No menu items!

தாறுமாறான தமன்னா சம்பளம்!

தாறுமாறான தமன்னா சம்பளம்!

ஆவின் பால் டெலிவரிக்கு போகும் அந்த பால் லாரிக்குள் நீச்சலடித்து குளித்ததுப் போல் இருக்கும் மில்க்கி ப்யூட்டி தமன்னா இதுவரையில் கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்தது இல்லை.

கமர்ஷியல் படங்களில், அழகைக் காட்டும் கவர்ச்சியாக நடித்து கொண்டிருப்பதால், நயன்தாரா, அனுஷ்கா மாதிரி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கவேண்டும் என்ற ஆசை இருப்பதாக கொஞ்ச நாட்களாகவே சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.

இதைப் பார்த்து ஒரு ஹீரோயின் சப்ஜெட்டை சொல்ல, தமன்னாவை அணுகியிருக்கிறார்கள்.

ஆர்வத்துடன் அவர்களை வரச் சொன்ன தமன்னா, கதையைக் கேட்டு குஷியாகி இருக்கிறார். உடனே ஷூட்டிங் கிளம்பலாம் என்று ஓகே சொல்லிவிட்டாராம்.

இதனால் சம்பள பேச்சை எடுத்திருக்கிறார்கள். ’நல்ல கதை. நான் நிச்சயமாக நடிக்கிறேன். 3.5 கோடி கொடுங்கள் போதும்’ என்று சொல்ல, கதை சொல்ல போனவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாம்.

ஹீரோயின் சப்ஜெக்ட்களுக்கு இங்கே குறிப்பிட்ட மார்கெட் மட்டும்தான். கொஞ்சம் தவறினாலும் மொத்தமும் நஷ்டம்தான். தமன்னா இதுவரையில் இப்படியொரு படத்தில் நடித்ததும் இல்லை. அப்புறம் எப்படி இவ்வளவு சம்பளம் கொடுப்பது என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் யோசிக்கிறார்களாம்.


தாப்ஸி டயட்டீஷியனுக்கு  எவ்வளவு சம்பளம்?

வெள்ளாவியில் வைத்து வெளுத்தது போல் ஜொலிக்கும் அழகி தாப்ஸி, பார்ப்பதற்கு ரீஃபிள் பேனாவை போல எப்பொழுதும் மெல்லிசாகவே இருக்கிறார்.

காரணம் அந்தளவிற்கு தனது உணவில் டயட்டை பின்பற்றுகிறார்.

டயட்டை பின்பற்றுவது நல்ல விஷயம்தான், ஆனால் தன்னுடைய டயட்டீஷியனுக்கு அவர் மாதம் மாதம் கொடுக்கும் சம்பளம்தான் வாயைப்பிளக்க வைக்கிறது.

‘பணம் செலவு பண்றதுல எங்கப்பா ரொம்பவே கெடுபிடி. தேவையில்லாம செலவு பண்ண விடவே மாட்டார். ஒரு தடவை என் சின்ன வயசுல ஃபாதர்ஸ் டேவை கொண்டாடலாம்னு பத்து ரூபாய்க்கு ஒரு பேனா வாங்கிக் கொடுத்தேன். அதுக்கே அப்பா ‘ஏன் இப்படி பணத்தை வீண் பண்றேன்னு என்னை கண்டிச்சார். இப்படி அப்பாகிட்ட என்னோட டயட்டீஷியனுக்கு மாசம் ஒரு லட்சம் கொடுக்கிறேன்னு சொன்னா எப்படியிருக்கும் யோசிச்சுப் பாருங்க.

சினிமாவுல நடிகையாக இருக்கும்போது, ஒவ்வொரு படத்துக்கும் வேற வேற லுக்குல இருக்கணும். அதே நேரம் நம்ம உடம்பையும் பார்த்துக்கணும். அதனால டயட்டீஷியன் விஷயத்துல செலவு பண்றது இன்னிக்கு தவிர்க்கவே முடியாத விஷயம். அதனால வேற வழியே இல்லன்னு சொல்லிட்டு இருக்கேன்’ என்று சிரிக்கிறார் தாப்ஸி.

அப்படியென்றால் இந்த சோஷியல் மீடியாவில் ரீல்ஸ் ரீல்ஸாக போடுகிற டயட் டிப்ஸ் எல்லாமே சும்மாதானா  ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து டயட்டை பின்பற்றினால்தான் தாப்ஸி மாதிரி ஸ்லிம்மாக இருக்க முடியுமா என்று உங்களுக்கும் சந்தேகம் எழுந்தால் நீங்களும் அப்பாவிதான்.


பவன் கல்யாண் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு?

தெலுங்கில் ரசிகர்களிடையே பெரும் ஆதரவையும், எல்லோருடைய அன்பையும் பெற்றிருப்பவர் பவன் கல்யாண். தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி. ஆர்.ஆர்.ஆர். படப் புகழ் ராம் சரணின் சித்தப்பா.

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் இவரும் அடக்கம்.

மச்சிலிப்பட்டினத்தில் நடந்த தனது ஜனசேனா கட்சிக்கூட்டத்தில் பேசிய பவன் கல்யாண், ‘சினிமாவுல நடிக்கிறது மூலமா ஒரு நாளைக்கு நான் 2 கோடி சம்பாதிக்கிறேன். ஆனால் நான் அரசியலுக்கு வரக்காரணம், மக்களுக்கு சேவை செய்யணுங்கிற ஒரே காரணத்துக்காகதான்’ என்று வெளிப்படையாக பேசியதாக கூறுகிறார்கள்.

பொதுவாகவே பவன் கல்யாண் ஒரு படத்தில் நடிப்பதற்கு 30 முதல் 35 நாட்கள் கால்ஷீட் கொடுக்கிறார். 75 கோடி சம்பளம் வாங்குகிறார் என்கிறது டோலிவுட் வட்டாரம்.

கூட்டி கழித்துப் பார்த்தால் கணக்கு சரிதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...