி தற்போது வசித்து வரும் போயஸ் கார்டன் வீட்டிற்கு இந்த லாக்கரை எடுத்து செல்லப்பட்டிருக்கிறது.

இந்த லாக்கரின் சாவிகள், செயிண்ட் மேரீஸ் சாலையிலி இருக்கு ஃப்ளாட்டில் உள்ள ஐஸ்வர்யாவின் பர்சனல் ஸ்டீல் கப்போர்ட்டில் தான் வைக்கப்படுவது வழக்கமாம்.

கடந்த பிப்ரவரி 10-ம் தேதி லாக்கரை திறந்து பார்த்த போதுதான் விலையுயர்ந்த முக்கிய நகைகள் திருடுப் போயிருப்பது ஐஸ்வர்யாவுக்கு தெரிய வந்திருக்கிறது. இந்த நகைகளில் விலையுயர்ந்த நகைகள் ஏறக்குறைய 18 ஆண்டுகளாக அதாவது ஐஸ்வர்யா – தனுஷ் திருமணத்தின் போது வாங்கப்பட்டவை என்பதால் சென்டிமென்டலாக ஐஸ்வர்யா ரொம்பவே அப்செட்டாக இருக்கிறார்

வைரத்தோடுகள், அன்கட் டயமண்ட் டெம்பிள் ஜூவல்லரிகள், ஆண்டிக் கோல் ஜூவல்லரிகள், நவரத்தின நகைகள் உள்பட இன்னும் பல நகைகள் திருடுப் போயிருக்கிறது. இவற்றின் மதிப்பு சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் இருக்கலாம் என்கிறார்கள்.

#rajini, #ranjinkanth, #dhanush, #aishwaryarajini, #aishwaryadhanush, #uncutdiamond, #templejewellery, #antiquepieces, #antiquejewellery, #locker,


அஜித், விஜய்க்கு நோ சொன்ன நடிகை!

கோலிவுட்டின் லேட்டஸ்ட் கிசுகிசு இதுதான்.

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இரு நடிகர்கள் அஜித் & விஜய். இவர்களது படங்களில் நடிக்க வேண்டுமென்றால் உடனடியாக கால்ஷீட் கொடுக்க அநேகமாக எல்லா நடிகைகளுமே தயாராக இருக்கிறார்கள்.

ஆனால் ஒரு நடிகை இந்த இரண்டு கமர்ஷியல் ஹீரோக்களின் படங்களில் நடிக்க தேடிவந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாக கூறுகிறார்கள்.

அந்தளவிற்கு கெத்து காட்டியது வேறு யாருமல்ல. தனக்கு ஜோடியாக யார் நடித்தாலும் அதுபற்றி கவலைப்படாமல், கதாநாயகியை மையமாக கொண்ட, நடிப்பதற்கு வாய்ப்புள்ள படங்களில் மட்டுமே நடித்துவரும் சாய் பல்லவிதான்.

முதலில் சாய் பல்லவியை அஜித்தின் ‘துணிவு’ படத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க அணுகினார்களாம். கதையைக் கேட்ட சாய் பல்லவி ஒரே வரியில் ‘நோ’ சொல்லி அந்த வாய்ப்பை மறுத்திவிட்டாராம்.

அதேபோல் இரண்டு மாதங்களுக்கு முன்பு விஜயின் ’லியோ’ படத்தில் நடிக்க கேட்டிருக்கிறார்களாம். லியோ கதையையும் கேட்ட சாய் பல்லவி தனது பாணியில் நோ சொன்னதாகவும் சொல்கிறார்கள்.

இப்போது அந்த கதாபாத்திரத்தில்தான் த்ரிஷா நடித்து வருவதாகவும் பேச்சு அடிப்படுகிறது.

#leo, #thunivu, #ajith, #vija,y #thalapathy, #manjuwarrier, #trisha, #logeshkanagaraj, #hvinodh, #saipallavi, #gargi, #thalapathy67,


இந்தியன் 2 – மாஸ் காட்டும் ரயில் சண்டை

‘இந்தியன் 2’ படத்தை எப்படியாவது தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்ற நெருக்கடியுடன் படம்பிடிப்பை நடத்தி வருகிறார்களாம்.

இதனால் சமீபத்தில் சென்னையில் பரபரவென நடந்த ஷூட்டிங்கை முடித்திருக்கிறார்கள். இதற்கு அடுத்து தென்னாப்பிரிக்கா மற்றும் தாய்லாந்தில் ஷூட்டிங் நடக்க இருக்கிறது என்பதை வாவ் தமிழாவில் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தோம்.

இப்போது தென்னாப்ப்ரிக்காவில் ஆக்‌ஷன் காட்சி ஒன்றை எடுக்க திட்டமிட்டு இருப்பதாக படக்குழுவினர் கூறுகிறார்கள். இந்திய சினிமாவில் இதுவரையில் பார்த்திராத வகையில் இந்த ஆக்‌ஷன் காட்சி இருக்கும் என்று ’இந்தியன் 2’ குழுவில் பேச்சு அடிப்படுகிறது.. 14 நாட்கள் இந்த சண்டைக்காட்சியை ஷூட் செய்ய இருப்பதாகவும், இதற்கான ஆக்‌ஷன் காட்சிகளை ஹாலிவுட் ஆக்‌ஷன் கோரியக்ராஃபர்கள் வடிவமைக்க போவதாகவும் சொல்கிறார்கள்.

ஆக்‌ஷன், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸில் கமல் இறங்கி அடிக்கும் அட்ரனலின் ஆக்‌ஷன் சூட்டைக் கிளப்பும் என்கிறது படக்குழு.

#indian,2 #shankar, #kamal, #kamalhaasan, #kajalagarwal, #rahulpreetsingh, #southaftrica, #vikram,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...