No menu items!

இந்தியா நம்பும் தங்க மகன்கள்!

இந்தியா நம்பும் தங்க மகன்கள்!

ஆசிய விளையாட்டு போட்டிகளிலேயே ஜகார்த்தாவில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில்தான் இந்தியா அதிக பதக்கங்களை வென்றிருக்கிறது. அப்போட்டியில் இந்தியா 16 தங்கம், 23 வெள்ளி மற்றும் 31 வெண்கலம் என மொத்தமாக 70 பதக்கங்களை வென்றது.

ஜகார்த்தாவில் படைத்த சாதனையை முறியடிக்கும் ஆர்வத்துடன் இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பங்கேற்கிறது. இதற்காக இந்தியா அதிகம் நம்பியிருக்கும் முதல் 10 வீர்ர்கள் யாரென்று பார்ப்போம்…

நீரஜ் சோப்ரா (ஈட்டி எறியும் போட்டி);

கடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பெற்றது ஒரே தங்கப் பதக்கம்தான். அந்த பதக்கத்தை இந்தியாவுக்கு வென்று கொடுத்தவர் நீரஜ் சோப்ரா. இதே நீரஜ் சோப்ரா சர்வதேச அளவில் தங்கப் பதக்கங்களை கொய்ய ஆரம்பித்தது கடந்த ஆசிய விளையாட்டு போட்டியில்தான். அந்த வகையில் அவரது ஃபேவரைட் தளம் ஆசிய விளையாட்டு போட்டித்தான். உலக அளவில் நம்பர் ஒன் ஈட்டி எறியும் வீர்ராக இருக்கும் நீரஜ் சோப்ரா, சமீபத்தில் நடந்த போட்டி ஒன்றில் 89.67 மீட்டர் நீளத்துக்கு ஈட்டி எறிந்துள்ளார்.

அந்த ஆளவுக்கு ஈட்டி எறிந்த வீர்ர்கள் யாரும் இப்போதைக்கு ஆசிய நாடுகளில் இல்லை என்பதால் அவரிடம் இருந்து ஒரு தங்கப் பதக்கத்தை இந்தியா எதிர்பார்க்கிறது. அந்த பதக்கத்தை அவர் நிச்சயம் வென்று தருவார் என்று நம்புவோம்.

எச்.எஸ்.பிரணாய் (பேட்மிண்டன்)

கடந்த 12 மாதங்களாக பேட்மிண்டன் போட்டிகளில் பிரணாயின் காட்டில் மழை பெய்து வருகிறது. மலேசியன் மாஸ்டர்ஸ் போட்டியில் கடந்த மே மாதம் பட்டம் வென்ற பிரணாய், ஆஸ்திரேலியன் ஓபன் பேட்மிண்டனில் 2-வது இடத்தைப் பிடித்தார். கடந்த மாதம் டென்மார்க்கில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

தற்போதைக்கு உலக அளவில் பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ள அவர் மூலம் தங்கப் பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறது இந்தியா.

பஜ்ரங் பூனியா (மல்யுத்தம்)

கடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் மல்யுத்தம் மூலம் இந்தியாவுக்கு ஒரே ஒரு தங்கப் பதக்கம்தான் கிடைத்தது. அந்த தங்கப் பதக்கத்தை இந்தியாவுக்கு பெற்றுக்கொடுத்தவர் பஜ்ரங் பூனியா. பின்னர் அதே வேகத்தில் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு அவர் வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார். இடையில் மல்யுத்த சங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் கவனத்தைச் செலுத்திய பஜ்ரங் பூனியா, இப்போது ஆசிய விளையாட்டு போட்டியின் மூலம் மீண்டும் மல்யுத்த களத்துக்குள் நுழைகிறார்.

இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவில் மோதவுள்ள பஜ்ரங் பூனியா, இதற்காக கிர்கிஸ்தானில் சிறப்பு பயிற்சி எடுத்து வந்துள்ளார். இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் ஈரான், உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் வீர்ர்கள் பேரும் சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரக்ஞானந்தா, குகேஷ் (செஸ்)

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டியில் செஸ் விளையாட்டு மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே இந்த விளையாட்டில் இப்போதைக்கு நாம்தான் ராஜா என்பதால் நமக்குத்தான் தங்கம் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறது இந்தியா. இதில் இந்தியா அதிகம் நம்பும் வீர்ர் பிரக்ஞானந்தா.

உலகக் கோப்பைக்கான செஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை நூலிழையில் கோட்டை விட்ட பிரக்ஞானந்தா, இப்போது ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்துக்காக காய் நகர்த்தப் போகிறார். இப்போட்டியில் அவர் தங்கம் வெல்லாவிட்டால் அடுத்த சாய்ஸாக இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீர்ரான குகேஷ் அந்த தங்கத்தை தட்டிவருவார் என்று இந்தியா உறுதியாக நம்புகிறது.

சாத்விக் – சிராக் ஜோடி (பாட்மிண்டன்)

டென்னிஸில் ஒரு காலத்தில் பயஸ் – பூபதி ஜோடி எப்படி ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருந்த்தோ, அதற்கு சற்றும் குறையாமல் இப்போதைக்கு பாட்மிண்டனில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது சாத்விக் – சிராக் ஜோடி. இந்தா ஆண்டில் மட்டுமே இந்தோனேசிய ஓபன் மற்றும் கொரிய ஓபன் போட்டிகளில் இந்த ஜோடி பட்டம் வென்றுள்ளது.

அதே வேகத்தில் ஆசிய விளையாட்டு போட்டியிலும் இந்த ஜோடி பதக்கம் வெல்ல வாய்ப்பு இருக்கிறது.

தஜிந்தர்பால் சிங் தூர் (குண்டு எறியும் போட்டி)

கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் குண்டு எறியும் போட்டியில் தங்கம் வென்றவர் தஜிந்தர்பால் சிங் தூர். இந்த முரை இரண்டாவது தங்கத்துக்காக களம் இறங்குகிறார் தஜிந்தர் பால். சமீபத்தில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றது, இவர் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

இவர்களைத் தவிர கிரிக்கெட், ஹாக்கி போன்ற குழு போட்டிகளிலும் ஆண்களிடம் இருந்து தங்கப் பதக்கங்களை எதிர்பார்க்கிறது இந்தியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...