வடிவேலு, விவேக், சந்தானம் வழியில் இப்போது யோகி பாபுவும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
இவர் நடித்த ‘மண்டேலா’ படம் விமர்சனரீதியாக நல்லப் பெயரை வாங்கவே இப்போது யோகி பாபுவின் கைவசம் நாலைந்து படங்கள்.
காமெடியனாக நடிக்கும் லட்சங்களில் சம்பளம் வாங்கிய இவர், இப்பொழுது ஹீரோவாக நடிக்க கோடிகளில் சம்பளம் கேட்கிறாராம்.
சமீபத்தில் கமிட்டான படத்தில் நடிப்பதற்கு ஒண்ணேகால் கோடி சம்பளமாக வாங்கியிருக்கிறாராம்.
கோடியில் சம்பளம் வாங்கினாலும் கால்ஷீட் விஷயத்தில் ரொம்பவே கறாராக இருக்கிறாராம்.
ஒரு படத்திற்கு 40 நாட்கள்தான் கால்ஷீட் கொடுக்கிறாராம். அதற்கு மேலும் நாட்கள் தேவைப்பட்டால் சம்பளத்தில் கொஞ்சம் ஏற்றினால் ஓகே சொல்கிறாராம்.
சமந்தாவின் 15 கோடி ரூபாய் ஃப்ளாட்!
மையோசிடிஸ் என்னும் ஆட்டோஇம்ப்யூன் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்.
உடல்நலம் தேறியதால், மளமளவென தான் ஒப்புக்கொண்ட வெப் சீரிஸ் மற்றும் படங்களின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.
அதில் முக்கியமான ஒன்று ‘சிடாடல்’ வெப் சிரீஸ். வருண் தவானுடன் இணைந்து நடிக்கும் இந்த வெப்சிரீஸின் ஷூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது.
ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு அடிக்கடி ஃப்ளைட் பிடித்து பறக்க முடியாததால், மும்பையில் தற்காலிகமாக தங்கியிருந்து நடிக்க முடிவு செய்திருக்கிறாராம்.
இதனால் மும்பையில் சொந்தமாக ஒரு ப்ளாட்டை வாங்கியிருக்கிறார் என்கிறார்கள். 3 பெட்ரூம்கள் கொண்ட இந்த ஆடம்பர ஃப்ளாட்டின் விலை 15 கோடியாம்.
கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் பாலிவுட்டில் நடிக்க வேண்டுமென்பதற்காக ’ரஞ்சிதமே’ புகழ் ராஷ்மிகா மந்தானாவும் மும்பையில் ஒரு ஆடம்பர ஃப்ளாட்டை வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலை – 15 மடங்கு எகிறிய பட்ஜெட்!
வெற்றிமாறன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் படம்.
சூரி இதில் குமரேசன் என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடிப்பதால், சூரியை வைத்து வெற்றிமாறன் என்ன கதையை எடுத்திருப்பார் என தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட யூகங்கள், கேள்விகள் எழுந்திருக்கின்றன.
இப்படத்தில் இப்பொழுது விஜய் சேதுபதியும் இணைந்திருக்கிறார். இதனால் ‘விடுதலை’ படம் அதிகம் பேசப்படுகிற படங்களில் ஒன்றாகி இருக்கிறது.
இந்தப் படத்தில் சூரி கதாபாத்திரத்திற்கு இணையான ஒரு பவர்ஃபுல்லான கதாபாத்திரம் ‘வாத்தியார்’. அதனால் அந்த கேரக்டரில் யாரை நடிக்க வைப்பது என்று வெற்றிமாறன் யோசித்தபடி, இயக்குநர் அமீரிடம் கேட்க, விஜய் சேதுபதி பெயர் உறுதியானது.
‘வெறும் 8 நாட்கள்தான் ஷூட்டிங் என்பதால் விஜய் சேதுபதியும் உடனடியாக கமிட்டானார்.
ஆனால் விஜய் சேதுபதி சம்பந்தபட்ட காட்சிகளை எடுக்க 60 நாட்கள் பிடித்திருக்கிறது. ஆனாலும் இன்னும் ஷூட்டிங் முடியவில்லை.
படம் எடுக்க எடுக்க, டீடெய்லிங்கில் அதிக நேரம் பிடிப்பதால்தான் இப்படி ஷூட்டிங் நாட்கள் இழுத்துகொண்டே போவதாக விடுதலை படக்குழுவினர் கூறுகின்றனர்.
மேலும் படத்தின் ஃபுட்டேஜ் அதிகமிருப்பதால் விடுதலை இரண்டுப் பாகங்களாக வெளிவர இருப்பதாகவும் தெரிகிறது.
முதல் பாகத்தில் சூரி அதிக காட்சிகளிலும், இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியும் அதிக காட்சிகளில் இருப்பார்கள் என்று பேச்சு அடிப்படுகிறது.