No menu items!

எனக்கு #DanceShows பிடிக்காது – சாய் பல்லவி

எனக்கு #DanceShows பிடிக்காது – சாய் பல்லவி

இன்றைய நிலவரப்படி, கோலிவுட்டில் வைத்த கண்ணை ஒரு மைக்ரோ செகண்ட் கூட அகற்றாமல், ஒரு நேனோ செகண்ட் கூட இமைக்காமல் பார்க்க வைக்கும் அளவுக்கு ஆட்டத்தில் வசீகரிப்பவர் சாய் பல்லவி.

இந்த ரவுடி பேபியின் டான்ஸில் அப்படியொரு நளினம் இருக்கும். ஆர்வம் இருக்கும். ஈடுபாடு இருக்கும்.

இவர் சமீபத்தில் பொங்கி எழுந்த விஷயம் நடனம் பற்றியது. ‘இப்பெல்லாம் நிறைய டான்ஸ் ஷோக்கள் இருக்கு. ஆனால் இந்த டான்ஸ் ஷோக்கள்ல உண்மையான திறமைக்கு அங்கீகாரம் இல்ல. அருமையா ஆடுறவங்களைக் கண்டுக்கொள்வது இல்ல. யார்கிட்ட பணம் இருக்கோ, அதிகாரம் இருக்கோ, முடிவை மாத்துற ஸ்டேட்டஸ் இருக்கோ அவங்கதான் போட்டியில ஜெயிக்கிறாங்க. பரிசுகளை வாங்குறாங்க. இல்லன்னா பிரபலமானவங்க பசங்கதான் ஜெயிக்கிறாங்க.

இதனால் டான்ஸ் ஷோக்கள் மேல எனக்கு பெரிய விருப்பம் இல்ல. நம்பிக்கையும் இல்ல. உண்மையைச் சொல்லணும்னா டான்ஸ் ஷோக்கள் பிடிக்காது.’’ என்று பட்டாசு போல் படபடத்திருக்கிறார் சாய் பல்லவி.


Thala யா Thalapathy யா – யார் பக்கம் உதயநிதி?

ஏறக்குறைய எட்டு வருடங்களுக்கு முந்தைய வரலாறு மீண்டும் தமிழ் சினிமாவில் நடக்கவிருக்கிறது.

2014 பொங்கலுக்கு விஜயின் ‘ஜில்லா’ படமும், அஜித்தின் ‘வீரம்’ படமும் பாக்ஸ் ஆபீஸில் நேரடியாக மோதின. அதற்கு பிறகு நேரடிப் போட்டி என்பது இல்லாமலே போயிருந்தது.

இந்தப் பொங்கலுக்கு மீண்டும் தல தளபதியின் படங்கள் நேரடியாக மோதுவதால் எதிர்பார்பு எகிற ஆரம்பித்திருக்கிறது.

இருவருடைய படங்களுக்கும் அதிகாலை காட்சிகளை திரையிட அரசின் அனுமதி கிடைத்தாலும் யாருக்கு அதிக ஸ்கிரீன்கள் கிடைக்கும் என்ற கேள்வி அவர்களுடைய ரசிகர்கள் மனதில் இருந்து கொண்ட வந்தது.

இப்பொழுது அஜித்தின் ‘Thunivu’ படத்திற்கான விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் ஃப்லிம்ஸ் அதிகாரப்பூர்வமாக வாங்கியிருக்கிறது.

இதனால் ‘துணிவு’ படத்திற்குதான் ‘Varisu’ படத்தை விட அதிக எண்ணிக்கையிலான ஸ்கிரீன்கள் கிடைக்கும். இதனால் கலெக்‌ஷன் ரேஸில் ‘துணிவு’தான் டாப் கியரில் பறக்கும் என அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

ஆனால் உதயநிதி ஸ்டாலின், ‘துணிவு படத்திற்கு மட்டும் அதிக ஸ்கிரீன்களை ஒதுக்க முடியாது. இந்த இரண்டு படங்களுக்கும் சரிசமமாகதான் ஸ்கிரீன்களை பகிர்ந்துகொள்ள வேண்டும்’’ என்று சொல்லியிருக்கிறார்.

இதனால் விஜய் ரசிகர்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.

ஆனாலும் ரேஸில் முந்தப் போவது யார் என்பது சமூக ஊடகங்களுக்கான #viralcontent ஆக இருக்கப் போவது நிச்சயம்.


மீண்டும் காதல் வலையில் Vishal

முதலில் விஷாலுக்கு வரலஷ்மி சரத்குமாருடன் காதல் என்ற பேச்சு அடிப்பட்டது.

இருவரும் லிவ்விங் டுகெதர் ஆக இருக்கிறார்கள் என்றார்கள். அடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்றும் கிசுகிசுவாக கூறினார்கள்.

ஆனால் சட்டென்று இருவரும் ‘குட் பை’யோடு விலகி கொண்டார்கள்.

அடுத்து ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் விஷால் நெருக்கமாக இருக்கிறார் என்றும் சொன்னார்கள். இருவரும் சீக்கிரமே திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்றும் சொன்னார்கள். ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் கொஞ்சம் அப்படியே நடந்தது.

அந்தப் பெண்ணின் பெயர் அனிஷா அல்லா ரெட்டி. இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பிறகு என்ன நடந்தது என்பது இதுவரையில் தெரியவில்லை, ஆனால் ‘கலக்கி கேன்சல்’ என்று சொல்வது போல சிம்பிளாக ’எங்க என்கேஜ்மெண்ட் கேன்சல்’ என்று இருவரும் ‘குட் பை’யோடு பிரிந்து போனார்கள்.

இப்போது மீண்டும், விஷாலுக்கு காதல் என்கிறார்கள்.

இந்த முறை விஷால் சூசமாக இதை ஒப்புக்கொண்டிருக்கிறார். ‘ஆமா எனக்கு ஒரு பெண்ணுடன் சிரீயஸான ரிலேஷன்ஷிப் இருக்கு. எனக்கு இந்த அரேஜ்ஜிட் மேரேஜில் விருப்பம் இல்ல. என் மனசுக்குப் பிடிச்ச பொண்ணு கூட வாழ்க்கையைக் கடக்க விரும்புறேன். கூடிய சீக்கிரமே அவங்களைப் பத்தி சொல்றேன்’ என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...