No menu items!

இந்தியாவை ஜெயித்தால் இரவு விருந்து –பாகிஸ்தான் நடிகையின் பரிசு

இந்தியாவை ஜெயித்தால் இரவு விருந்து –பாகிஸ்தான் நடிகையின் பரிசு

உலகக் கோப்பை போட்டித் தொடரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதால் அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள். தங்கள் நாடு தோற்ற நிலையில், வங்கதேச அணியாவது இந்தியாவை ஜெயிக்க வேண்டும் என்பது அவர்களின் ஆசையாக இருக்கிறது.

இந்த சூழலில் பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகையான செஹர் ஷின்வாரி, வங்கதேச வீர்ர்களுக்கு ஒரு பரிசை அறிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி ஜெயித்தால், அவர்களுக்கு தான் விருந்து வைப்பதாக சொல்லியிருக்கிறார்.

இது தொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவிடம் நாங்கள் தோற்றதற்கு பழிவாங்கும் வகையில் இந்தியாவை வங்கதேச அணி வென்றால், நான் டாக்காவுக்கு சென்று அந்த அணியின் வீர்ர்களுக்கு வங்கதேசத்தின் ஸ்பெஷல் மீன்கறியுடன் இரவு விருந்து வைப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.     

ரோஹித் சர்மாவுக்கு அபராதம்

கிரிக்கெட்டில் ஆதிரடியாக ரன்களைக் குவித்தால் ஆட்ட நாயகன் விருது கிடைக்கும். ஆனால் அதே அதிரடியை சாலையில் காட்டினால் தண்டனைதான் கிடைக்கும். இதற்கு லேட்டஸ்ட் உதாரணம் ரோஹித் சர்மா.

இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, கிரிக்கெட் போட்டிகளில்  அதிரடியாக ஆடுவது மட்டுமின்றி சாலைகளில் வேகமாக கார் ஓட்டுவதிலும் கெட்டிக்காரர். இந்தியா – வங்கதேசம் இடையிலான போட்டிக்கு முன்பாக கடந்த புதன்கிழமையன்று மும்பையில் உள்ள தனது வீட்டுக்கு சென்றிருக்கிறார் ரோஹித் சர்மா. மதியம் இந்திய அணியின் பயிற்சி இருப்பதால் அதற்கு முன்பாக புனேவுக்கு திரும்ப திட்டமிட்டுள்ளார்.

அதற்காக சாலையில் வேகமாக கார் ஓட்டி வந்த அவரை போக்குவரத்து போலீஸார் வழிமறித்துள்ளனர். சாலையில் வேகமாக வாகனம் ஓட்டியது, சாலை விதிகளை மதிக்காதது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அவரிடம் இருந்து போக்குவரத்து போலீஸார் அபராதம் வசூலித்துள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்கெனவே இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த், வேகமாக கார் ஓட்டி விபத்தில் சிக்கிக்கொண்டார்.  இந்த விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடமுடியாமல் அவர் ஓய்வெடுத்து வருகிறார்.

ஷாஹின்ஷா அஃப்ரிடி அவுட்?

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோற்ற நிலையில், வரும் வெள்ளிக்கிழமையன்று ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது பாகிஸ்தான். இந்த தொடரின் அரை இறுதிக்கு பாகிஸ்தான் முன்னேற, இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டியது மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது. ஆனால் அந்த போட்டிக்கு முன்பாகவே பாகிஸ்தான் அணி புதிய சிக்கலை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி, அப்துலா ஷபீக், சமான் கான், சவுத் ஷகீல் ஆகியோர்  வைரஸ் ஜுரத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதே அந்த சிக்கல்.

இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷாஹீன் அஃப்ரிடி ஆடமாட்டார் என்று கூடறப்படுகிறது.  அவரைப் போலவே அப்துல்லா ஷபீக், சமான் கான் ஆகியோரும் ஆடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. ஷாஹின்ஷா அஃப்ரிடி ஆடாத பட்சத்தில், அவருக்கு பதிலாக முகமத் வாசிம் ஜூனியரை ஆடவைக்க பாகிஸ்தான் அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...