No menu items!

டைரக்டர் ஆன கீர்த்தி சுரேஷின் அக்கா!

டைரக்டர் ஆன கீர்த்தி சுரேஷின் அக்கா!

கீர்த்தி சுரேஷூக்கு ஒரு அக்கா இருக்கிறார். அவர் பெயர் ரேவதி சுரேஷ்.

இவர்களது அப்பா அம்மாவான மோகன் – மேனகா என இருவருமே சினிமாவை சேர்ந்தவர்கள். இதனாலேயே அவர்களது இரண்டு மகள்களுக்கும் சிறு வயது முதலிருந்தே சினிமா மீது ஆர்வம் அதிகமிருந்திருக்கிறது.

கீர்த்தி சுரேஷூக்கு வெள்ளித்திரையில் மகா நடிகையாக வேண்டுமென்ற ஆசை. ஆனால் அவரது அக்கா ரேவதிக்கு திரைக்குப் பின்னால் இயக்குநராக வேண்டுமென்ற ஆசை.

இதனால் ரேவதி சுரேஷ் சில வருடங்களாக மலையாள இயக்குநர் ப்ரியதர்ஷனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி தொழிலைக் கற்றுகொண்டு வந்தார்.

நீ கற்றுக்கொண்டது போதும். களத்தில் இறங்கு என குருநாதர் ப்ரியதர்ஷன் சொன்னதால், இப்பொழுது ரேவதி சுரேஷ் ஒரு குறும் படம் ஒன்றை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் பெயர் ‘தேங்க் யூ’.

முதல் முயற்சி என்பதால் இந்த குறும்படத்தை ரேவதியின் அப்பா சுரேஷூம், அவரது கணவர் நிதின் மோகனும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள்.

அக்கா ரேவதியின் குறும்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து, ‘அக்கா ஒரு இயக்குநராக அறிமுகமாவதை பார்க்கும் போது சூப்பர் ஹேப்பியாக இருக்கிறது. அக்காவே உனக்கு பேரன்பும், அணைப்பும்’ என்று வாழ்த்து சொல்லி மகிழ்ந்திருக்கிறார் கீர்த்திசுரேஷ்.


விஜய் – வெங்கட் பிரபு படம் அறிவிப்பு எப்போது?

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகிவரும் ’லியோ’ பட த்தின் ஷூட்டிங் இன்னும் முடிவடையவில்லை.

ஆனாலும் விஜய் தனது அடுத்தப்படம் குறித்த முடிவை எடுத்திருக்கிறார்.

விஜயின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் மீண்டும் யுவன் ஷங்கர் ராஜா விஜய் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது.

விஜய்-68 என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படம் எப்போது தொடங்கும், யார் யார் நடிக்கிறார்கள் என்ற விவரங்கள் எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. இந்நிலையில் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி விஜய்-65 பட அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


விஜயை வேற லெவலுக்கு கொண்டு போவேன் – மிஷ்கின்!

சமீபகாலமாகவே விஜயை ரொம்பவே பாராட்டிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.

மிஷ்கின், எங்கு மேடை ஏறினாலும், யாருக்கு பேட்டி கொடுத்தாலும் விஜயைப் பற்றி ஏழெட்டு வார்த்தைகளாவது சொல்ல மறப்பதில்லை.

இந்நிலையில், ‘விஜயை ஒரேயொரு ஃபோன்காலில் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தால் போதும். ஒரேயொரு ஃபோன்கால்தான். அவரை வைத்து இதுவரை இல்லாத வகையில் ஒரு அசத்தலான, சுவாரஸ்யமான பான் – இந்தியா படத்தை எடுத்துவிடுவேன். அந்தப்படம் விஜயை மட்டுமில்லாமல் அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடும்.

அதேமாதிரி அந்தப் படத்தை எடுப்பது என்னுடைய ஆத்மார்த்தமான படைப்பு நியாயமானதாக இருக்கும். விஜயை அடுத்த லெவலுக்கு கொண்டுசெல்லும் படமாக இருக்கும் என்பது நிச்சயம். ஆனால் இது எப்போது நடக்கும் என தெரியவில்லை. இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கலாம் என்று தோன்றுகிறது’’ என்று விஜயின் கால்ஷீட்டை கேட்டு இப்பொழுதே ஒரு துண்டைப் போட்டு வைத்திருக்கிறார் மிஷ்கின்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...